கீது மோகன்தாஸ்

இந்திய நடிகை

காயத்ரி தாஸ் (பிறப்பு 8 சூன் 1981) தொழில்ரீதியாக கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய முன்னாள் நடிகை மற்றும் இயக்குநர் ஆவார். 2013 ஆம் ஆண்டில், இவர் சமூக அரசியல் திரைப்படமான லையர்ஸ் டைஸ் என்ற படத்தை இயக்கினார். இது இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றது. இது சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, [1] மேலும் அமெரிக்காவில் 87 வது அகாதமி விருதுகளுக்காக (ஆஸ்கார் விருதுகள்) இந்தியாவின் சார்பில் போட்டிக்கு இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பபட்டது. ஆனால் படம் பட்டியலிடப்படவில்லை அல்லது பரிந்துரைக்கப்படவில்லை. [2]

கீது மோகன்தாஸ்
பிறப்புகாயத்ரி தாஸ்
8 சூன் 1981 (1981-06-08) (அகவை 43)
கொச்சி, கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்கீது
பணி
 • Actress
 • film director
செயற்பாட்டுக்
காலம்
1986–தற்போது
வாழ்க்கைத்
துணை
ராஜீவ் ரவி (தி. 2009)
பிள்ளைகள்1
விருதுகள்
 • கேரள அரசு திரைப்பட விருதுகள், சிறந்த நடிகை, 2004
 • பிலிம்பேர் விருதுகள், சிறந்த நடிகை, 2004
 • சன்டான்ஸ் திரைப்பட விழா, குலோபல் பிலிம் மேக்கர் விருது, 2016

தொழில்

தொகு

நடிகையாக

தொகு

கீதுவின் உண்மையான பெயர் காயத்ரி தாஸ். கீது என்று அவரது குடும்பத்தினரால் செல்லமாக அழைக்கப்படும் கீது, 1986 ஆம் ஆண்டு மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த அவரது நான்காவது படமான ஒண்ணு முதல் பூஜ்யம் வரே என்ற படத்தில் நடித்தபோது அந்தச் செல்லப் பெயரே இவரது திரைப் பெயராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கீதுவுக்கு அப்போது ஐந்து வயது, தந்தையற்ற சிறுமி அநாமதேய தொலைபேசி அழைப்பாளரில் தந்தையைக் கண்டுபிடிக்க விரும்பும் குழந்தையாக நடித்து மலையாள திரையுலகினரின் இதயங்களைக் கவர்ந்தார். [3] பேபி சாலினி முதன்மைப் பாத்திரத்தில் நடித்த ஃபாசிலின் எண்டே மாமாட்டிகுட்டியம்மாக்கு (மலையாளம்) படத்தின் தமிழ் மறு ஆக்கமான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் இவர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். வளர்ந்த பிறகு கீது நடித்த முதல் படம் மோகன்லால் நாயகனாக நடித்த லைஃப் இஸ் பியூட்டிபுல் படம் ஆகும். இவர் தென்காசி பட்டணம், வால்கண்ணடி, நாம்ல் தம்மில் போன்ற பல மலையாள படங்களில் நடித்தார். 2004 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதை வென்ற டாம் ஜார்ஜ் கோலத்தின் தயாரிப்பில், ஷியாமபிரசாத் இயக்கிய அகலே படம் இவரது தொழில் வாழ்க்கையின் உச்சம் ஆகும். அகலே படத்தில் ரோஜாவாக நடித்ததற்காக கீது சிறந்த நடிகைக்கான (மலையாளம்) பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

இயக்குநராக

தொகு

கீது மோகன்தாஸ் 2009 ஆம் ஆண்டு அன்பிளக்டு என்ற தனது திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இதில் இவர் இயக்குநராக அறிமுகமான முதல் குறும்படமான கேட்குநுண்டோ ஆர் யு லிசனிங் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, அதன்பின் சிறந்த குறும்படத்திற்கான மூன்று சர்வதேச விருதுகளையும், இந்தியாவில் தேசிய திரைப்பட விருதையும் பெற்றது. இப்படம் 2014 முதல் 12ஆம் வகுப்பு கேரள மாநில பாடத்திட்டத்தில் ஒரு அத்தியாயமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இவரது முதல் முழூ நீளத் திரைப்படமான லையர்ஸ் டைஸ் (திரைப்படம்) எழுதாக்கம் மற்றும் திட்ட மேம்பாட்டிற்காக ஹூபர்ட் பால்ஸ் நிதியைப் பெற்றது. மேலும் 2014 இல் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் உலக நாடகப் படப் போட்டிக்கு இந்தத் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. லையர்ஸ் டைஸ் (திரைப்படம்) உலகம் முழுவதும் ஆறு முக்கிய சர்வதேச விருதுகளையும், இந்தியாவில் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. 87வது அகாதமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டது இதுவாகும். [4]

இவரது இரண்டாவது திரைப்படம் மூத்தோன் ஆகும். மேலும் கீது 2016 இல் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் குளோபல் ஃபிலிம் மேக்கர் விருதையும் பெற்றார். மூத்தோன் 2019 இல் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் 2019 எம்.ஏஎம்.ஐ திரைப்பட விழாவில் தொடக்கப் படமாக திரையிடப்பட்டது. [5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் 1981 சூன் 8 அன்று கொச்சியில் மோகன்தாஸ், லதா இணைநருக்கு பிறந்தார். இவருக்கு பெற்றோர் காயத்ரி தாஸ் என்று பெயரிட்டனர். இவர் இந்தியா, மலேசியா, கனடாவில் படித்தவர். இவரது சகோதரர், டாக்டர் அர்ஜுன் தாஸ், சிறுநீரக மருத்துவராக, அமெரிக்காவில் வசிக்கிறார். [6] இவர் 2009 நவம்பர் 14 அன்று, ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியை மணந்தார். [7] கேரளத்தின் கொச்சியில் திருமணம் நடந்தது. இணையருக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
 1. "Nawazuddin's Liar's Dice in Sundance Film Festival". Starblockbuster. பார்க்கப்பட்ட நாள் 17 April 2014.
 2. Gitanjali Roy (23 September 2014). "India will send Hindi-language road film Liar's Dice to the Oscars next year, the Film Federation of India (FFI) announced today". பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
 3. Shobha Warrier (11 February 2003). "Geetu Mohandas is Damayanthi". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 13 April 2009.
 4. Liar's Dice wins Special Jury award at Sofia International Film Festival பரணிடப்பட்டது 21 மார்ச்சு 2014 at the வந்தவழி இயந்திரம் Retrieved 6 April 2014.
 5. "Moothon, Geetu Mohandas' Malayalam action thriller, will open 21st edition of MAMI Mumbai Film Festival". 13 August 2019..She will going to direct Yash's next movie names Toxic.
 6. http://cinidiary.com/people.php?pigsection=Actor&picata=2&no_of_displayed_rows=8&no_of_rows_page=10&sletter= பரணிடப்பட்டது 5 மே 2015 at the வந்தவழி இயந்திரம் Retrieved 5 May 2015.
 7. "ഗീതു മോഹന്‍ദാസ്‌ വിവാഹിതയായി" Retrieved 18 April 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீது_மோகன்தாஸ்&oldid=3896294" இலிருந்து மீள்விக்கப்பட்டது