குப்பாங் (மலாய்: Kupang; ஆங்கிலம்: Kupang; சீனம்: 古邦) என்பது மலேசியா, கெடா, பாலிங் மாவட்டத்தில் (Baling District) உள்ள ஒரு நகரம். தாய்லாந்து நாட்டின் தெற்கே இருக்கும் பெத்தோங் நகருக்கு மிக அருகில் இந்தப் குப்பாங் நகரம் அமைந்து உள்ளது. சுங்கை பட்டாணி நகரில் இருந்து 48 கி.மீ.; பாலிங் நகரில் இருந்து 7 கி.மீ. வடக்கே உள்ளது.[1]

குப்பாங்
Kupang
கெடா
கெடா மாநிலத்தில் குப்பாங் அமைவிடம்
கெடா மாநிலத்தில்
குப்பாங் அமைவிடம்
குப்பாங் is located in மலேசியா
குப்பாங்
குப்பாங்
      குப்பாங்
ஆள்கூறுகள்: 5°32′42″N 100°53′09″E / 5.54500°N 100.88583°E / 5.54500; 100.88583
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்பாலிங்
நாடாளுமன்றம்பாலிங் (மக்களவை தொகுதி)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
09100
மலேசிய தொலைபேசி எண்+6-0476xxxx
மலேசிய போக்குவரத்து பதிவெண்K

குபாங் நகரம் பினாங்கு-கிளாந்தான் நெடுஞ்சாலை 4 (Penang-Kelantan Highway Federal Route 4); மற்றும் சுங்கை பட்டாணி-பாலிங் நெடுஞ்சாலை 67 (Sungai Petani-Baling Highway Federal Route 67) ஆகியவற்றின் சந்திப்பில் அமைந்துள்ளது. கூட்டரசு சாலை 67-ஐ; பாலிங் சாலை என்றும் அழைப்பது உண்டு.[2]

பொது

தொகு

இந்தப் பகுதியில் முக்கியமான ஆறுகளில் ஒன்றான கெட்டில் ஆற்றின் (Sungai Ketil) துணை ஆறான குப்பாங் ஆற்றின் (Sungai Kupang) பெயரால் இந்த நகரத்திற்கும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

பாலிங், குப்பாங் நகரில் தமிழர்கள் 100 பேருக்கும் குறைவாக வாழ்கிறார்கள். முன்பு இங்கு ரப்பர், செம்பனை தோட்டங்கள் இருந்தன.

இங்கு ஓர் இந்து சமய ஆலயம் உள்ளது. அதன் பெயர் குப்பாங் மகாமாரியம்மன் ஆலயம். இந்துக்களின் முக்கியமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.[3]

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

பாலிங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது. அவற்றில் குப்பாங் ஒரு முக்கிம் ஆகும்.

  • பாக்காய் (Bakai)
  • பொங்கோர் (Bongor)
  • பாலிங் நகரம் (Baling Town)
  • குப்பாங் (Kupang)
  • பூலாய் (Pulai)
  • சியோங் (Siong)
  • தாவார் (Tawar)
  • தெலோய் கானான் (Teloi Kanan)

குப்பாங் தமிழ்ப்பள்ளி

தொகு

கெடா; பாலிங் மாவட்டத்தில் (Baling District) 10 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் குப்பாங் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் 12 மாணவர்கள் பயில்கிறார்கள். 7 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[4]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
KBD0058 குப்பாங் SJK(T) Ldg Kupang[5] குப்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 09200 குப்பாங் 12 7

மேற்கோள்கள்

தொகு
  1. "48 Km - Distance from kupang Kedah Malaysia to Sungai Petani Kedah Malaysia". www.distancesfrom.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.
  2. "Kupang is a small town in Baling District, Kedah. It is located on Federal Route 67, also known as Jalan Baling. The town was named after a river, Sungai Kupang, which is a tributary to Sungai Ketil". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.
  3. Pullavarayar, Vinnith. "Kupang Mariamman Temple, the only temple in the district. Kupang, a hamlet within the Baling district of Kedah, houses a minimal population of Malaysians of the Indian ethnicity". பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.
  4. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  5. "SJKT Ladang Kupang, is a Tamil National Type School located in Kupang, Baling, Kedah". sjktldgkualaketil.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பாங்&oldid=3730685" இலிருந்து மீள்விக்கப்பட்டது