குடிபதி வெங்கடாசலம்

குடிபதி வெங்கடாசலம் (Gudipati Venkata Chalam) (1894-1979) என்பவர் தெலுங்கு எழுத்தாளர் மற்றும் தத்துவ அறிஞர் ஆவார்.[1] தெலுங்கு எழுத்துலகில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

குடிபதி வெங்கடாசலம்
பிறப்புகுடிபதி வெங்கடாசலம்
(1894-05-19)மே 19, 1894
சென்னை, இந்தியா
இறப்புமே 4, 1979(1979-05-04) (அகவை 84)
அருணாச்சலப்பிரதேசம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1920–1972

இவருடைய பெரும்பான்மையான படைப்புகள் பெண்ணியம் பற்றியதாகும். குறிப்பாக பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் அவர்களது நெருங்கியவர்கள் போன்றவர்களிடம் இருந்து உடல்ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் எவ்வாறு இடர்பாடுகளைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பற்றி இவரின் படைப்புகள் தெளிவாக விளக்குகிறது. மேலும் அவர் பெண்கள் எவ்வாறு இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் நிச்சயம் எதிர்கொள்வார்கள் என்ற தனது நம்பிக்கையையும் விளக்குகிறார். இவரின் தத்துவார்த்த விளக்கங்களை தனக்கே உரித்தான பாணியில் எழுதியுள்ளார்.

வாழ்க்கை

தொகு

1972 ஆம் ஆண்டில் வெளிவந்த அவருடைய சலம் எனும் சுயசரிதை நூலிலிருந்துதான் அவரைப் பற்றி அறிய முடிகிறது. அதில் அவரது தந்தை எவ்வாறு துன்புறுத்தினார் என்பதனையும், திருமணத்திற்குப் பின்னும் தனது தாய் அவருடைய தாயின் வீட்டில் வைத்து தனது கணவனுடன் குடும்பத்தை தொடங்கியது பற்றியும் அதற்காக அவர் பட்ட துன்பங்களையும் , அவமானங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அவர் ஏன் சுயசரிதை எழுதினார் என்பதற்கான விளக்கத்தையும் அவரே குறிப்பிட்டுள்ளார்.

சுயசரிதைகள் எழுதுவதை நான் வெறுக்கிறேன். சுயசரிதை எழுதுவதன் மூலமாக நானும் ஒரு முக்கியமான நபர் என்பதனை மறைமுகமாக அனைவருக்கும் தெரிவிப்பது நானே சுய விளம்பரம் செய்வது போல் ஆகி விடும் எனக் கூறுகிறார். மேலும் நான் இந்த சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்துள்ளதாகவும், நான் இதை அவர்களிடம் தெரிவிக்கவில்லை எனில் என்னைப் பற்றி சமுதாயத்திற்கு தெரியாமல் போகும் சூழ்நிலை ஏற்படும்.இதனால் சமுதாயத்திற்கு ஏதேனும் இழப்புகள் ஏற்படவா போகிறது?.நான் ஏன் பிறந்தேன்? சரி நான் பிறந்துவிட்டேன் நான் ஏன் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாமல் உடனே இறக்கவில்லை? வெட்கமில்லாமல் நான் எனது கதையை எழுதுகிறேன். இது சகித்துக் கொள்ளமுடியாத செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.[2]

பிறப்பு , குழந்தைப் பருவம்

தொகு

குடிபதி வெங்கடாசலம் மே 18, 1894 ஆம் ஆண்டு சென்னையில், இந்தியா பிறந்தார். இவரது தந்தை கொம்முரி சம்பசிவராவ், தாய் வெங்கட சுப்பம்மா. இவரின் குழந்தைப்பருவத்தில் இவரின் தாய் வழித் தாத்தா இவரை வளர்த்து வந்தார். இவருடைய மரபுப் பெயர் கொம்முரியிலிருந்து குடிபதி என ஆனது. இவர் இந்து மதத்தை முறையாகப் பின்பற்றி வந்தார். இவரின் தந்தை தனது தாயை துன்புறித்தியது இவர் மனதில் நிலையாகப் பதிந்தது. மேலும் தனது தாயின் இளைய சகோதரியின் விருப்பத்திற்கு எதிராக கட்டாயத் திருமணம் செய்தது போன்ற நிகழ்வுகள் பெண்கள் இந்த சமூகத்தில் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதனைப் பற்றி சிந்திக்க வைத்தது.

கல்வி, திருமணம்

தொகு

சலம் 1911 இல் பித்தபுரம் மகாராஜ கல்லூரியில் சேர்ந்தார். அந்த சமயத்தில் ரகுபதி வேங்கட ரத்னம் நாயுடுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டார். இவர் ஆந்திராவில் பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். பின் கலைப்பிரிவில் இளங்கலை பயில சென்னை சென்றார். கல்லூரியில் சேர்வதற்கு முன்னரே சிட்டி ரங்கனாயகம்மா என்பவரைத் திருமணம் செய்தார். இவரின் கல்லூரிப் படிப்பின் போதே தனது மனைவியின் பள்ளிப்படிப்பிற்காக கன்னிமாடத்தில் சேர்த்திருந்தார். தான் கல்லூரிக்குப் போகும் போது தன்னுடைய மிதிவண்டியில் தனது மனைவியை அழைத்துச் செல்வார். இதனை மற்றவர்கள் சற்று வேடிக்கையாகப் பார்த்தனர். ஊனுண்ணி உண்ண ஆரம்பித்த பிறகு முப்புரி நூல் அணிவதை நிறுத்திக்கொண்டார். அனைத்து சாதியினத்தவரிடமும் சமமாகப் பழகினார். அதனால் இவரை அவருடைய உறவினர்கள் தங்களுடைய வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இவருடைய மாமியார் இறந்த போதிலும் கூட இவர்களை அனுமதிக்கவில்லை. வெளியே வைத்து தான் இவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.[3]

புதினங்கள்

தொகு
  • மைதானம்
  • சசிரேகா
  • ஜீவித தரிசனம்
  • தியாகம்
  • அருணா
  • அனுசுயா

சான்றுகள்

தொகு
  1. "Gudipati Venkatachalam Profile - Photos, Wallpapers, Videos, News, Movies, Gudipati Venkatachalam Songs, Pics", www.in.com/, பார்க்கப்பட்ட நாள் 2018-03-19[தொடர்பிழந்த இணைப்பு]
  2. LLC, Revolvy, ""Gudipati Venkatachalam" on Revolvy.com", www.revolvy.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-19{{citation}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  3. LLC, Revolvy, ""Gudipati Venkatachalam" on Revolvy.com", www.revolvy.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-03-19{{citation}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிபதி_வெங்கடாசலம்&oldid=3479883" இலிருந்து மீள்விக்கப்பட்டது