குருவாயூரப்பன் கோவில், மார்கன்வில், நியூ ஜெர்சி

அருள்மிகு குருவாயூரப்பன் கோவில் என்னும் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் நியூ ஜெர்சியின் மார்கன்வில் நகரம், உல்லிடவுன் சாலையில் அமைந்துள்ள ஒர் இந்துக் கோவிலாகும்.[1]. 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலைச் சுற்றி பசுமையான புல்வெளிகள் மற்றும் காடுகள் அமைந்துள்ளன[2].

அருள்மிகு குருவாயூரப்பன் கோவில், மார்கன்வில், நியூ ஜெர்சி
அமைவிடம்
நாடு:அமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்:நியூ ஜெர்சி
அமைவு:மார்கன்வில்
ஏற்றம்:58 m (190 அடி)
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை

கோவில் அமைப்பு தொகு

இக் கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலை உடையது. கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுறுத்தும் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. உயரமான படிக்கட்டுகள் வழியே சென்றால் கோபுர வாயிலை அடையலாம். கோபுரத்தின் முன்னர் உயர்ந்த கொடிமரம் உள்ளது. பக்கவாட்டு நுழைவாயில் வழியே கோவிலுக்குள் செல்லலாம். கோவிலின் மகாமண்டபத்திற்கு செல்ல படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.[3]

அருள்மிகு குருவாயூரப்பன் இக்கோவிலின் மூலவர் ஆவார். சிவலிங்கம், ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடேஸ்வரர், ஐயப்பன் மற்றும் சத்தியநாராயண ஸ்வாமி உள்ளிட்ட துணை தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. கன்யாகா பரமேஸ்வரி, துர்கா, காயத்திரி, சிவகாமியுடன் நடராஜர், மகாகணபதி, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், இலட்சுமணருடன் பத்ராசல சீதா இராமர், இராதே கிருஷ்ணர், ஆண்டாள், அன்னாவர சுவாமிகள், ஹனுமன், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கும் இங்கு துணை சன்னதிகள் உள்ளன. அனைத்து சன்னதிகளும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றுப் பாதைகளில் பகவத் கீதை ஆங்கிலம் மற்றும் சமசுகிருதத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

வரலாறு தொகு

1988 ஆம் ஆண்டு இந்து அமெரிக்கன் கோயில் மற்றும் கலாச்சார மையம் (Hindu American Temple and Cultural Center, Inc.) தோற்றுவிக்கப்பட்டது. இந்த இந்துமத அமைப்பு நியூ ஜெர்சிமாநிலம், மார்கன்வில்லில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலின் குடமுழுக்கு 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த அமைப்பைச் சேர்ந்த கோவில் அறக்கட்டளை வாரியம் இக்கோவிலை நிர்வகித்து வருகிறது.[4]

தினசரி வாராந்திர கோவில் நிகழ்வுகள் தொகு

இக்கோயில் வாரநாட்களில் காலையில் ௦8.30 மணி முதல் 11.30 வரையும், மாலையில் 04.30 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். மற்றும் வார இறுதி மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் காலையில் 08.30 மணி முதல் 08.30 மணி வரையும் திறந்திருக்கும். ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம், குருவாயூரப்பன் நிர்மால்ய தரிசனம், அபிசேகம், சீவாலி, கணபதி ஹோமம், சுதர்ஷ்ண ஹோமம், சண்டி பாராயணம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமபாராயணம், அத்தாழ பூசை ஆகியன இக்கோவிலில் அன்றாடம் நடைபெறுகின்றன. திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தெய்வங்களுக்கான சிறப்பு அபிசேகங்களும், அனுமன் சாலிசா, லலிதா சஹஸ்ரநாம பராயணங்களும் நடைபெறுகின்றன.[5]

கூடுதல் வசதிகள் தொகு

இங்குள்ள பழைய கோவில் வளாகத்தில் சரஸ்வதி வித்யாலயா என்ற பள்ளி அமைந்துள்ளது. இங்கு சிறுவர் சிறுமியருக்கான நடனம், வாய்ப்பாட்டு, தியானம், சமசுகிருதம் ஆகிய வகுப்புகள் இலவசமாக நடைபெறுகின்றன.[6] இந்த கோவிலின் வளாகத்தில் ஒரு பசுக்கள் காப்பகம் (கோசாலை) உள்ளது.[7] இந்த கோவிலின் வளாகத்தில் சிற்றுண்டிச் சாலையும் (Bhojanshala) உள்ளது.

  1. Sri Guruvayurappan Temple (krishnatemple.org) https://www.krishnatemple.org/. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. "Krishna Temple of Morganville, NJ". Sai Chntala's Blog. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
  3. ச., பொன்ராஜ் (ஜூன் 28,20217). "ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம், நியூஜெர்ஸி, அமெரிக்கா". தினமலர். https://www.dinamalar.com/nri/details.asp?id=10879&lang=ta. பார்த்த நாள்: 31 March 2022. 
  4. "Trustees". Sri Guruvayurappan Temple (krishnatemple.org). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
  5. "Daily Events". Sri Guruvayurappan Temple (krishnatemple.org)). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
  6. "Saraswati Vidyalaya (Educational Classes)". Sri Guruvayurappan Temple (krishnamandir.org). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
  7. "Goshala". Sri Guruvayurappan Temple (krishnamandir.org). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.