குதிரன் சுரங்கப் பாதை
குதிரன் சுரங்கப் பாதை (ஆங்கிலம்: Kuthiran Tunnel மலையாளம்: കുതിരാന് തുരങ്കം) என்பது இரட்டை குழல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் அமைக்கப்படும் முதல் சுரங்கப்பாதையாகும். இந்த சுரங்கப்பாதை தேசிய நெடுஞ்சாலை 544-ல் அமைந்துள்ளது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குச் சொந்தமானது. இதனை இந்த ஆணையமே இயக்குகிறது. இது கேரளாவின் சாலைப் போக்குவரத்திற்கான முதல் சுரங்கப்பாதை மற்றும் தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு வழிச் சாலை சுரங்கப்பாதை ஆகும்.[1][2][3] இந்தச் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் 2016-ல் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் ஒரு சிறு பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
குதிரன் சுரங்கப் பாதை நுழைவாயில் | |
மேலோட்டம் | |
---|---|
அமைவிடம் | குதிரன், திரிச்சூர், கேரளா, இந்தியா |
ஆள்கூறுகள் | 10°34′17″N 76°22′52″E / 10.5715°N 76.381°E |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் |
வழித்தடம் | தே. நெ. 544 |
தொடக்கம் | 10°34′17″N 76°22′41″E / 10.5715°N 76.378°E |
முடிவு | 10°34′19″N 76°23′10″E / 10.572°N 76.386°E |
செய்பணி | |
பணி ஆரம்பம் | 2016 |
உரிமையாளர் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் |
இயக்குபவர் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் |
Traffic | தரைவழிப் போக்குவரத்து |
Character | பயணிகள் & சரக்கு |
தொழினுட்பத் தகவல்கள் | |
நீளம் | இடது குழல் 955 m (3,133 அடி) வலது குழல் 944 m (3,097 அடி) |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 3 வழி ஒரு குழலில் (6 வழிப்பாதை, இரடை குழல்) |
தொழிற்படும் வேகம் | பாதை 1 - 40–80 km/h (25–50 mph) பாதை 2 - 40–80 km/h (25–50 mph)
|
சுரங்க விடுவெளி | 10 மீட்டர்கள் (33 அடி) |
அகலம் | 14 மீட்டர்கள் (46 அடி) |
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி சமூகத் தளமான டுவிட்டர் மூலம் இரட்டை குழாய் சுரங்கங்களில் ஒன்றைத் திறப்பதாக அறிவித்தார்.[4]
தற்போதைய போக்குவரத்து
தொகுஆனைமலை மலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குதிரை மலையில் குதிரை சாய்வில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த மலை அறிவிக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமாகும்.
தேசிய நெடுஞ்சாலை 544யில் (இந்தியா) நெரிசலான திருச்சூர் - பாலக்காடு பாதையில் குதிரன் சாய்வு போக்குவரத்திற்கு இடையூறான குறுகிய பாதை மற்றும் விபத்து மிகுந்த இடமாகும். இச்சுரங்கப்பாதை வேலைகள் முடிந்து, இரண்டு சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டிற்கு வரும் போதுகொச்சிக்கும் கோயம்புத்தூருக்கும் 3 கிலோமீட்டர்கள் (1.86 mi) மற்றும் குதிரன் வழியாகச் செல்லும் சுரங்கப்பாதை கணிசமான அளவு பயண நேரம் மற்றும் இதுவரை இருந்த வாகன நெரிசலைத் தவிர்க்கிறது.
புவியியல் மற்றும் நிர்வாக சவால்கள் காரணமாகச் சுரங்கப்பாதையின் பணிகள் முடிக்க ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆனது.
ஆகஸ்ட் 2018-ல்கேரள வெள்ளத்தின் போது, அவசரக்கால வாகனங்கள் செல்வதற்காகச் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. ஜூன் 2019-ல் சுரங்கப்பாதை நான்கு மணி நேரம் அவசர பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.[5] ஜனவரி 2020-ல், திருச்சூர் மற்றும் பாலக்காடு இடையே இந்திய மின் குழுமம் இந்தியாவின் நிலத்தடி மின்தடப் பணிகளை எளிதாக்கும் வகையில் சுரங்கப்பாதை ஓரளவு திறக்கப்பட்டது.[6]
ஜூலை 31, 2021 அன்று, டுவிட்டர் மூலம் நிதின் கட்காரி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து , பாலக்காடு - திருச்சூர் திசையில் உள்ள இரண்டு சுரங்கப்பாதைகளில் ஒன்று போக்குவரத்துக்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.[7]
செலவு
தொகுபிரகதி குழுமம் ஐதராபாத்தைச் சேர்ந்த கேஎம்சி நிறுவனம் மூலம் பணியை மேற்கொள்ளத் துணை ஒப்பந்தம் செய்தது. பிரகதி நிறுவனம் 200 கோடி ரூபாய் செலவில் துணை ஒப்பந்தத்தை எடுத்தது.
பரிமாணம்
தொகுஆறு வழித்தட இரட்டை குழாய் சுரங்கங்கள் கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நீளமுடையது. இடது குழாய் 955 m (3,133 அடி) மற்றும் வலது குழாய் 944 m (3,097 அடி), அகலம் மற்றும் உயரம் 14 மற்றும் 10 மீட்டர்கள் (46 மற்றும் 33 அடி), முறையே. 20 மீட்டர்கள் (66 அடி) இடைவெளியில் அமைந்திருக்கும். சுரங்கப்பாதைக்குள் இரண்டு அவசர குறுக்குவழிகளும் உள்ளன.[8]
காணொளி
தொகு-
Time Lapse video of Kuthiran Tunnel
மேற்கோள்கள்
தொகு- ↑ "Work on left tunnel at Kuthiran begins". Dailyhunt. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Work on left tunnel at Kuthiran begins". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Kuthiran tunnel work resumes". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Kuthiran Tunnel Opening: Big news for Kerala, Tamil Nadu and Karnataka! One side of tunnel to be OPENED for public today, says Nitin Gadkari | WATCH video". Zee Business. 2021-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-07-31.
- ↑ "Major safety lapse as cops open Kuthiran tunnel to clear jam". www.onmanorama.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ Daily, Keralakaumudi. "Kuthiran tunnel partially opened as Power Grid's trial run commences". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ "One of two Kuthiran tunnels in Kerala declared open by Union govt". The News Minute (in ஆங்கிலம்). 2021-08-01. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ "Ministry of Road Transport & Highways, Government of India". morth.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.