குவாசா கலீம்

இந்திய அரசியல்வாதி

குவாசா கலீம் (Khwaja Haleem) இந்திய நாட்டின் அரசியல்வாதி ஆவார்.

குவாசா கலீம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1985
பின்னவர்பல்தேவ் சிங்
தொகுதிஅலிகார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28-சூலை-1944
இறப்பு15-பெப்ரவரி-2018 (வயது 73)
தில்லி
அரசியல் கட்சிசமாசுவாதி கட்சி
முன்னாள் கல்லூரிஅலிகார் முசுலிம் பல்கலைக்கழகம்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

குவாசா கலீம் ஒரு முக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது மாமா சமால் குவாசா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1969 ஆம் ஆண்டு அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார் [1]

தொழில் தொகு

இந்திய இளைஞர் காங்கிரசில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். லோக்தளம் என்ற கட்சியில் சேர்ந்தார். 1980 ஆம் ஆண்டு அலிகாரில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமாசுவாதி கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். [2]

1994 ஆம் ஆண்டு, சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு சமாசுவாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். [3]

இறப்பு தொகு

மாரடைப்பு ஏற்பட்டு சவகர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இறந்தார். [4] சா சமாலில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பர்கத்துல்லா கானின் மகள் குவாசா நசீனை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். [6]

மேற்கோள்கள் தொகு

  1. "UP ex-minister and SP leader Khwaja Haleem dies at 75". The Tribune. 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
  2. "सरल और सादगी के मिसाल थे पूर्व मंत्री ख्वाजा हलीम". Hindustan (in இந்தி). 2022-02-15. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
  3. "Azam Khan picks man expelled from SP for Haj panel". The Indian Express (in ஆங்கிலம்). 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28.
  4. "UP ex-minister and SP leader Khwaja Haleem dies at 75". The Tribune. 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28."UP ex-minister and SP leader Khwaja Haleem dies at 75". The Tribune. 2018-02-16. Retrieved 2023-07-28.
  5. "सरल और सादगी के मिसाल थे पूर्व मंत्री ख्वाजा हलीम". Hindustan (in இந்தி). 2022-02-15. பார்க்கப்பட்ட நாள் 2023-07-28."सरल और सादगी के मिसाल थे पूर्व मंत्री ख्वाजा हलीम". இந்துசுதான் (in Hindi). 2022-02-15. Retrieved 2023-07-28.
  6. (in hi). https://www.livehindustan.com/uttar-pradesh/aligarh/story-vacancy-of-former-minister-of-state-khwaja-haleem-1805361.html. पूर्व केबिनेट मंत्री ख्वाजा हलीम का इंतकाल [Death of former cabinet minister Khwaja Haleem]. இந்துசுதான் (செய்தித்தாள்) (in Hindi). Retrieved 2023-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாசா_கலீம்&oldid=3764740" இலிருந்து மீள்விக்கப்பட்டது