குபா தேசியப் பூங்கா
கூபா தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Kubah; ஆங்கிலம்: Kubah National Park) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள தேசியப் பூங்கா ஆகும். கூச்சிங் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2230 எக்டேர் பரப்பளவில் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1995 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.[1]
கூபா தேசியப் பூங்கா Kubah National Park Taman Negara Kubah | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
குபா அருவி | |
அமைவிடம் | கூச்சிங் பிரிவு சரவாக் மலேசியா |
அருகாமை நகரம் | உலு மெலாடாம் |
ஆள்கூறுகள் | 1°35′51″N 110°11′39″E / 1.59750°N 110.19417°E |
பரப்பளவு | 22.3 km2 (8.6 sq mi) |
நிறுவப்பட்டது | 1989 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் Sarawak Forestry Corporation (SFC) |
கூச்சிங் பிரிவில் உள்ள மாத்தாங் மலைத்தொடர் (Matang Range) குபா தேசிய பூங்காவின் தளமாகவும் உள்ளது. நீண்ட நாட்களுக்கு தங்க விரும்பும் பார்வையாளர்களுக்கு இந்தப் பூங்கா தங்கும் வசதிகளையும் வழங்குகிறது.[2]
பொது
தொகுகூபா தேசியப் பூங்காவில் உள்ள செராபி மலை, செலாங் மலை, சென்டோக் மலை ஆகிய மூன்று மலைகளையும் தெளிவான நாட்களில் கூச்சிங் நகரில் இருந்து பார்க்க முடியும்.[3]
2,230 எக்டேர் பரப்பளவு கொண்ட கூபா தேசியப் பூங்காவில் அரிய வகையான பெரணிகள்; ஆர்க்கிட் மலர்கள்; மற்றும் பல வகையான பனை வகைத் தாவரங்களையும் காணலாம். அதனால்தான் இந்தப் பூங்கா "பனைகளின் உலகம்" என்று அழைக்கப்படுகிறது. அங்கு வளரும் 93 வகையான பனை மரங்களால் இந்தப் பூங்கா சிறப்பிக்கப்படுகிறது.[3][4]
உயிரினங்கள்
தொகுகாட்டு விலங்குகள் இங்குள்ள மழைக்காடுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேலும் இங்கு வாழும் சில உயிரினங்களான போர்னியோ தாடிப் பன்றிகள், சுட்டி மான்கள், கருப்பு இருவாய்ச்சி பறவைகள் குறிப்பிடத்தக்கவை. மற்றும் பல வகையான ஊர்வனங்களும் இங்கு உள்ளன.
இந்தப் பூங்கா, மாத்தாங் வனவிலங்கு மையத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவை இராயு மலையேற்றப் பாதையின் மூலமாக அணுகலாம்.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ng, Justin. "Things To do In Kuching, Sarawak". Archived from the original on 21 March 2022. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
- ↑ "Kubah National Park - Sarawak Forestry Corporation". sarawakforestry.com. 22 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 September 2024.
- ↑ "Kubah National Park - Discover palms, pitcher plants, ferns & frogs". Borneo Adventure (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
- ↑ "Kubah National Park - Jungle Trails, Bird Watching and Waterfall". Visit Sarawak (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
- ↑ "Matang Wildlife Centre". Sarawak Forestry Corporation. Archived from the original on 8 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.