கூடநாணல்
கூடநாணல் (Kooda Nanal) தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தேர்வுநிலை பேரூராட்சியின் 15 ஆம் வார்டு இக்கிராமத்திற்குரியதாகும். இந்த ஊரானது திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள முதல் ஊராகும். கடுங்கால் வாய்க்காலுக்கும், பிள்ளைவாய்க்காலுக்கும், இடைப்பட்ட நிலப்பகுதியில் இவ்வூர் அமைந்துள்ளது. மக்கள் வசிப்பிடத்தால் வடக்குக் கூடநாணல் என்றும் தெற்குக் கூடநாணல் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
கூடநாணல் | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 10°50′20.1978″N 78°57′35.6358″E / 10.838943833°N 78.959898833°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
இதிகாசத்தொடர்பு
தொகுபஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்று மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் கண்ட இடம் கண்டமங்கலம் என்றும் கூடியது கூடநாணலில் என்றும் முன்னோர்களின் கர்ணபரம்பரைச் செய்தி உள்ளது.[சான்று தேவை]
மக்கள்
தொகுஇந்துக்களே பெரும்பான்மையும் வசிக்கிறார்கள். விவசாயம் இவ்வூர் மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக உள்ளது. நெல், கரும்பு, வாழை முதலானவை சாகுபடி செய்யப்படுகின்றன.
மக்கள்தொகை
தொகுஇவ்வூரில் சுமார் 685 பேர் வசித்து வருகின்றனர். அதில் 18 வயதிற்கு மேலானவர்கள் 505 பேர் உள்ளனர்.
கல்வி
தொகுஇவ்வூரில் ஒரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு அங்கன்வாடி பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
கோயில்கள்
தொகுவடக்குக்கூடநாணலில், இரட்டைப்பிள்ளையார், சாம்பான், சங்கிலிகருப்பு, மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கான கோயில் உள்ளது.
கடுங்கால் வாய்க்கால் வழித்தடத்தில் நாகதேவதை கோயில் உள்ளது. வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு இங்கே கோயில்கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவருகிறது.
ஊரின் தெற்குப்புறம் குளத்தாளம்மன் கோவில் உள்ளது. முதலில் குளத்தாளம்மனை வழிபட்ட பிறகே ஏனைய தெய்வங்களை வழிபடும் பழக்கம் உள்ளது.
ஊர்த்திருவிழாக்கள்
தொகு- காமனை எரித்தநிகழ்வு இன்றும் இவ்வூரில் காமன்திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் வளர்பிறையின் மூன்றாம் திதியாகிய திருதியையில் கால்கோள் இடப்படுகிறது. பௌர்ணமியன்று சிவன் காமனை எரித்த கதை ஊர்மக்களால் நாடகமாக நடிக்கப்படுகிறது. இந்நாடகத்தில் ஆண்கள் மட்டுமே நடிக்கும் வழக்கம் உள்ளது. நாடகத்தின் முடிவில் மன்மதன் எரிக்கப்பட்ட பிறகு அனைவரும் குளித்துவிட்டே வீட்டிற்குச் செல்லும் வழக்கம் உள்ளது. அன்றிலிருந்து மூன்றாம்நாள் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.
- தமிழ்வருடப்பிறப்பாகிய சித்திரை ஒன்றாம் நாள் ஊரில் நல்லேர் கட்டுவது மரபாக உள்ளது.
- கார்நெல்லும், சம்பாநெல்லும் விளையும் பருவத்தில் அறுவடைக்கு முன்பாக ஒரு நல்ல நாளில் விளைந்த கதிரை அறுத்து, குத்தி அரிசியாக்கிப் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. கார்போகத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று புத்தரிசி சோறு உண்பது வழக்கமாக உள்ளது. சம்பாபோகத்தில் விளையும் நெல்லில் பொங்கலன்று புத்தரிசி பொங்கல் வைப்பதுவும் வழக்கமாக இருந்துவருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.