சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை
சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை (Ecosystem diversity) என்பது ஒரு புவியியல் இருப்பிடத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் மாறுபாடுகள் மற்றும் மனித இருப்பு மற்றும் சுற்றுச்சூழலில் இதன் ஒட்டுமொத்த தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பது ஆகும்.
சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை உயிரியல் கூறுகள் (பல்லுயிர்) மற்றும் உயிர்சாராக் கூறுகள் (புவி பன்மை) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பண்புகளைக் குறிக்கிறது. இது ஒரு பகுதியில் காணப்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மாறுபாடு அல்லது முழு கிரகத்தின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மாறுபாடு ஆகும். சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை என்பது நிலப்பரப்பு மற்றும் நீர்சார் சூழல் மண்டலத்தில் உள்ள மாறுபாட்டை உள்ளடக்கியது. பல்வேறு இடங்களின் எண்ணிக்கை மற்றும் பிற சுற்றுச்சூழல் செயல்முறைகள் உட்பட, ஒரு உயிரியல் சமூகத்தின் சிக்கலான மாறுபாட்டையும் சூழலியல் பன்முகத்தன்மை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. பாலைவனம், காடு, புல்வெளி, ஈரநிலம் மற்றும் பெருங்கடல் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளில் காணப்படும் மாறுபாடு உலக அளவில் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை என்பது பல்லுயிர் பெருக்கத்தின் மிகப்பெரிய அளவாகும், மேலும் ஒவ்வொரு சுற்றுச்சூழலுக்குள்ளும், சிற்றினப் பல்வகைமையும் மரபியற் பல்வகைமையும் உள்ளது.[1][2][3][4]
தாக்கம்
தொகுபல்வேறு காரணங்களுக்காகச் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பன்முகத்தன்மை மனித இருப்புக்குக் குறிப்பிடத்தக்கதாகும். சுற்றுச்சூழலின் பன்முகத்தன்மை, வாழ்விடத்தில் வசிக்கும் தாவர உயிரினங்களிடையே ஒளிச்சேர்க்கை செயல்முறையின் மூலம் ஆக்சிசன் கிடைப்பதை அதிகரிக்கிறது. நீர் வாழ் சூழலில் உள்ள பன்முகத்தன்மை, மனிதர்களின் பயன்பாட்டிற்காகத் தாவர வகைகளால் தண்ணீரைச் சுத்திகரிக்க உதவுகிறது. பன்முகத்தன்மை தாவர வகைகளை அதிகரிக்கிறது. இது மனித பயன்பாட்டிற்கான மருந்துகள் மற்றும் மூலிகைகளுக்கு நல்ல ஆதாரமாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பில் பன்முகத்தன்மை இல்லாதது எதிர் விளைவை உருவாக்குகிறது.[5]
எடுத்துக்காட்டுகள்
தொகுபன்முகத்தன்மை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் சில எடுத்துக்காட்டுகள்:
- பாலைவனம்
- காடு
- பெருங்கடல்
- கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகள்
- பழைய வளர்ச்சி காடுகள்
- மழைக்காடுகள்
- தூந்திரம்
- பவளப் பாறைகள்
- கடல்சார் உயிரியல்
பரிணாம அழுத்தத்தின் விளைவாக சுற்றுச்சூழல் அமைப்பின் பன்முகத்தன்மை
தொகுஉலகெங்கிலும் உள்ள சூழலியல் பன்முகத்தன்மையானது பரிணாம மற்றும் குறிப்பிட்ட அழுத்தங்களால் பாதிப்பிற்குள்ளாகின்றது. இது வெவ்வேறு இடங்களுக்குள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பன்முகத்தன்மை விளைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. தூந்திரம், மழைக்காடு, பவளப் பாறை மற்றும் இலையுதிர் காடுகள் அனைத்தும் பரிணாம அழுத்தங்களின் விளைவாக உருவாகின்றன. வெளித்தோற்றத்தில் சிறிய பரிணாம தொடர்புகள் கூட உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் பன்முகத்தன்மையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அந்தாட்டிக்காவைத் தவிர உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும் உள்ள பூக்கும் தாவரம் தேனீயின் தொடர்பு பற்றிய ஆய்வு இத்தகைய நிகழ்வுகளில் ஒன்றாகும்.[6]
2010ஆம் ஆண்டில், இராபர்ட் ப்ராட்ஸ்நேடர் மற்றும் கார்ல் க்ரைல்ஷீம் ஆகியோர் தேனீக் கூட்டமைப்பின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஒரு ஆய்வை நடத்தினர். தீங்குயிர்கொல்லி, ஓரினப்பயிர் முறை மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் ஆகியவற்றின் விளைவுகளின் செயல்பாடாக ஒட்டுமொத்த கூட்டமைப்பின் ஆரோக்கியம், முதிர்ச்சியடைந்த தேனீக்களின் ஊட்டச்சத்து மற்றும் இளம் உயிரிகளின் ஊட்டச்சத்து ஆகியவற்றில் மானுடவியல் ரீதியாக உருவாக்கப்பட்ட சிக்கல்கள் மகரந்தச் சேர்க்கை அளவை பாதிக்குமா என்பதைக் கண்டுபிடிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.[7] தேனீ கூட்டமைப்பின் உடற்தகுதியை அழிப்பதில் மனித செயல்பாடுகளின் மோசமான பங்கினை காணமுடிந்தது. இந்த மகரந்தச் சேர்க்கையாளர்களின் அழிவு அல்லது அழிந்துபோவது, அயல் மகரந்தச் சேர்க்கை முறைகள் தேவைப்படும் பரந்த அளவில் மனிதர்களுக்கு உணவளிக்கும் பல தாவரங்களின் அழிவிற்கு வழிவகுக்கும்.[8] மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் அமெரிக்கப் பொருளாதார மதிப்பு ஆண்டுதோறும் $14.6 பில்லியன் கணகிடப்பட்டுள்ளது.[9] மேலும் பூச்சி மகரந்தச் சேர்க்கையின் மீது மகரந்தச் சேர்க்கையை மேற்கொள்வதற்கான செலவு ஹெக்டேருக்கு $5,715-$7,135 அதிகமாகச் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செலவு அதிகரிப்பு மட்டுமல்ல, கூட்டமைப்பு தகவமைப்பு குறைவதும், மரபணு வேறுபாடு குறைவதற்கு வழிவகுக்கும். இது தேனீ கூட்டமைப்பு நீண்டகால உயிர்வாழ்வோடு நேரடி தொடர்பைக் கொண்டிருப்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.[10]
ஆய்வு ஒன்று, தேனீயின் மகரந்தச் சேர்க்கையைச் சார்ந்து 50க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன எனவும் இத்தாவரங்கள் உலகிற்கு உணவளிக்கும் முக்கியப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன எனத் தெரிவிக்கின்றது.[11] மற்றொரு ஆய்வு, தாவர பன்முகத்தன்மையின் பாதிப்பு தேனீக்களின் எண்ணிக்கையில் சரிவுக்கு வழிவகுப்பதோடு தேனீ கூட்டமைப்பின் அமைப்பில் பாதிப்பினை ஏற்படுத்துவதோடு தாவர சுற்றுச்சூழல் அமைப்பின் பன்முகத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கிறது. தேனீயின் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம், மானுடவியலின் தீங்கு விளைவிக்கும் கால்தடங்களைக் குறைத்து தாவர வளர்ச்சியின் மரபியல் பன்முகத்தன்மையை அதிகரிக்கலாம். மிகவும் மாறுபட்ட தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பினை தேனீக்கள் உருவாக்குவதுடன், பல உயிரினங்கள் செழித்து வளர வாழ்விடத்தையும் முக்கிய இடத்தையும் வழங்குகிறது.[12] தேனீக்களின் மீதான பரிணாம அழுத்தங்கள் ஏழு கண்டங்களில் ஆறில் அமைந்துள்ளதால், சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையில் மகரந்தச் சேர்க்கைகளின் தாக்கத்தை மறுக்க முடியாது. தேனீக்கள் சேகரிக்கும் மகரந்தம் குளிர்கால காலத்தில் ஆற்றல் மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் தாவரங்களிலிருந்து மகரந்தத்தைச் சேகரிக்கும் இந்த செயல், உயிரினங்களுக்கு இடையே மரபணுக்களின் இயக்கத்தை எளிதாக்குவதில் மிக முக்கியமான விளைவைக் கொண்டுள்ளது.[13]
புதிய பரிணாம அழுத்தங்கள், பெரும்பாலும் மானுடவியல் வினையூக்கத்தால் , சுற்றுச்சூழல் அமைப்புகளின் பரவலான சரிவை ஏற்படுத்தக்கூடும். வடக்கு அட்லாண்டிக் கடலில், சுற்றியுள்ள கடல் வாழ்விடங்களில் மனித தொடர்புகளின் விளைவுகளைத் தொடர்ந்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. மனித தொடர்புகளால் ஏதோ ஒரு வகையில் எதிர்மறையாகப் பாதிக்கப்படும் வாழ்விடம் அல்லது உணவு மட்ட நிலை இல்லை என்பதையும், இதன் விளைவாக வாழ்க்கையின் பன்முகத்தன்மை குன்றி இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.[14]
மேலும் பார்க்கவும்
தொகு- உயிர் மண்டலம்
- ஏற்றத்தாழ்வு (சூழலியல்)
- சூழலியல்
- பரிணாம உயிரியல்
- மரபணு வேறுபாடு
- இயற்கை
- இயற்கைச்சூழல்
- சிற்றினப் பன்முகத்தன்மை
- நிலையான அபிவிருத்தி
மேற்கோள்கள்
தொகு- ↑ Cunningham, Margaret. "What is Biodiversity? - Definition and Relation to Ecosystem Stability". study.com. DSST Environment & Humanity: Study Guide & Test Prep. பார்க்கப்பட்ட நாள் 29 April 2015.
- ↑ Environmental Science: In context. In Context Series.
- ↑ Purdy, Elizabeth. Encyclopedia of Global Warming & Climate Change.
- ↑ Environmental Science: In Context. In Context Series.
- ↑ Naveh, Z. (1994-09-01). "From Biodiversity to Ecodiversity: A Landscape-Ecology Approach to Conservation and Restoration" (in en). Restoration Ecology 2 (3): 180–189. doi:10.1111/j.1526-100x.1994.tb00065.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1526-100X.
- ↑ "On What Continents Are Bees Not Found?" (in en). https://animals.mom.me/continents-bees-not-found-5374.html.
- ↑ Brodschneider, Robert (2010). "Nutrition and health in Honey bees". Apidologie 41 (3): 278–294. doi:10.1051/apido/2010012. https://www.apidologie.org/articles/apido/pdf/2010/03/m09120.pdf.
- ↑ "Mission 2015: Bee Technology". web.mit.edu. பார்க்கப்பட்ட நாள் 2018-11-30.
- ↑ "Decline of bees forces China's apple farmers to pollinate by hand". chinadialogue.net (in ஆங்கிலம்). 2 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2018-10-31.
- ↑ "Genetic diversity key to survival of honey bee colonies" (in en). https://www.sciencedaily.com/releases/2013/06/130617111341.htm.
- ↑ https://web.archive.org/web/20070930020735/http://gears.tucson.ars.ag.gov/beeclass/Pollination.pdf
- ↑ "Why Bees Are Important to Our Planet - One Green Planet". onegreenplanet.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-06-17. பார்க்கப்பட்ட நாள் 2018-10-31.
- ↑ Liu, Min; Compton, Stephen G.; Peng, Fo-En; Zhang, Jian; Chen, Xiao-Yong (2015-06-07). "Movements of genes between populations: are pollinators more effective at transferring their own or plant genetic markers?". Proceedings of the Royal Society B: Biological Sciences 282 (1808): 20150290. doi:10.1098/rspb.2015.0290. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-8452. பப்மெட்:25948688.
- ↑ Lotze, Heike K.; Milewski, Inka (October 2004). "Two Centuries of Multiple Human Impacts and Successive Changes in a North Atlantic Food Web" (in en). Ecological Applications 14 (5): 1428–1447. doi:10.1890/03-5027. பன்னாட்டுத் தர தொடர் எண்:1051-0761.