மாலுடாம் தேசியப் பூங்கா

தேசியப் பூங்கா

மாலுடாம் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Maludam; ஆங்கிலம்: Maludam National Park) என்பது மலேசியா, சரவாக், பெத்தோங் பிரிவு, பெத்தோங் மாவட்டம், மாலுடாம் தீபகற்பத்தில் (Maludam Peninsula) அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா முற்றிலும் தாழ்வான, தட்டையான சதுப்பு நிலக் காடுகளைக் கொண்டுள்ளது.

மாலுடாம் தேசியப் பூங்கா
Maludam National Park
Taman Negara Maludam
Map showing the location of மாலுடாம் தேசியப் பூங்கா Maludam National Park Taman Negara Maludam
Map showing the location of மாலுடாம் தேசியப் பூங்கா Maludam National Park Taman Negara Maludam
அமைவிடம்பெத்தோங் பிரிவு
 சரவாக்
 மலேசியா
அருகாமை நகரம்கூச்சிங்
ஆள்கூறுகள்1°32′56″N 111°05′31″E / 1.549°N 111.092°E / 1.549; 111.092[1]
பரப்பளவு432 km2 (167 sq mi)
நிறுவப்பட்டது2000
நிருவாக அமைப்புசரவாக் வனவியல் கழகம்

இத்தகைய சதுப்பு நிலக்காடுகள் சரவாக்கின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 10% மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும், வணிக, நோக்கம் கொண்ட காட்டு மரம் வெட்டும் தொழில்; மற்றும் தோட்ட விவசாயத்திற்காக இந்தச் சதுப்பு நிலக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.

பொது

தொகு

மாலுடாம் தேசியப் பூங்கா, தற்போது சரவாக் மற்றும் புரூணையில் எஞ்சியிருக்கும் சதுப்பு நிலக் கரி காடுகளின் மிகப்பெரிய ஒற்றைப் பகுதியாக எஞ்சியுள்ளது.

2000-இல் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா 432 சதுர கி.மீ. (167 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது சரவாக்கில் இரண்டாவது பெரிய பூங்காவாகும். இதன் பரப்பளவை மேலும் பெரிதாக்க முன்மொழிவுகள் உள்ளன. பூங்காவில் தற்போது எந்த வசதியும் இல்லை; அதன் காரணமாகப் பார்வையாளர்களுக்கு திறக்கப்படவில்லை.

விலங்கினங்கள்

தொகு

மாலுடாம் தேசியப் பூங்காவில், இன்று உலகில் எஞ்சியிருக்கும் சிவப்பு பட்டை கொண்ட சரவாக் சுரிலி (Sarawak Surili) குரங்குகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. இந்த இனம் உலகின் மிக அழகான குரங்குகளில் ஒன்றாகும். மேலும் இந்தக் குரங்குகள் போர்னியோவிற்கு மட்டுமே சொந்தமான குரங்கினமாகும்.

சரவாக்கில் தும்பிக்கை குரங்குகளின் ஐந்து வாழ்விடங்களில் மாலுடாம் தேசியப் பூங்காவும் ஒன்றாகும். குறிப்பிடத்தக்க அளவில் வெள்ளி நிற லுத்தோங் குரங்குகளும் (Silvery Lutung) உள்ளன. மற்ற பாலூட்டிகளின் பன்முகத்தன்மை இங்கு குறைவாகவே உள்ளது.

பறவைகள்

தொகு

ஆனாலும் கருப்பு நற இருவாய்ச்சி , தூரக்கிழக்கு இருவாய்ச்சி மற்றும் காண்டாமிருக இருவாய்ச்சி, நீலக்காது மீன்கொத்தி, தடித்த அலகு மீன்கொத்தி, பெரிய பச்சைப் புறா, மெலிந்த அலகு காகம், துடுப்பு வால் கரிச்சான் போன்ற ஏராளமான பறவைகள் இந்தப் பூங்காவில் உள்ளன.

எப்போதாவது, அரிதான புயல் நாரைகளையும் மாலுடாம் தேசியப் பூங்காவில் காணலாம்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Maludam National Park protectedplanet.net

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலுடாம்_தேசியப்_பூங்கா&oldid=4083245" இலிருந்து மீள்விக்கப்பட்டது