குட்டைக்காது ஆந்தை
குட்டைக்காது ஆந்தை (short-eared owl, Asio flammeus) என்பது இசுட்ரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தை ஆகும். இவை திறந்த புல்வெளிகளில் காணப்படும்.[2]
குட்டைக்காது ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | அசியோ
|
இனம்: | A. flammeus
|
இருசொற் பெயரீடு | |
Asio flammeus (Pontoppidan, 1763) | |
வேறு பெயர்கள் | |
|
உடலமைப்பு
தொகு38 செ.மீ. - வட்ட வடிவமான வெளிர் பழுப்பு நிற முகம் கொண்டது. தலையில் கண்களுக்கு மேலாக மிகக் குறுகிய காதுத் தூவிகள் விறைந்து நிற்கும். உடலின் மேற்பகுதி கரும் பழுப்பு நிறக் கோடுகள் கொண்டிருக்க இறக்கைகளும் வாலும் செம்பழுப்பும் கருப்புமான பட்டைகளைக் கொண்டது. மேல்மார்பு மெல்லிய கரும்பழுப்புக் கோடுகளைக் கொண்டிருக்க வயிறு கீற்றுகள் அற்ற வெளிர் பழுப்பானது.
காணப்படும் பகுதிகள், உணவு
தொகுகுளிர் காலத்தில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைச் சார்ந்த மலைகளுக்கும் மலை சார்ந்த காடுகளுக்கும் வலசை வருவது, தனித்தும் சிறு குழுவாகவும் தரையில் புல் விடையேயும் புதர்களின் ஓரமாகவும் பகலில் அமர்ந்திருக்கும். இது காலை மாலை நேரங்களில் சுறு சுறுப்பாக வயல் எலி, சுண்டெலி, சிறு பறவைகள், தத்துக்கிளி, புழுபூச்சிகள் ஆகியவற்றை இரையாகத் தேடும். காக்கைகளும் பிற பறவைகும் கூட்டமாகத் துரத்தும்போது உயர எழுந்து வட்டமடித்துப் பறக்கும் வலசை வரும் சமயத்தில் குரலொலி ஏதும் செய்வதில்லை.[3]
படங்கள்
தொகு-
மகாராட்டிராவில்
-
நெதர்லாந்தில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Asio flammeus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 57, 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:79
வெளி இணப்புகள்
தொகு- Short-eared Owl - Asio flammeus - USGS Patuxent Bird Identification InfoCenter
- Short-eared owl videos, photos, and sounds at the Internet Bird Collection
- Riverhead, NY News Review article about the appearance of short-eared owls at EPCAL பரணிடப்பட்டது 2008-04-01 at the வந்தவழி இயந்திரம்
- Ageing and sexing (PDF; 3.7 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்
- BirdLife species factsheet for Asio flammeus
- {{{2}}} on Avibase
- குட்டைக்காது ஆந்தை photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Asio flammeus at IUCN Red List maps
- Audio recordings of Short-eared owl on Xeno-canto.