கெட்டோ (ghetto) என்பது ஒரு சிறுபான்மைக் குழுவின் உறுப்பினர்கள் குவிந்துள்ள நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியாகும். அரசியல், சமூக, சட்ட, மத, சுற்றுச்சூழல் அல்லது பொருளாதார அழுத்தத்தின் விளைவாக.[1] கெட்டோக்கள் பெரும்பாலும் நகரத்தின் மற்ற பகுதிகளை விட மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகைய பகுதிகள் உலகம் முழுவதும் காணப்படுகிறது.

இத்தாலி நாடின் வெனிஸ் நகரத்தின் கெட்டோ (2013)
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரத்தில் புலம்பெயந்த யூதர்களின் கெட்டோக்களின் வரைபடம், ஆண்டு 1628
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரத்தின் இடிக்கப்பட்ட கெட்டோக்கள், ஆண்டு, 1868
போலந்து நாட்டின் வார்சா நகர கெட்டோவின் யூதச் சிறுவன், ஆண்டு 1943
சிகாகோ நகரத்தின் கெட்டோ, மே, 1974

யூத எதிர்ப்புக் கொள்கைவின் காரணமாக, 1516 ஆம் ஆண்டில்,, இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில், யூதர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்படாததால், வெனிசின் கெட்டோ பகுதிகளில் வாழ்ந்தனர். கெட்டோ எனும் சொல் அது முதல் பயன்பாட்டிற்கு வந்தது.[2]யூத எதிர்ப்புக் கொள்கை காரண்மாக, நாஜி ஜெர்மனியர்கள் ஐரோப்பிய யூதர்களை கொல்லும் நோக்கத்துடன் 1,000க்கும் மேற்பட்ட நாஜி கெட்டோக்கள் மூலம் யூத மக்களைக் கட்டுப்படுத்த நிறுவப்பட்டது.[3][4]

உருமேனியா மற்றும் சிலோவாக்கியா போன்ற சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், உரோமானி மக்கள் அதிகம் வசிக்கும் நகரத்தின் சுற்றுப்புறங்களைக் குறிக்க கெட்டோ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.[5] தற்காலத் தமிழ்நாட்டின் நகர்புறங்களில் சேரி என்ற சொல், பொதுவாக வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ஏழை மக்கள் அல்லது யூதர்கள் வாழும் பகுதிக்கு கெட்டோ என்ற சொல் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

சொற்பிறப்பியல்

தொகு

கெட்டோ என்ற சொல் இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தின் ஒதுக்குப்புறப் பகுதிகளைக் குறிக்க 1516ஆம் ஆண்டிலிருந்து உருவானது. பயன்படுத்தப்பட்டது. 1899 வாக்கில், பிற சிறுபான்மை குழுக்களின் நெரிசலான நகர்ப்புற பகுதிகளுக்கும் இந்த சொல் நீட்டிக்கப்பட்டது. இச்சொல்லின் சொற்பிறப்பியல் நிச்சயமற்றது, ஏனெனில் வெனிஸ் மொழிச் சொல்லின் தோற்றம் பற்றி சொற்பிறப்பியல் வல்லுநர்களிடையே எந்த உடன்பாடும் இல்லை. இந்த சொல்லின் ஒரு கோட்பாடு வெனிஸ் நகரத்தின் எல்லைக்கோட்டை குறிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. [6] பல்வேறு கோட்பாடுகளின்படி கெட்டோ எனும் சொல் வருகிறது: எபிரேயம் மொழியில் கெட்டோ என்ற சொல்லிற்கு விடை பெறுதல் அல்லது 'விவாகரத்து ஆவணம்', அல்லது 'பிரிவினைப் பத்திரம்' என்று பொருள். மற்றொரு சாத்தியம், பண்டைய எகிப்திலிருந்து யூதர்கள் நாடுகடத்தப்பட்டதன் நினைவாக கெட்டோ எனும் சொல் தோன்றிருக்கலாம் [7]

யூத கெட்டோக்கள்

தொகு

ஐரோப்பா கணடத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் பாரம்பரியமாக யூதர்கள் வசிக்கும் நகரத்தின் பகுதியைக் குறிக்க கெட்டோ எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.. மதம், மொழி மற்றும் இனம் குறித்த தேதியிட்ட பார்வைகளின் அடிப்படையில் யூதர்களுக்கு எதிரான பெரும்பான்மை பாகுபாடு காரணமாக கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூத கெட்டோக்கள் இருந்தன: யூதர்கள் வெளியாட்களாகக் கருதப்பட்டனர். இதன் விளைவாக, பல ஐரோப்பிய நகரங்களில் யூதர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டனர்.மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக, கெட்டோக்கள் (ரோம் நகரத்தைப் போல) குறுகிய தெருக்களையும், உயரமான, நெரிசலான வீடுகளையும் கொண்டிருந்தன.

நாஜி ஜெர்மனியின் கெட்டோக்கள்

தொகு

இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள் மற்றும் ரோமானி மக்களை வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைப்பதற்காக நாஜிக்கள் புதிய கெட்டோக்களை கிழக்கு ஐரோப்பாவின் பல நகரங்களில் வதை முகாமின் வடிவமாக நிறுவினர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ghetto". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 5 July 2017.
  2. "Ghettos". encyclopedia.ushmm.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.
  3. Holocaust Encyclopedia (2014). "Ghettos. Key Facts". United States Holocaust Memorial Museum. Archived from the original on August 15, 2012. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015 – via Internet Archive.
  4. "The Ghettos | About the Holocaust." Yad Vashem. Retrieved 19 July 2020.
  5. Domonoske, Camila (27 April 2014). "Segregated From Its History, How 'Ghetto' Lost Its Meaning". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
  6. Calimani, Riccardo. 1987. The Ghetto of Venice. New York: M. Evans & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0871314843. pp. 129–32.
  7. "ghetto (n.)." Online Etymology Dictionary.

வெளி இணைப்புகள்

தொகு
  •   பொதுவகத்தில் கெட்டோ தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டோ&oldid=4144741" இலிருந்து மீள்விக்கப்பட்டது