குவாகம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

குவாகம் (Kuvagam) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[4][5]

குவாகம்
குவாகம்
இருப்பிடம்: குவாகம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°16′57″N 79°17′07″E / 11.282605°N 79.285219°E / 11.282605; 79.285219
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்பு தொகு

  1. ஒவ்வொரு வருடத்திற்கு ஒருமுறை சித்திரைமாதத்தில் திரெளபதிம்மனுக்கு தீ மிதி  திருவிழா நடைபெறுகிறது.
  2. ஆண்டுதோறும் மாரியம்மனுக்கு பால்குட திருவிழா நடைபெறுகிறது.
  3. வருடத்தோறும் காமன் பண்டிகை (மன்மதனை சிவன் எரித்தது.) நடைபெறுகிறது.
  4. கொங்கணர் வனப்பகுதியில் கோவில் கொண்டு இருக்கும் பழனியாண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருநாளில் சுமார் 10 ஊர்மக்கள் ஓன்றுகூடுவார்கள். இந்த விழா வெகுவிமர்சையாக வருடந்தோறும் நடைபெறுகிறது.
  5. விருதாச்சலம் கோவில் கொண்டுள்ள பழமலைநாதர் என்கின்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் மாசிமகத்தன்று கொடியேற்று விழாவும் கொடி இறக்கமும் இவ்வூரின் மண்டகப்படி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது

போக்குவரத்து தொகு

  • அருகில் உள்ளன விமான நிலையம், திருச்சி விமானநிலையம் ஆகும்.
  • அரியலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகியவை ஜெயங்கொண்டத்திக்கு அருகில் உள்ள இரு முக்கிய ரயில் நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வர ரயில்கள் இயக்கப்படுகிறது.
  • ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து இயக்கப்படுகிறது.

பள்ளிகள் தொகு

  • அரசு உயர் நிலைப்பள்ளி

மருத்துவமனை தொகு

  • அரசு கால்நடை மருத்துவமனை.

முக்கிய திருவிழாக்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாகம்&oldid=3550799" இலிருந்து மீள்விக்கப்பட்டது