ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா
ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Bakau Rajang; ஆங்கிலம்: Rajang Mangroves National Park) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு சதுப்புநில தேசியப் பூங்கா ஆகும். 9374 எக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்கா 2000-ஆம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்டது.[1]
ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா Rajang Mangroves National Park Taman Negara Bakau Rajang | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
நாசா விண்கலத்தின் சதுப்புநிலக் காட்சி | |
அமைவிடம் | சரிக்கே பிரிவு சரவாக் மலேசியா |
அருகாமை நகரம் | சரிக்கே |
ஆள்கூறுகள் | 2°05′N 111°16′E / 2.083°N 111.267°E |
பரப்பளவு | 107 km2 (41 sq mi) |
நிறுவப்பட்டது | 2000 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் Sarawak Forestry Corporation (SFC) |
மற்ற சதுப்புநிலக் காடுகளைப் போல் அல்லாமல், ராஜாங் சதுப்புநிலக் காடுகள் ராஜாங் ஆற்றங்கரையில் 3.5 மீட்டர் வரை உயர்ந்து, 3.65 கிமீ வரை உள்நாட்டுச் சமநிலநிலத்தில் பரவுகின்றன.[2]
பொது
தொகுமண்ணரிப்பு, அலை வெள்ளம் மற்றும் உப்பு ஊடுருவல் ஆகியவற்றில் இருந்து கடற்கரையைப் பாதுகாப்பதில் இந்தச் சதுப்புநில தேசியப் பூங்கா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.[3] தற்போது, இந்தத் தேசிய பூங்கா பொதுமக்களுக்கு இன்னும் திறக்கப்படவில்லை. இந்தப் பூங்காவிற்கு அருகில் உள்ள நகரம் சரிக்கே.
உயிரினங்கள்
தொகுராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா பலவகையான கடல்வாழ் நிலவாழ் உயிரினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியமான உயிரினங்கள்:[4][5]
- தும்பிக்கை குரங்குகள் - (Proboscis monkey)
- வெள்ளி நிற லுத்தோங் குரங்குகள் - (Silvery lutung)
- சிறுத்த பெருநாரை - (Lesser adjutant)
- ஐராவதி ஓங்கில் - (Irrawaddy dolphin)
- இருவாய்ச்சி பறவை - (Hornbill)
- கருவயிற்றுப் பூங்குயில் - (Black-bellied malkoha)
காட்சியகம்
தொகு-
இருவாய்ச்சி பறவை
-
வெள்ளி நிற லுத்தோங் குரங்குகள்
-
ஐராவதி ஓங்கில்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Treasure our Rajang mangroves". WWF Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
- ↑ "Rajang Mangrove rise up to 3.5 meters above the river banks, and cover as far as 3.65 km inland". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
- ↑ "Official Website of Forest Department Sarawak". Forest Department Sarawak. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
- ↑ "Rajang Mangroves | DOPA Explorer". dopa-explorer.jrc.ec.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.
- ↑ "Rajang Mangroves National Park bird checklist - Avibase - Bird Checklists of the World". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.