கெதுன் சோக்கீ நைமா
கெதுன் சோக்கி நைமா (Gedhun Choekyi Nyima,பிறப்பு; ஏப்ரல் 25, 1989-திபெத்தின் லாரி கவுண்டி [1]); திபெத்திய பௌத்த மதத்தின் பஞ்சென் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர் ஆவார். இவர் திபெத்தியபௌத்த மதத்தின் 11 ஆவது பஞ்சென் லாமா ஆவார். 14 மே 1995 அன்று டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா) என்ற தலாய் லாமாவால் அவர் 11 ஆவது பஞ்சென் லாமாவாக அறிவிக்கப்பட்டார். சீன மக்கள் குடியரசின் அரசமன்றத்தால் நியமிக்கப்பட்ட பஞ்சன் லாமா தேடல் குழு அவரை நிராகரித்தது.[2] அவர் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் லாரி கவுண்டியில் பிறந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சீனா அரசாங்கம் அவருக்குக் காவல் பாதுகாப்பை வழங்கியது [3][4] ஆனால் 17 மே 1995 வரை இவர் பொதுவில் ஆங்கீகரிக்கப்படவில்லை.
கெதுன் சோக்கீ நைமா | |
---|---|
கெதுன் சோக்கீ நைமா 11 ஆவது பஞ்சன் லாமா 1995 | |
பிறப்பு | 25 ஏப்ரல் 1989 |
காணாமல்போனது | 17 மே 1995 (அகவை 6) லாரி கவுண்டி, திபெத் தன்னாட்சிப் பகுதி |
தகுதி | காணாமல் போய் 29 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 2 நாட்கள் |
பட்டம் | 11ஆவது பஞ்சன் லாமா 14வது தலாய் லாமாவின் கூற்றுப்படி |
பஞ்சன் லாமா | |
ஆட்சிக்காலம் | 14 May 1995 – present |
முன்னையவர் | Choekyi Gyaltsen |
11 வது பஞ்சன் லாமாவின் தேர்வு
தொகு10 வது பஞ்சன் லாமா தான் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர், பாரம்பரியத்தை பின்பற்றுவதற்காக தனது சொந்த விருப்பத்தை பகிரங்கமாக அறிவித்தார். ஜனவரி 24 அன்று, லிங் கோபுரத்தின் திறப்பு விழாவைத் தொடர்ந்து, திபெத், கிங்காய், கன்சு, சிச்சுவான் மற்றும் யுன்னான் மாகாணங்கள் மற்றும் தன்னாட்சி பிராந்தியங்களில் உள்ள மத பிரமுகர்களுடன், 10 வது பெஞ்சன் லாமா புத்தரின் உயிருள்ள மறு அவதாரம் குறித்து சிறப்புப் பேச்சு ஒன்றை நடத்தினார். அதில "மூன்று சிறுவர்கள் இதற்கான வேட்பாளர்களாக முதலில் அடையாளம் காணப்பட வேண்டும், பின்னர் ஒவ்வொருவராக விசாரிக்கப்பட வேண்டும் " மேலும் " சாக்யமுனியின் உருவப்படத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கும் கலசத்திலிருந்து லாட்டரி எண்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைளை நான் முன்னெடுக்க விரும்புகிறேன். " என்றும் பேசினார்.[5]
1989 ஆம் ஆண்டில் 10 வது பஞ்சன் லாமா இறந்ததைத் தொடர்நது திபெத்திய பௌத்தர்கள் லாமாவின் மறு அவதாரமென அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு நபரை விரைவில் தேடத் தொடங்கினர் இதில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டன. ஏனெனில் திபெத் அப்பொழுது மத விரோத அரசாக்ங்கமான சீன மக்கள் குடியரசின் ஆக்கிரமிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது இது 1959 வரை தொடர்ந்தது.[6]
10 வது பஞ்சன் லாமா இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, மாநில கவுன்சிலின் பிரதமர், தாஷி லுன்போ மடாலயம் மற்றும் துறவிகள் குழுவின் ஆலோசனையைப் பெற்றதாகக் கூறி. 11 வது பஞ்சன் லாமா எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த தனது முடிவை வெளியிட்டார்,
பஞ்சன் லாமாவின் மறுபிறவி குறித்து தலாய் லாமா மற்றும் பெய்ஜிங் அதிகாரிகள் இருவருக்கும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளரை அணுகுவதற்காக,[7] பெய்ஜிங்கின் ஒப்புதலுடன் ஆயுதம் ஏந்திய, பஞ்சன் லாமா தேடல் குழுவின் தலைவர் சத்ரல் இரிம்புச்சே தலாய் லாமாவுடன் தனிப்பட்ட தகவல்தொடர்புகளைப் பராமரித்தார். 1995, மே 14 ஆம் தேதி பஞ்சன் லாமாவின் 11 ஆவது அவதாரமாகத் தலாய் லாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டபுதிய தலாய் லாமாவுக்கு கெதுன் சோக்கி நைமா பெயரிடப்பட்டது. இதன் பிறகு சீன அதிகாரிகள் சத்ரல் ரின்போச்சேவை கைது செய்து தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உட்படுத்தி நாடுகடத்தியது.
ரின்போச்சேவுக்குப் பதிலாக அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவருக்கு பதிலாக செங்சென் லோப்சாங் கியால்ட்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். சீனப் பொதுவுடமைக் கட்சி நடவடிக்கைகளுக்கு உடன்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் செங்சென் தேர்வு செய்யப்பட்டார்.[8] தலாய் லாமா, 10 வது பஞ்சென் லாமா இருவருக்கும் செங்சென் லோப்சாங் கியால்ட்சன் அரசியல் எதிரியாக இருந்தார்.[9] திபெத்திய பௌத்த மதத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலான போட்டி வரலாறு காரணமாக, பொதுவாக ஒன்றுபட்ட திபெத்திய மக்களிடையே மேலும் அமைதியின்மையையும் ஒற்றுமையின்மையையும் விளைவிப்பதற்காக சீனப் பொதுவுடமைக் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தந்திரமான நடவடிக்கை இது என பல திபெத்தியர்களும், அறிஞர்களும் நம்பினார்கள்.[10][11]
புதிய தேடல் குழுவானது தலாய் லாமாவின் மே,14 ஆம் நாளின் புதிய தலாய் லாமா குறித்த அறிவிப்பை புறக்கணித்தது. அதற்கு பதிலாக கெதுன் சோக்கியி நைமாவைத் தவிர்த்த இறுதிப் பட்டியலில் இருந்து ஒரு பெயரைத் தேர்வு செய்தது. தேர்வு செய்தது. தலாய் லாமாவின் ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பதில், 1793 இல் சீன (மஞ்சு) பேரரசரால் திபெத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு தங்கக் கலசத்தில் இருந்து லாட்டரி எண்கள் பெறப்பட்டன.[12] 14 வது தலாய் லாமா, திபெத்திய முறை முன்னாள் லாமாவின் உடைமைகளைப் பயன்படுத்தி அவரது மறுபிறவியை அடையாளம் காண வேண்டும் என்று கூறியது, ஏனெனில் புதிய குழந்தை அவதாரம் அவரது கடந்தகால பொருட்களை இதரப் பொருட்களின் மத்தியில் அடையாளம் காணும் என்று கூறப்படுகிறது.[13] 1940 ஆம் ஆண்டு ஜனவரி 26, அன்று, ரீஜண்ட் ரிட்டிங் ரின்போசே என்பவர், டென்ஜின் கயாட்சோவை , 14 வது தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கும் தங்கக் கலசத்தின் லாட்டரி செயல்முறையிலிருந்து விலக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.[14][15] இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.[16] மீன்டும் நவம்பர் 11, 1995 அன்று தேடல் குழுவின் தேர்வாக சீன அதிகாரிகள் கியான்கெய்ன் நோர்புவை என்பவரை 14 ஆவது தலாய் லாமாவாக அறிவித்தனர்.[17]
கியான்செய்ன் நோர்புவை சீனப் பொதுவுடமைக் கட்சி தேர்வு செய்தது பெரும்பாலான திபெத்தியர்களால் நிராகரிக்கப்பட்டது என்று பிபிசி தெரிவித்துள்ளது.[18] அலெக்சாண்டர் நார்மன் என்பவர் "இன்று, பஞ்சென் லாமாக்கள் தாஷில்ஹுன்போவை மடாலயத்தின் பார்வையில் இரண்டு உரிமைகோரல்களைக் கொண்டிருப்பதில் புகழ் பெற்றவர்கள்: ஒன்று தற்போதைய தலாய் லாமாவால் அங்கீகரிக்கப்பட்டு சீனர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார்கள், மற்றொன்று சீனாவால் அங்கீகரிக்கப்படுகிறார்கள், ஆனால் வேறு யாராலும் அங்கீகரிக்கப்படுவது இல்லை."என்று கூறுகிறார்.[19]
இருப்பிடம்
தொகுதலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, கெதுன் சோக்கியி நைமா இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.[20] அவரின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அவர் இருக்கும் இடம் தெரியாமல் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.[21] மனித உரிமை அமைப்புகள் அவரை "உலகின் மிக இளம் அரசியல் கைதி " என்று அழைத்தன.[22][23] அவரைப் பார்க்க எந்த வெளிக் கட்சியும் அனுமதிக்கப்படவில்லை.[24]
குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான குழு, மே 28, 1996 அன்று நைமாவின் இருப்பிடம் குறித்து தெரிவிக்கும்படி கோரியது. நைமா "பிரிவினைவாதிகளால் கடத்தப்படுவார்"மேலும் "அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று சீன செய்திப் பிரிவு நிறுவனமான 'சின்ஹுவா' பதிலளித்தது.[25] கெதுன் சோக்கி நைமாவுடன் சந்திப்பு நிகழ்த்த ஆறு நோபல் பரிசு வென்றவர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் மற்றும் சங்கங்களின் வருகைக்கு மனு அளித்த குழு கோரியது.[26][27] 1998 முதல் சீன அரசாங்கத்தின் அறிக்கைகளின்படி, அவர் அப்போது ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்தி வந்தார்.[24]
மே 2007 இல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை குறித்த சிறப்பு அறிக்கையாளர் அஸ்மா ஜஹாங்கிர், சீன அதிகாரிகளிடம், குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான குழுவின் பரிந்துரையை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டார். கெதுன் சோக்கியி நைமாவின் தனியுரிமைக்கான உரிமையை மதித்தும், அவரது பெற்றோரின் நல்வாழ்வைப் பார்வையிடவும் உறுதிப்படுத்தவும் ஒரு சுயாதீன நிபுணரை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். 17 ஜூலை 2007 தேதியிட்ட பதிலில், சீன அதிகாரிகள் கூறியதாவது: "கெதுன் சோக்கியி நைமா ஒரு சரியான சாதாரண திபெத்திய சிறுவன், அவர் சிறந்த ஆரோக்கிய நிலையில், இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி, நல்ல கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அவர் தற்போது மேல்நிலைப்பள்ளியில் இருக்கிறார், அவர் 165 செ.மீ ( 5 அடி 5 அங்குலம்) உயரத்தில் உள்ளார். இது இயற்கையால் எளிதானது. அவர் கடினமாகப் படிக்கிறார்; அவரது பள்ளி முடிவுகள் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அவர் சீன பாரம்பரிய கலாச்சாரத்தை விரும்புகிறார்; சமீபத்தில் அழகெழுத்தியல் பிரிவை எடுத்துள்ளார். அவரது பெற்றோர் இருவரும் அரசு ஊழியர்கள்; அவரது சகோதர சகோதரிகள் ஏற்கனவே வேலை செய்கிறார்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் உள்ளனர். அவர் தனது பெற்றோருடன் சேர்ந்து காணாமல் போனார் என்பதும், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்மையல்ல. " எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பார்வைக் குழுவினரின் வருகை அல்லது உறுதிப்படுத்தல் குறித்த கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.[28]
2015 ஆம் ஆண்டில், கெதுன் சோக்கீ நைமா காணாமல் போன இருபதாம் ஆண்டு நினைவு நாளில், சீன அதிகாரிகள் "நீங்கள் குறிப்பிட்ட அவதாரக் குழந்தை பஞ்சன் லாமா கல்வி கற்கப்படுவதாகவும், சாதாரண வாழ்க்கை வாழ்வதாகவும், ஆரோக்கியமாக வளர்ந்து வருவதாகவும், எனவே தொந்தரவு செய்ய விரும்பவில்லை" என்றும் அறிவித்தார்கள்.[29]
ஏப்ரல் 2018 இல், தலாய் லாமா, தான் அங்கீகரித்த பஞ்சன் லாமா, கெதுன் சோக்கீ நைமா உயிருடன் இருப்பதாகவும், சாதாரண கல்வியைப் பெறுவதாகவும் ஒரு "நம்பகமான மூலத்திலிருந்து" தனக்குத் தெரியும் என்று அறிவித்தார். சீன மக்கள் குடியரசு நியமித்த பஞ்சென் லாமா (கெய்ன்கெய்ன் நோர்பு) ஒரு நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் நன்கு படித்துள்ளார் என்று நம்புவதாக அவர் கூறினார், திபெத்திய பௌத்த பாரம்பரியத்தில், மறுபிறவி பெற்ற லாமா ஒன்றுக்கு மேற்பட்ட தோற்றங்கள எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் உள்ளன.[30][31]
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, கெதுன் சோக்கி நைமா 1995 இல் காணாமல் போனதிலிருந்து எந்த ஒரு சுயாதீனப் பார்வையாளாராலும் பார்க்கப்பட வில்லை.[32]
மேலும் காண்க
தொகு- காணாமல் போனவர்களின் பட்டியல்
குறிப்புகள்
தொகு- ↑ Gedhun Choekyi Nyima – The Panchen Lama, United States Commission on International Religious Freedom
- ↑ "十年了:达赖指定的班禅今安在". http://www.dw.com/zh/%E5%8D%81%E5%B9%B4%E4%BA%86%E8%BE%BE%E8%B5%96%E6%8C%87%E5%AE%9A%E7%9A%84%E7%8F%AD%E7%A6%85%E4%BB%8A%E5%AE%89%E5%9C%A8/a-1584571?&zhongwen=simp.
- ↑ Gedhun Choekyi Nyima the XIth Panchen Lama turns 18: Still disappeared The Buddhist Channel, 25 April 2007
- ↑ "Tibet's missing spiritual guide". BBC News. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4551425.stm.
- ↑ "班禅转世纪实". http://blog.wenxuecity.com/blog/frontend.php?act=articlePrint&blogId=29089&date=200711&postId=13943. "第十世班禅大师圆寂前四天,即1月24日,在主持灵塔开光典礼后的西藏、青海、甘肃、四川、云南五省区部分宗教界人士座谈会上,特别谈了活佛转世问题,提出应“先找出三个候选灵童,然后逐一进行调查”,“我想在释迦牟尼像前,采取‘金瓶掣签’的办法来确定。”这些话,是大师临终前的遗愿。"
- ↑ Gedhun Choekyi Nyima: the XIth Panchen Lama of Tibet பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ TCHRD: Chadrel Rinpoche's fate unknown பரணிடப்பட்டது 2 சூன் 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Update-Communist China set to decide on a rival Panchen Lama பரணிடப்பட்டது 25 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Communist China set to decide on a rival Panchen Lama பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Coonan, Clifford (2010-03-02). "China appoints Panchen Lama in tactical move to quell unrest - Asia - World". The Independent. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
- ↑ "Propaganda and the Panchen Lama: playing politics". Weblog.savetibet.org. 2011-08-25. Archived from the original on 8 March 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
- ↑ Alex McKay, The History of Tibet : The Modern Period, Routledge 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-30844-5, p. 32. Google books
- ↑ "Reincarnation | The Office of His Holiness The Dalai Lama". Dalailama.com. Archived from the original on 2013-07-10. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
- ↑ Melvyn C. Goldstein (18 June 1991). A History of Modern Tibet, 1913-1951: The Demise of the Lamaist State. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-91176-5.
- ↑ "Report to Wu Zhongxin from the Regent Reting Rinpoche Regarding the Process of Searching and Recognizing the Thirteenth Dalai lama's Reincarnated Soul Boy as well as the Request for an Exemption to Drawing Lots - - The Reincarnation of Living Buddhas". www.livingbuddha.us.com. Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
- ↑ "The National Government's Decree on the Special Approval of Recognizing Lhamo Thondup as the Fourteenth Dalai Lama with an Exemption of Drawing Lots and the Appropriation of the Expenditure for His Enthronement - - The Reincarnation of Living Buddhas". www.livingbuddha.us.com. Archived from the original on 2019-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
- ↑ Isabel Hilton, A Reporter at Large, "Spies in the House of Faith," The New Yorker, 23 August 1999, p. 170
- ↑ "Tibet's missing spiritual guide". 16 May 2005. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4551425.stm.
- ↑ Norman, Alexander (2008). Holder of the White Lotus: The Lives of the Dalai Lama. Little, Brown. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-316-85988-2.
- ↑ Coonan, Clifford (2010-03-02). "China appoints Panchen Lama in tactical move to quell unrest - Asia - World". The Independent. பார்க்கப்பட்ட நாள் 2013-12-25.
- ↑ Xizang-zhiye 27 April 2005 பரணிடப்பட்டது 24 ஆகத்து 2006 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "World's youngest political prisoner turns 17". Washingtonpost.com. 2006-04-23. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
- ↑ Laird, Thomas (2006). The Story of Tibet: Conversations with the Dalai Lama, p 374. Grove Press, N.Y. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8021-1827-1.
- ↑ 24.0 24.1 "Amnesty International Testimony US – China Relations before the Committee on Foreign Relations United States Senate by T. Kumar, Advocacy Director for Asia". US Senate Committee on Foreign Relations. 11 September 2003. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
- ↑ Site of the TCHRD பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Appel Pour Le Plus Jeune Prisonnier Politique Du Monde". Tibet.fr. 1995-05-14. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
- ↑ "UNPO – WS on Panchen Lamas Case". Unpo.org. 2006-03-09. பார்க்கப்பட்ட நாள் 2013-07-17.
- ↑ "China Fails to Respond to UN Rights Expert's Question on Panchen Lama". 25 April 2008. Archived from the original on 7 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 May 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "China says Panchen Lama 'living a normal life' 20 years after disappearance". The Guardian. September 6, 2015. பார்க்கப்பட்ட நாள் September 6, 2015.
- ↑ 11th Panchen Lama alive, receiving education: Dalai Lama, The Statesman, April 25, 2018: "Tibetan spiritual leader Dalai Lama on Wednesday said 11th Panchen Lama Gedhun Choekyi Nyima “according to reliable source is alive and receiving normal education”. Talking to the media at Gaggal Airport in Kangra district after returning from four-day Delhi visit, Lama hoped that the official Panchen Lama studies well under the guidance of a good teacher. “Then the Panchen Lama, which I recognised sometime back, there was no news, but then according to reliable information, he is still alive and receiving normal education. So we will see,” he said. He said there are instances in Tibetan Buddhist tradition, “where a reincarnated lama took more than one manifestation”."
- ↑ Dr. Andrea Galli, Dalai Lama and the Panchen Lama quarrel: The way for rapprochement with China, Modern Diplomacy, May 9, 2018.
- ↑ Dalai Lama cites ‘reliable source’ as saying Panchen Lama alive, speaks well for the Chinese appointed counter, Tibetan Review, April 27, 2018 : "Following the passing away of the 10th Panchen Lama Choekyi Gyaltsen in Jan 1989, Tibet’s exiled spiritual leader formally proclaimed six-year-old Gedhun Choekyi Nyima born in Tibet as his undisputed reincarnation on May 14, 1995. Three days later, the Chinese government took him and his family away to be never seen or heard from again."