கூச்சிங் நீர்சார் தேசியப் பூங்கா
கூச்சிங் நீர்சார் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Tanah Lembap Kuching; ஆங்கிலம்: Kuching Wetlands National Park) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு பெட்ரா ஜெயாவில் உள்ள நீர்சார் தேசியப் பூங்கா ஆகும். ஏற்கனவே அப்பகுதியில் 1702 கி.மீ. பரப்பளவைக் கொண்ட சரவாக் சதுப்புநிலக் காடுகள் (Sarawak Mangrove Forest Reserve) இருந்தன. அவற்றின் எச்சங்களே இந்த நீர்சார் தேசியப் பூங்காவாகும்.
கூச்சிங் நீர்சார் தேசியப் பூங்கா Kuching Wetlands National Park Taman Negara Tanah Lembap Kuching | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | கூச்சிங் பிரிவு சரவாக் மலேசியா |
அருகாமை நகரம் | கூச்சிங் |
ஆள்கூறுகள் | 1°41′N 110°15′E / 1.683°N 110.250°E[1] |
பரப்பளவு | 84.95 km2 (32.80 sq mi) |
நிறுவப்பட்டது | 1992 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் Sarawak Forestry Corporation (SFC) |
தெரியப்பட்டது | 8 நவம்பர் 2005 |
உசாவு எண் | 1568[2] |
கூச்சிங்கில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்சார் தேசியப் பூங்கா 1992-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. சிபு லாவுட் ஆறு மற்றும் சாலாக் ஆறு; ஆகிய இரண்டு ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் 66.12 கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
பொது
தொகுஇந்தப் பூங்கா, கடலோரச் சுற்றுச்சூழல்; கடல் சுற்றுச்சூழல் மற்றும் நன்னீர்ச் சுற்றுச்சூழல் ஆகிய நீர்த்தடச் சுற்றுச்சூழல் அமைப்புகளால் ஆனது. 12-ஆம் நூற்றாண்டில், இப்பகுதி உள்நாட்டு மக்களிடையே அவர்களின் காடுசார் பொருள்களுக்கு ஒரு முக்கிய வணிக நிலையமாக இருந்தது.
சீன மருத்துவத்தில் மதிப்புமிக்க பொருள்களாக விளங்கிய விலங்குகளின் பாகங்களை இப்பகுதியின் உள்நாட்டு மக்கள் உற்பத்தி செய்தார்கள். அந்த உள்நாட்டு உற்பத்திப் பொருள்களுக்குப் பதிலாக சீனா நாட்டு மண் பாத்திரங்கள் பண்டமாற்று செய்யப்பட்டது.
இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலமாக, பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த இரும்பு உருக்கும் தொழில்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சாந்துபோங் மலை இந்த வணிகர்களுக்கு ஒரு கலப்பயணப் புள்ளியாகச் செயல்பட்டு இருக்கலாம் என அறியப்படுகிறது.
உயிரினங்கள்
தொகுகூச்சிங் நீர்சார் தேசியப் பூங்கா பலவகையான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில முக்கியமான உயிரினங்கள்:
- தும்பிக்கை குரங்குகள் - (Proboscis monkey)
- நீண்ட வால் மக்கா குரங்கு - (Long-tailed Macaque)
- லங்கூர் குரங்கு - (Langur Monkey)
- வெள்ளை வயிற்றுக் கடற்கழுகு - White-bellied sea eagle
- கோபி மீன் - (Goby)
- குதிரைலாட நண்டு - (Horseshoe crab)
- நீர் நாய் - (Hairy-nosed otter)
- ஐராவதி ஓங்கில் - (Irrawaddy dolphin)
- உவர் நீர் முதலை - (Saltwater crocodile)
- இருவாய்ச்சி பறவை - (Hornbill)
காட்சியகம்
தொகு-
மக்கா குரங்கு
-
லங்கூர் குரங்கு
-
இருவாய்ச்சி பறவை
-
ஐராவதி ஓங்கில்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Loagan Bunut National Park". protectedplanet.net.
- ↑ "கூச்சிங் நீர்சார் தேசியப் பூங்கா". ராம்சர் Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
- ↑ UNEP-WCMC (2023). Protected Area Profile for Kuching Wetland National Park from the World Database on Protected Areas. Accessed 18 March 2023.