குக்குப்

பொந்தியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு மீன்பிடி நகரம்.

குக்குப், (மலாய்: Kukup; ஆங்கிலம்: Kukup; சீனம்: 龟咯); ஜாவி: كوكوڤ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பொந்தியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு மீன்பிடி நகரம்.

குக்குப்
Kukup
நகரம்
குக்குப் மீன்பிடி கிராமம்
குக்குப் மீன்பிடி கிராமம்
குக்குப் Kukup is located in மலேசியா மேற்கு
குக்குப் Kukup
குக்குப்
Kukup
குக்குப் அமைவிடம் மலேசியா
ஆள்கூறுகள்: 1°19′N 103°27′E / 1.317°N 103.450°E / 1.317; 103.450
மாவட்டம்பொந்தியான் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு82030
போக்குவரத்துப் பதிவெண்கள்J

இந்த நகரம் பொந்தியான் நகரத்தில் இருந்து 21 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 59 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இது ஒரு மீன்பிடி கிராம நகரம். இந்த நகரம் கடல் நீருக்கு மேல் கட்டப்பட்ட மிதவைக் கடல் உணவு உணவகங்களுக்கு பிரபலமானது. கடல் உணவு வகைகளை ருசிக்க சிங்கப்பூர் மக்கள் இந்த நகருக்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்த நகரத்தை இந்தோனேசியாவில் உள்ள தஞ்சோங் பாலாய் எனும் துறைமுகத்தைப் படகுச் சேவைகள் இணைக்கின்றன.[1]

சிங்கப்பூருக்கும் குக்குப் நகருக்கும் இடையில் படகுச் சேவையை ஆரம்பிக்க மலேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுற்றுப்பயணிகள் துவாஸ் நகரில் இருந்து குக்குப் நகருக்கு சிரமம் இல்லாமல் செல்ல, படகுச் சேவைகள் வழிவகுக்கும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.[2]

வரலாறு தொகு

 
குக்குப் மீன்பிடி கிராமத்தின் படகுத்துறை.
 
குக்குப் குழிப்பந்தாட்ட திடலின் முன்வாசல்

1870-ஆம் ஆண்டுகளில், அப்போதைய ஜொகூர் சுல்தான் சுல்தான் சர் அபு பாக்கார் (Sultan Sir Abu Bakar), ஜொகூர் மாநிலத்தின் தென்மேற்கு கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்த சையட் முகமட் அலி அலாஸ்கோப் (Syed Muhamed Bin Ali Alsagof) என்பவருக்கு அனுமதி வழங்கினார்.

சையட் முகமட் அலி என்பவர் அன்றைய காலத்தில் சிங்கப்பூர், மலாயா நாடுகளில் பிரபலமான வணிகர். அரபு நாட்டில் இருந்து வணிகம் செய்து வந்தவர். அதன் பின்னர்தான் குக்குப் நிலப்பகுதி செழிப்பு அடைந்தது.[3]

கான்ஸ்டான்டினோபிள் தோட்டம் தொகு

1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர் மாநிலத்தின் குக்குப் பகுதியில் ஒரு தோட்டம் இருந்தது. அதன் பெயர் கான்ஸ்டான்டினோபிள் தோட்டம் (Constantinople Estate). பரப்பளவு 60,000 ஏக்கர். இந்தத் தோட்டத்தை உருவாக்கியவர் சையட் முகமட் அலி அலாஸ்கோப்.

குக்கூப் கான்ஸ்டான்டினோபிள் தோட்டம் ஒரு பள்ளத்தாக்குப் பண்ணை ஆகும். அங்கே மிளகு, வெற்றிலை, சவ்வரிசி, தேங்காய், ரப்பர், காபி, அன்னாசி, கொக்கோ, மூலிகைச் செடிகள் போன்றவை பயிர் செய்யப் பட்டன.

ஜொகூரில் ஏற்கனவே இருந்த மலாய்க்காரர்கள், சீனர்கள் பலர் வேலை செய்ய அங்கு அழைத்து வரப் பட்டார்கள். சீனர்கள் பெரும்பாலும் அன்னாசி பயிர் விளைவித்தார்கள்.

தமிழர்களின் பங்களிப்பு தொகு

ரப்பர், கொக்கோ, வெற்றிலை, மிளகு பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். தமிழர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை செய்தவர்கள்.

மேலும் பலர் மூவார், மலாக்கா, குளுவாங் பகுதிகளில் இருந்து கொண்டு வரப் பட்டார்கள். ஒரு காலக் கட்டத்தில் ஏறக்குறைய 1500 தமிழர்கள் அந்தத் தோட்டத்தில் வேலை செய்து இருக்கிறார்கள்.[4]

பண அட்டைகளில் தமிழ் தொகு

கான்ஸ்டான்டினோபிள் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் பயன்படுத்துவதற்கு பண அட்டைகள் அச்சிடப் பட்டன. 25 சென், 50 சென், 1 டாலர், 2 டாலர் என பண அட்டைகள். அந்தப் பண அட்டைகளில் இருபத்தைந்து சென்று; அன்பது சென்று; ஒரு றிங்கி; இரண்டு றிங்கி என தமிழில் குறிக்கப்பட்டு இருந்தன.

'இந்தப் பண அட்டையைக் கொண்டு வருபவர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படும்’ (Pembayaran Tunai Kepada Kuli-kuli Yang Membawa nota ini) என்றும்; 1 May ’1878 மே 1’ என்றும் அந்தப் பண அட்டைகளில் பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன.

40 ஆண்டுகள் பயன்பாடு தொகு

இந்த பண அட்டைகள் குக்கூப், ஜொகூர் பாரு பகுதிகளில் 40 ஆண்டுகள் பயன்படுத்தப் பட்டன.[5] 1917-ஆம் ஆண்டு, அந்தப் பண அட்டைகள் பயன்பாட்டில் இருந்து மீட்டுக் கொள்ளப் பட்டன. அண்மையில் 50 சென் பண அட்டை, 45,000 ரிங்கிட்dஇற்கு சிங்கப்பூரில் ஏலத்திற்கு விடப் பட்டது.[6]

கான்ஸ்டான்டினோபிள் தோட்டப் பண அட்டைகள் துவான் சையத் முஹம்மது பின் அஹ்மத் அல்சகோப் தோட்டங்களுக்குள் பயன்படுத்தப்பட்ட தனியார் பணநோட்டுகள் ஆகும். தன் சொந்த நாணயத்தை வெளியிடும் உரிமை 1870-களில் ஜொகூர் அரசாங்கத்தால் துவான் சையத் முஹம்மது பின் அஹ்மத் அல்சகோப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பண நோட்டுகள் சிங்கப்பூரில் உள்ள அல் சயீதி அச்சகத்தால் அச்சடிக்கப்பட்டன.[7]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
குக்குப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்குப்&oldid=3419659" இலிருந்து மீள்விக்கப்பட்டது