குப்தப் பேரரசர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

குப்தப் பேரரசு (அண். பொ. ஊ. 319–550) என்பது இந்தியா முழுவதும் பரவியிருந்த பேரரசு ஆகும். இது பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது. முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோர் குப்தப் பேரரசின் மிகுந்த சக்தி வாய்ந்த பேரரசர்கள் ஆவர்.[1]

குடும்பம் தொகு

ஆட்சியாளர்களின் பட்டியல் தொகு

ஆட்சியாளர் ஆட்சி (பொ. ஊ.) குறிப்புகள்
முதலாம் சிறீ குப்தன்   அண். பொ. ஊ. பிந்தைய 3ஆம் நூற்றாண்டு அரசமரபை தோற்றுவித்தவர்.
கடோத்கஜன்   பொ. ஊ. 280/290–319
முதலாம் சந்திர-குப்தன்   பொ. ஊ. 319–335 இவரது பட்டமான மகா ராஜாதி ராஜா அரசமரபின் முதல் பேரரசர் இவர் என பரிந்துரைக்கிறது. லிச்சாவி இளவரசியான குமார தேவியுடனான இவரது திருமணமானது இவரது அரசியல் சக்தியை விரிவாக்க இவருக்கு உதவியது என நவீன கால வரலாற்றாளர்கள் மத்தியில் ஒரு கருத்தியலானது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும், இவர் எவ்வாறு தன்னுடைய சிறிய பூர்வீக இராச்சியத்தை ஒரு பேரரசாக மாற்றினார் என்பது தெரியவில்லை.
சமுத்திர-குப்தன்   பொ. ஊ. 335–375 இவர் வட இந்தியாவின் பல மன்னர்களை தோற்கடித்தார். அவர்களது நிலப் பரப்புகளை தன்னுடைய பேரரசுடன் இணைத்தார். இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையின் பக்கவாட்டிலும் கூட இவர் அணி வகுத்தார். பல்லவ இராச்சியம் வரை முன்னேறினார். இதனுடன் எல்லைப் புறத்தில் இருந்த இராச்சியங்கள் மற்றும் பழங்குடியின சிலவர் ஆட்சி அமைப்புகளில் பலவற்றையும் இவர் அடி பணிய வைத்தார். மேற்கில் இராவி ஆறு முதல் கிழக்கில் பிரம்மபுத்திரா ஆறு வரையிலும், வடக்கே இமயமலை அடி வாரம் முதல் தென்மேற்கே நடு இந்தியா வரையிலும் இவரது பேரரசானது விரிவடைந்திருந்தது; தென்கிழக்கு கடற்கரையின் பக்கவாட்டில் இருந்த ஏராளமான ஆட்சியாளர்கள் இவருக்கு திறை செலுத்தி வந்தனர்.
கச்சன்   பொ. ஊ. நடு 4ஆம் நூற்றாண்டு எதிரி சகோதரன் அல்லது மன்னன், அனேமாக ஆட்சியை முறையின்றி கைப்பற்றியவன், இவனை ஆட்சியாளராக குறிப்பிடும் நாணயங்கள் உள்ளன; சமுத்திரகுப்தரும் இவரும் ஒரு வேளை ஒரே நபராக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இராம-குப்தன்
இரண்டாம் சந்திர-குப்த விக்கிரமாதித்தன்   பொ. ஊ. 375–415 தனது தந்தை சமுத்திரகுப்தரின் விரிவாக்கக் கொள்கையை தொடர்ந்தார்; வரலாற்று ஆதாரங்கள் இவர் மேற்கு சத்ரபதிகளைத் தோற்கடித்தார் என்று பரிந்துரைக்கின்றன, மற்றும் மேற்கே சிந்து ஆறு முதல் கிழக்கே வங்காளம் வரையிலும், வடக்கே இமயமலை அடி வாரம் முதல் தெற்கே நருமதை வரையிலும் குப்தப் பேரரசை விரிவாக்கினார்.
முதலாம் குமார-குப்தன்   பொ. ஊ. 415–455 தான் பெற்ற நிலப்பரப்பின் கட்டுப்பாட்டு இவர் பேணி வந்தார் என்று தோன்றுகிறது. இது மேற்கே குசராத்து முதல் கிழக்கே வங்காளம் வரை பரவியிருந்தது.
ஸ்கந்த-குப்தன்   பொ. ஊ. 455–467 குப்த குடும்பத்தை துரதிஷ்ட நிலையில் இருந்து இவர் மீட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவரின் கடைசி ஆண்டுகளின் போது பேரரசானது கடினமான சூழ்நிலைகளில் இருந்தது என்பதை பரிந்துரைப்பதற்கு இது வழி வகுத்தது. ஒரு வேளை புஷ்யமித்திரர் மற்றும் ஊணர்களின் தாக்குதலுக்கு பேரரசு உள்ளாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. கடைசி பெரும் குப்த பேரரசராக இவர் பொதுவாகக் கருதப்படுகிறார்.
புரு-குப்தன் பொ. ஊ. 467–473
இரண்டாம் குமார-குப்த கிரமாதித்தன்   பொ. ஊ. 473–476
புத்த-குப்தன்   பொ. ஊ. 476–495 கன்னோசியின் ஆட்சியாளர்களுடன் இவர் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். இவர்கள் இணைந்து வட இந்தியாவின் செழிப்பான சமவெளிகளிலிருந்து அல்சோன் ஊணர்களை (ஹூணர்கள்) விரட்டியடிக்க விரும்பினர்.
நரசிம்ம-குப்த பாலாதித்தன்   பொ. ஊ. 495–530
மூன்றாம் குமார-குப்தன் பொ. ஊ. 530–540
விஷ்ணு-குப்த சந்திராதித்தன்   பொ. ஊ. 540–550

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. N. Jayapalan, History of India, Vol. I, (Atlantic Publishers, 2001), 130.