கீதா தத் (Geeta Dutt) என்ற கீதா கோஷ் ராய் சௌத்ரி (23 நவம்பர் 1930 – 20 சூலை 1972)[1]) வங்க மொழி மற்றும் இந்தி மொழிகளில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகியாவார். இந்தியப் பிரிப்புக்கு முன்னாலிருந்த பரித்பூரில் பிறந்துள்ளார். இவர் இந்தி திரைப்படங்களில் முக்கியத்துவம் பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். பெங்காலி மொழித் திரைப்படங்களிலும், திரையிசையில்லாப் பாடல்களையும் பாடியுள்ளார்.

கீதா தத்
பிறப்புகீதா கோஷ் ராய் சௌத்ரி
(1930-11-23)23 நவம்பர் 1930
பரித்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது வங்காளதேசம்)
இறப்பு20 சூலை 1972(1972-07-20) (அகவை 41)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
கல்லீரல் இழைநார் வளர்ச்சி
பணிபின்னணி பாடகர், பாரம்பரிய கலைஞர், நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1946–1971
வாழ்க்கைத்
துணை
குரு தத் (தி. 1953⁠–⁠1964)

(அவரது மரணம் வரை )

ஆரம்ப வாழ்க்கை தொகு

கீதா கோஷ் ராய் சௌத்ரி, வங்காள தேசத்திலுள்ள ஷரியத்பூர் மாவட்டத்திலுள்ள கோசைர்காட் உப்சில்லா என்ற இடத்திலுள்ள இடில்பூர் கிராமத்தின் ஒரு ஜமீந்தார் குடும்பத்தின் 10 குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். இது பிரித்தானிய இந்தியாவின் பரித்பூர் மாவட்டத்தில் இருந்தது. பின்னர் 1940களில் தங்களின் நிலம் மற்றும் சொத்துகளை விட்டு விட்டு இவர்களது குடும்பம் கொல்கத்தா மற்றும் அசாம் போன்ற பகுதிகளுக்கு சென்றது. 1942-ல் இவரது பெற்றோர்கள் மும்பையிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்தனர். கீதா தனது 12வது வயது வரை பெங்காலி உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார்.[1]

பாடகியாக தொகு

 
2016 இவரது நினைவாக அஞ்சல் தலை

கே. அனுமான் பிரசாத் கீதாவை தனது ஆதரவின் கீழ் அழைத்துச் சென்று பாடுவதற்கு பயிற்சியளித்தார். பின்னர் திரைப்படங்களில் பாடுவதற்கு இவரைத் தயார் படுத்தினார். 1946 ஆம் ஆண்டில், "பக்த பிரஹ்லாத்" என்ற புராணப் படத்தின் பாடலை பாட முதல் வாய்ப்பைப் பெற்றார். அதில் பிரசாத் இசை இயக்குநராக இருந்தார். இரண்டு பாடல்களில் இரண்டு வரிகளை பாடிவதற்கான வாய்ப்பை வழங்கினார். அந்த நேரத்தில் இவருக்கு வயது பதினாறு மட்டுமே.

ஹனுமான் பிரசாத்தின் பாடல்களில் .

  • நைநான் கி பியாலி சே ஹோத்தா கி மித்ரா - ரசிலி என்ற படம்
  • "நேகா லக்கே முக் மோத் கயா" - ரசிலி என்ற படம்
  • ஆஜா ரி நிந்தியா ஆஜா - பால் கோஷுடன் - நை மா என்ற படத்தில்

போன்ற பிரபல பாடல்களை பாடியுள்ளார்

குடும்ப வாழ்க்கை தொகு

"பாஸி" என்ற படத்தின் பாடலின் ஒலிப்பதிவின் போது இளமையான மற்றும் எதிர்கால இயக்குனருமான குரு தத்தைச் சந்தித்தார். இவர்களது காதல் 26 மே 1953 அன்று அவர்களின் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்: தருண் (1954-1985), அருண் (1956-2014) மற்றும் நினா (1964). இவரும் சுந்தின் தாஸ்குப்தா மற்றும் அனல் சாட்டர்ஜி போன்ற குறிப்பிடத்தக்க இசை இயக்குநர்களின் இசைக்கு பாடியுள்ளார். கீதா தத் பாடல்களுடன் 1957 ஆம் ஆண்டில், குரு தத் "கௌரி" படத்தைத் தொடங்கினார். இது அகண்ட திரையில் வெளிவந்த இந்தியாவின் முதல் திரைப்படமாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு சில நாட்களிலேயே முடிந்தது. அதன் பிறகு, குரு தத்திற்கு வஹீதா ரஹ்மானுடன் தொடர்பு ஏற்பட்டது, இதனால் கீதா குடிக்க ஆரம்பித்தார். இது அவர்களது திரை வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையைப் பாதித்தது.

1958இல் , எஸ். டி. பர்மன் 1958 இல், லதா மங்கேஷ்கருடன் இணைத்து கீதாவை பிரதான பாடகராக்க பணியாற்ற முயற்சித்தார். அவர் ஆஷா போஸ்லே போல கீதாவை ஒப்பீட்டளவில் உணர்ந்தார். இருப்பினும், கீதாவின் தனிப்பட்ட பிரச்சனைகளினால், போதுமான அளவு பயிற்சி மேற்கொள்ளவில்லை. கீதா பர்மனின் எண்ணங்களுக்கு ஈடு கொடுக்கத் தவறிவிட்டார். பின்னர், பர்மன் ஓ. பி. நய்யார் மற்றும் ஆஷா போஸ்லேவுடன் பணி செய்யத் தொடங்கினார், மேலும் இவர் மீண்டும் ஒரு பாடகியாக ஆவதற்கு பர்மன் பெருமளவு உதவினார். 1964 ஆம் ஆண்டில், குரு தத் மதுபானம் மற்றும் தூக்க மாத்திரைகள் அதிகப்படியாக உட்கொண்டு இறந்தார். ( இதற்கு முன் தொடர்ந்து இரண்டு முறை மேற்கொண்ட முயற்சிகளினால் அவரது மரணம் பரவலாக ஒரு தற்கொலை என கருதப்பட்டது) [2]) கீதா பின்னர் ஒரு தீவிரமான உளப் பிறழ்ச்சிசிக்கு ஆளானாதில்லாமல், நிதி பிரச்சினையிலும் சிக்கினார். தனது பாடல் வாழ்க்கையை மீண்டும் தொடங்க முயற்சித்தார். "பதுரு பரான்" (1967) பெங்காலி மொழித் திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். "அனுபவ்" என்ற படத்தில் இவரது பாடல் பிரமிக்கத்தக்க வகையில் அனைவரையும் கவர்ந்தது. "கனு ராய்" என்பது இவரது கடைசி இசையாகும்.

இறப்பு தொகு

அதிகப்படியான மதுவை குடிப்பதால் ஏற்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோயால் ஜூலை 20 அன்று மும்பையில் காலமானார்.

குறிப்பிடத்தக்க பாடல்கள் தொகு

இந்தித் திரைப்படங்களில் 1200 பாடல்களுக்கு மேல் இவர் பாடியிருக்கக் கூடும். கூடுதலாக, மராத்தி, பெங்காலி, மைதிலி, போஜ்பூரி மற்றும் பஞ்சாபி உட்பட பல இந்திய பிராந்திய மொழிகளில் பாடியுள்ளார். நேபாளி படமான மைட்டிகார் படத்தின் பாடலில் பாடியுள்ளார்.[3] எஸ். டி. பர்மன் ,ஓ. பி. நய்யார், ஹேமந்த் குமார், மதன் மோஹன் இசையமைப்பிலும் மற்றும் ஒரு சில பெங்காலி பாடல்களையும் பாடியுள்ளார்.[4][5][6][7][8]

அரசு அங்கீகாரம் தொகு

 
2013இல் கீதா தத்தின் அஞ்சல் வில்லை

இந்திய அஞ்சல் துறை 2013 மற்றும் 2016 இல் கீதா தத்தின் நினைவாக அஞ்சல் வில்லைகளை வெளியிட்டது.

மேற்கோள்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Geeta Dutt
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_தத்&oldid=3713460" இருந்து மீள்விக்கப்பட்டது