கீழக்கரையில் இஸ்லாம்

கீழக்கரை முஸ்லிம்கள் ( ஆங்கில மொழி: Moors of Kilakarai ) ஒரு தமிழ் முஸ்லீம் சமூகமாகும். இவர்கள் கீழக்கரையில் மிகப்பெரிய இனக்குழுவாக உள்ளனர், நகரின் மொத்த மக்கட்தொகையில் 80% இவர்கள் ஆகும். கீழக்கரை முஸ்ஸீம்கள் மரக்காயர்கள். அவர்கள் முக்கியமாக இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், இவர்கள் 8 முதல் 15 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கீழக்கரையில் குடியேறிய அரேபியா மற்றும் யேமனில் இருந்து வந்த அரபு வர்த்தகர்களின் வம்சாவளியினர் ஆவர்.[சான்று தேவை] இவர்கள் முதன்மையாக கடலோர வர்த்தகம் மற்றும் விவசாய சமூகங்களாக வாழ்ந்து, இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து, பல தெற்காசிய பழக்கவழக்கங்களை பின்பற்றினர். இலங்கையில் போர்த்துகீசியம் குடியேற்றம் நிகழ்ந்த காலகட்டத்தில் , இலங்கைச் சோனகர் களில் சிறிய எண்ணிக்கை யிலானவர்கள் போர்த்துக்கேயரின் துன்புறுத்தலால் அவதிக்குள்ளாகி கீழக்கரையில் குடியேறினர்.[சான்று தேவை]

கீழக்கரையில் இஸ்லாம்
மொழி(கள்)
அர்வி, தமிழ்
சமயங்கள்
சுன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மரைக்காயர், லப்பை, அரேபியர்

மொழி

தொகு

ஆரம்பகால வணிகர்களால் கொண்டுவரப்பட்ட அரபு மொழி பேசப்படுவதில்லை, இருப்பினும் பல அரபு சொற்களும் சொற்றொடர்களும் இன்னும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. அண்மைக்காலம் வரை, மூர்கள் அர்வியை மொழியை பயன்படுத்தினர், அதுவும் தற்போது வழக்கில் இல்லை. மூர்கள் இப்போது அரபு மொழியின் தாக்கத்துடன் கூடிய தமிழை தங்கள் முதன்மை மொழியாக பயன்படுத்துகின்றனர். கீழக்கரை மூர்கள் பேசும் பல அரபு வார்த்தைகள் தமிழ் வடிவத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழிற்கு பதிலாக அரபியில் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் பரிமாறப்படுகின்றன, அதாவது சந்தியும் சமதானமும் என்பற்கு பதிலாக அஸ்ஸலாமு அலைகும், நன்றிக்கு பதிலாக ஜஸாகல்லாஹ் மற்றும் கிண்ணம் / கோப்பைக்கு பிஞ்சன் / பின்ஜன் என்கிறனர். கீழக்கரை மூர்கள் மற்றும் இன்னும் சில தமிழ் முஸ்லிம் சமூகங்களில் மூத்த சகோதரிக்கு லாத்தா, மூத்த சகோதரருக்கு காக்கா, தாய்க்கு உம்மா மற்றும் தந்தைக்கு வாப்பா போன்ற சொற்களும் பயன்பாட்டில் உள்ளன. மொட்டை மாடிக்கு மட்டப்பா போன்றவை சிங்களத்திலிருந்து பெறப்பட்ட சொற்களாகும். புறநானூற்று‌ காலத்து சொற்களான குழம்பு என்பதற்கு ஆணம் மற்றும் ரசம் என்பதற்கு புளியாணம் போன்ற பல சொற்கள் வழக்கில் உள்ளது.

கேலரி

தொகு

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழக்கரையில்_இஸ்லாம்&oldid=3191075" இலிருந்து மீள்விக்கப்பட்டது