கூகலூர் (ஆங்கிலம்: Kuhalur ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கூகலூர் பேரூராட்சிக்கு தென்கிழக்கில் 37 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது.

கூகலூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கோபிச்செட்டிப்பாளையம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 11,753 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + ஊர் = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.

அமைவு

தொகு

கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் கூகலூர் அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி.

உள்ளடக்கம்

தொகு

கூகலூர் என்ற பேரூராட்சி, வள்ளலார் குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது கூகலூர் கிராமம்.

கல்வி, ஒரு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் கூகலூர்.

நீர் வளம்

தொகு

விவசாயத்திற்காக பவானி ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை (கொங்குத் தமிழ்) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் மஞ்சள், நெல்,கரும்பு,வாழை போன்றவற்றை பயர் செய்து வருகின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,628 வீடுகளும், 11,753 மக்கள்தொகையும் கொண்டது.[3] [4]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Kuhalur Population Census 2011
  4. [https://www.census2011.co.in/data/town/803524-kuhalur-tamil-nadu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகலூர்&oldid=2916961" இலிருந்து மீள்விக்கப்பட்டது