கெப்லர்-56
கெப்லர்-56 (Kepler-56) என்பது சிக்னசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.[1] இது நமது சூரியனை விட சற்று எடை கூடியது. இதன் இரண்டு கோள்கள் 2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று நமது நெப்டியூன் கோளை விட சற்று சிறியதும், மற்றையது சனியை விட சற்று சிறியதும் ஆகும்.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | சிக்னசு |
வல எழுச்சிக் கோணம் | 19h 35m 02s |
நடுவரை விலக்கம் | +41° 52′ 19″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G0V |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 19:35:02 மிஆசெ/ஆண்டு Dec.: +41:52:19 மிஆசெ/ஆண்டு |
விவரங்கள் | |
திணிவு | 1.37 M☉ |
ஆரம் | 3.14 R☉ |
வெப்பநிலை | 4931° கெ |
வேறு பெயர்கள் | |
கெப்லர்-56 | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கோள் தொகுதி
தொகு2012 ஆம் ஆண்டில் கெப்லர் -56 இன் கோள் தொகுதி இடைவழி முறை (transit method) மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. கெப்லர்-56பி, கெப்லர்-56சி ஆகிய இரண்டு கோள்களினதும் சுற்றுப்பாதை அவற்றின் விண்மீனின் நிலநடுக் கோட்டில் இருந்து ஏறத்தாழ 45° சரிந்துள்ளது.[2]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.07 MJ | 0.1028 | 10.5034294 | ? |
c | 0.569 MJ | 0.1652 | 21.4050484 | ? |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு
- Kepler-56, The Open Exoplanet Catalogue பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம்