குர்து பெண்கள்

குர்து பெண்கள் (குர்தி மொழி: ژنانی کورد) அரபுச் சமூகப் பெண்கள் அல்லாது, பாரம்பரியமாக குர்து பெண்கள், ஆண்களுக்கு இணையாக சமூகம் மற்றும் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.[1] பொதுவாக குர்திஷ் சமூகத்திற்குள் உள்ள முற்போக்கான இயக்கங்கள் காரணமாக குர்து பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் 21ம் நூற்றாண்டில் வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளது.[2] பெண்கள் முன்னேற்றம் இருந்தபோதிலும், குர்திஷ் மற்றும் சர்வதேச பெண்கள் உரிமை அமைப்புகள் பாலின சமத்துவமின்மை, கட்டாயத் திருமணங்கள், ஆணவக் கொலைகள் மற்றும் ஈராக் குர்திஸ்தானில், பெண் பிறப்புறுப்புச் சிதைவு தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே உள்ளது.[3][4][5][6][7]

துருக்கியில் குர்து இனப் பெண்கள்

தொகு

1919ல், குர்திஷ் பெண்கள் இஸ்தான்புல் நகரத்தில் "குர்திஷ் பெண்களின் முன்னேற்றத்திற்கான சமூகம்" என்ற தங்களது முதல் அமைப்பை உருவாக்கினர்.[8]

1925-1937 கிளர்ச்சிகளின் போது, இராணுவம் குர்திஷ் பெண்களை குறிவைத்தது, அவர்களில் பலர் கற்பழிப்பு மற்றும் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொண்டனர்.[9]

2002ல் இருந்து துருக்கியில் இஸ்லாமிய பழமைவாத நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (AKP) அதிகாரத்திற்கு வந்தது. அது சமூகத்தில் பெண்களின் பங்கு பற்றிய ஒரு பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு வந்தது. துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் "தாய்மையை நிராகரிக்கும் ஒரு பெண், வீட்டைச் சுற்றி இருப்பதைத் தவிர்த்து, தனது வேலை மற்றும் வாழ்க்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்தாலும் குறைபாடுடையவள், முழுமையற்றவள்" என இழிவான முறையில் தெரிவித்தார்.[10]

சமகால வளர்ச்சிகள்

தொகு

1978ல் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) நிறுவப்பட்டதிலிருந்து குர்திஷ் பெண்களிடையே அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளது. பெண்கள் இக்கட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக குர்து பெண்கள் இருந்தனர்.[11]இக்கட்சியில் பெண்கள் சேர்வதற்கான உந்துதல் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது: "பெண்கள் வறுமையிலிருந்து தப்பிக்க குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியில் இணைகிறார்கள். குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பழமைவாத சமூகத்திலிருந்து அவர்கள் வெளியேறுகிறார்கள். பெண் போராளிகள் பல்கலைக்கழக பட்டதாரிகளாக உள்ளனர். அவர்கள் குர்திஷ் வரலாறு மற்றும் ஓகாலன் ஆகியவற்றைப் படிக்கிறார்கள். அதே போல் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் அடிப்படையிலான மார்க்சிஸ்ட் கோட்பாடுகள், மேலும் சண்டையிடுவதை ஒரு உடல் பயிற்சியாகவும் மற்றும் ஒரு அறிவுசார் பயிற்சியாகவும் கருதுகின்றனர். பலர் சிறையில் உள்ள உறவினர்கள் காரணமாக இணைகிறார்கள். மேலும் சிலர் சிறையைத் தவிர்ப்பதற்காக இணைகிறார்கள்."

1990களின் நடுப்பகுதியில், ஆயிரக்கணக்கான பெண்கள் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தனர், மேலும் துருக்கியின் முக்கிய ஊடகங்கள் அவர்களை "விபச்சாரிகள்" என்று இழிவுபடுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்கின.[12] 1996ம் ஆண்டில், குர்திஷ் பெண்கள் தங்கள் சொந்த பெண்ணிய சங்கங்கள் மற்றும் ரோசா மற்றும் ஜூஜின் போன்ற பத்திரிகைகளை உருவாக்கினர். 2013ல், தி கார்டியன் நாளிதழ், 'துருக்கியில் குர்திஷ் பெண் கைதிகளை பலாத்காரம் மற்றும் சித்திரவதை செய்வது கவலையளிக்கும் வகையில் பொதுவானது' என்று கூறியது.[13]

இருப்பினும் எட்டு குர்து இனப் பெண்கள் 2007 துருக்கி நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.[14][15] அவர்கள் துருக்கிய நாடாளுமன்றத்தில் நுழைந்த பிறகு ஜனநாயக சங்கக் கட்சியில் சேர்ந்தனர்.

2012ல் குர்து சார்பு கொண்ட பெண்ணிய மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவப்பட்டது. பாலினப்படுகொலை மற்றும் நிறுவன ரீதியான பாலின பாகுபாடுகளை களைய மகளிர் நல அமைச்சகம் உறுதியளிக்கிறது. பொறுப்பு மற்றும் பிரதிநிதி அலுவலகத்தின் அனைத்து நிலைகளுக்கும் பெண் மற்றும் ஆண் இணைத் தலைவர்கள் உள்ளனர். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் பெண்ணியவாத (அத்துடன் LGBT) வேட்பாளர்களுடன் பெண்ணிய மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டு சேர்ந்தது. [16] ஜூன் 2015 தேர்தலில் பெண்ணிய மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி பன்னாட்டுப் பத்திரிகைகளில் "புரட்சிகரமானது" என்று பாராட்டப்பட்டது.

டிசம்பர் 2016ல், தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், துருக்கிய குர்திஸ்தானின் நிலைமையை, "துருக்கியில் குர்து பெண்கள் மீதான ஒடுக்குமுறை, பாலின சமத்துவத்தின் புகலிடத்தை அச்சுறுத்துகிறது" என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.[17]தியர்பாகிர் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரும், குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி விமர்சகருமான வஹாப் கோஸ்குன், அபோயிஸ்ட் குர்து கட்சிகள் பெண்களை ஊக்குவிப்பது துருக்கி முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஒப்புக்கொள்கிறார்: "மேற்கு துருக்கியிலும் அதிகமான பெண் வேட்பாளர்களை அறிவிக்க மற்ற அரசியல் கட்சிகளையும் இது பாதித்தது. இது சமூக வாழ்வில் பெண்களின் தெரிவுநிலையையும், அரசியல் வாழ்வில் பெண்களின் செல்வாக்கையும் அதிகரித்துள்ளது." இதனால் துருக்கியின் ஆளும் இஸ்லாமிய பழமைவாத நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சியிலும் கூட பெண் அரசியல் வேட்பாளர்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றனர்.

குர்துகள் ஆதிக்கம் செலுத்தும் தென்கிழக்கில், பெண்கள் மத்தியில், 2000ம் ஆண்டில் கல்வியறிவின்மை விகிதம் ஆண்களை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.[18]குறிப்பாக நாட்டின் கிழக்கில் நிலைமை மோசமாக உள்ளது.

மேலும் தென்கிழக்கு துருக்கியில், பிபிசியின் அறிக்கையின்படி, அனைத்து திருமணங்களில் கிட்டத்தட்ட கால் பங்கு பலதார மணம் கொண்டதாக உள்ளது. துருக்கியில் இது சட்டவிரோதமானது என்றாலும், நடைமுறையில் பலதார மணம் தொடர அனுமதிக்கப்படுகிறது. தென்கிழக்கு அனத்தோலியா போன்ற தொலைதூரப் பகுதிகளில், "பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்களில் தலையிடுவதன் மூலம் துருக்கி குர்து பிரிவினைவாதிகளை எதிர்க்கும் அபாயம் உள்ளது" என்று பிபிசியில் நிக் ரீட் எழுதினார். பலதார திருமணம் தடைசெய்தாலும், "ஆழ்ந்த மத நம்பிக்கை மற்றும் கிராமப்புற குர்து பிராந்தியமான தென்பகுதியில் பலதார திருமணம் பரவலாக உள்ளது" என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் குர்து இனப் பெண்கள்

தொகு

சிரிய உள்நாட்டுப் போரின் போது, வடக்கு சிரியாவில் உள்ள குர்து மக்கள் வசிக்கும் ரோஜாவா எனப்படும் சிரியா குர்திஸ்தான் பகுதி சுயாட்சியைப் பெற்றது. இங்கு முற்போக்கு ஜனநாயக யூனியன் கட்சி (PYD) அதிகாரத்தில் உள்ளது. குர்து பெண்கள் ரோஜாவாவில் ஆயுதம் மற்றும் ஆயுதமற்ற அமைப்புகளைக் கொண்டுள்ளனர். மேலும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவது அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சி நிரலின் முக்கிய மையமாகும். பெண்கள் பாதுகாப்பு பிரிவுகளில் (YPJ) உள்ள குர்திஷ் பெண் போராளிகள் கோபானி முற்றுகையின் போது முக்கிய பங்கு வகித்தனர் மற்றும் சிஞ்சார் மலைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கும் யாசிதி மக்ககளை மீட்பதில் முக்கிய பங்கு வகித்தனர். சிரியாவில் குர்து ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (PYD) பெண்கள் போர்ப் படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பிரிவுகள் (YPJ) என்று அழைக்கப்படும் இந்த படை போர்க்களத்தில் அவர்களின் துணிச்சலுக்காக பாரட்டபட்டது. குர்து பெண் வீரர்கள் 100க்கும் மேற்பட்ட இசுலாமிய அரசுப் போராளிகளை கொன்றது. இஸ்லாமிய அரசுப் போராளிகளுக்கு எதிராகப் போராடும் குர்து படையில் 40% வரை குர்து பெண்களால் ஆனது.

சிரியாவின் சிவில் சட்டங்கள் ரோஜாவாவில் செல்லுபடியாகும், அவை ரோஜாவாவின் அரசியலமைப்புடன் முரண்படவில்லை. இருப்பினும் பெண்களுக்கு முழுமையான சமத்துவத்தை அறிவிக்கப்பட்டதுடன், கட்டாயத் திருமணம் மற்றும் பலதார மணம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. சிரிய வரலாற்றில் முதன்முறையாக, சிவில் திருமணம் அனுமதிக்கப்படுகிறது மற்றும் ஊக்குவிக்கப்படுகிறது. இது ஒரு மதச்சார்பற்ற திறந்த சமூகத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க நகர்வு மற்றும் வெவ்வேறு மத பின்னணியில் உள்ள மக்களிடையே கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கிறது.

குழந்தை திருமணம், பலதார மணம் மற்றும் கவுரவக் கொலைகள் போன்றவற்றைக் குறைப்பதற்கான சட்ட முயற்சிகள் விரிவான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களால் ஆதரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் பெண்கள் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இவை பெண்களால் நடத்தப்படும் சமூக மையங்கள், குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் பிற வகையான தீங்குகளில் இருந்து தப்பியவர்களுக்கு சேவைகளை வழங்குகின்றன. இந்த சேவைகளில் ஆலோசனை, குடும்ப மத்தியஸ்தம், சட்ட ஆதரவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வீடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை அடங்கும். பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக வலுவூட்டல் திட்டங்கள் குறித்த வகுப்புகளும் பெண்கள் இல்லங்களில் நடத்தப்படுகின்றன.

ரோஜாவாவில் உள்ள அனைத்து நிர்வாக உறுப்புகளுக்கும் ஆண் மற்றும் பெண் இணைத் தலைவர்கள் இருக்க வேண்டும், மேலும் ரோஜாவாவில் உள்ள எந்த ஆளும் குழுவின் உறுப்பினர்களில் நாற்பது சதவிகிதம் பெண்களாக இருக்க வேண்டும். ரோஜாவா மாகாணத்தில் உள்ள அசாயிஷ் போலீஸ் படையில் 25 சதவீதம் பேர் பெண்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அசாயிஷில் சேருவது குர்திஷ் இன மற்றும் அரபு இன பெண்களுக்கு மிகவும் ஆணாதிக்க பின்னணியில் இருந்து தனிப்பட்ட மற்றும் சமூக விடுதலைக்கான மிகப்பெரிய செயலாக சர்வதேச ஊடகங்களில் விவரிக்கப்படுகிறது.

"பெண்களை அடைத்து வைத்திருக்கும் மரியாதை அடிப்படையிலான மத மற்றும் பழங்குடி விதிகளை உடைக்க முயற்சிப்பது" என்ற முற்போக்கு ஜனநாயக யூனியன் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலானது சமூகத்தின் பழமைவாத பகுதிகளில் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Latif Tas (22 April 2016). Legal Pluralism in Action: Dispute Resolution and the Kurdish Peace Committee. Routledge. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1317106159.
  2. "Kurdish women's movement reshapes Turkish politics – Al-Monitor: the Pulse of the Middle East" (in en-us). Al-Monitor இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304095134/http://www.al-monitor.com/pulse/originals/2015/03/turkey-women-in-middle-east-figen-yuksekdag.html. 
  3. Begikhani, Nazand (24 January 2015). "Why the Kurdish Fight for Women's Rights Is Revolutionary". Huffingtonpost. http://www.huffingtonpost.com/dr-nazand-begikhani/kurdish-women-rights-fight_b_6205076.html. 
  4. "COMPARING IRAN AND TURKEY IN TERMS OF WOMEN RIGHTS". www.academia.edu. https://www.academia.edu/6519589. 
  5. survival, cultural. "Law and Women in the Middle East". Cultural Survival. https://www.culturalsurvival.org/ourpublications/csq/article/law-and-women-middle-east. 
  6. Shahidian, Hammed (2002). Women in Iran: Gender politics in the Islamic republic (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-31476-6. women's rights have been threatened by Islamic influence in iran.
  7. Charter for the Rights and Freedoms of Women in the Kurdish Regions and Diaspora (in ஆங்கிலம்). Kurdish Human Rights Project. 2004. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-900175-71-5.
  8. Alakom, Rohat (1995), Kurdish women, A New Force in Kurdistan, Sweden: Spånga Publishers
  9. MacDowall, David (2004), A Modern History of the Kurds (3rd ed.), London: I.B. Tauris, pp. 207–210, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85043-416-6
  10. Cookman, Liz (24 November 2006). "Women and vulnerable people are paying for Turkey's authoritarianism". The Guardian. https://www.theguardian.com/commentisfree/2016/nov/24/women-vulnerable-turkey-child-rape. 
  11. Jenna Krajeski (30 January 2013). "Kurdistan's Female Fighters". The Atlantic.
  12. Joseph, Suad; Najmābādi, Afsāneh, eds. (2003), "Kurdish Women", Encyclopaedia of women & Islamic cultures, Boston MA USA: Brill Academic Publishers, pp. 361–362, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-13247-3
  13. Duzgun, Meral (2013-06-10). "Turkey: a history of sexual violence | Global Development Professionals Network | Guardian Professional". Theguardian.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-03.
  14. Robins-Early, Nick (8 June 2015). "Meet The Pro-Gay, Pro-Women Party Shaking Up Turkish Politics". The Huffington Post. http://www.huffingtonpost.com/2015/06/08/turkey-hdp-party_n_7537648.html. 
  15. Brooks-Pollock, Tom (25 May 2015). "Turkey now has its first ever gay parliamentary candidate" (in en-GB). The Independent. https://www.independent.co.uk/news/uk/first-ever-openly-gay-parliamentary-candidate-stands-for-election-in-turkey-10274746.html. 
  16. "Kurdish women's movement reshapes Turkish politics". Al-Monitor. 25 March 2015 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304095134/http://www.al-monitor.com/pulse/originals/2015/03/turkey-women-in-middle-east-figen-yuksekdag.html. 
  17. Nordland, Rob (7 December 2016). "Crackdown in Turkey Threatens a Haven of Gender Equality Built by Kurds". New York Times. https://www.nytimes.com/2016/12/07/world/middleeast/turkey-kurds-womens-rights.html. 
  18. Martens, Michael; Istanbul (2010-10-20). "Bevölkerungsentwicklung: Schafft auch die Türkei sich ab?" (in de). FAZ.NET. https://www.faz.net/1.1055955. "Bei den Frauen war die Analphabetenrate im Jahr 2000 fast durchweg dreifach so hoch wie bei Männern. Wiederum bot sich besonders im Osten des Landes ein erschreckendes Bild: In Sirnak konnten 66, in Hakkari 58 und in Siirt 56 Prozent der Frauen im Alter von 15 Jahren an nicht lesen und schreiben. In anderen Provinzen der Gegend sah es kaum besser aus." 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்து_பெண்கள்&oldid=3663236" இலிருந்து மீள்விக்கப்பட்டது