கெவாடியா தொடருந்து நிலையம்
கெவாடியா தொடருந்து நிலையம் (Kevadia railway station) (நிலைய குறியீடு: KDCY) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா எனும் சிற்றூரில் அமைந்துள்ள சிறிய தொடருந்து நிலையம் ஆகும். இது கெவாடியாவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3 நடைமேடைகளுடன் அமைந்த இந்த தொடருந்து நிலையம், கெவாடியாவில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டி, 17 சனவரி 2021 அன்று சுற்றுலாப் பயணிகளின் சேவைகளுக்கு திறக்கப்பட்டது.[1][2] இத்தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்பை, புது தில்லி, சென்னை, அகமதாபாத், வாரணாசி, வடோதரா, ரேவா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[3][4]
கெவாடியா தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
இந்திய இரயில்வேயின் சின்னம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கெவாடியா, நர்மதா மாவட்டம், குஜராத், இந்தியா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 21°52′30″N 73°41′27″E / 21.87506°N 73.69074°E | ||||
ஏற்றம் | 63.01 மீட்டர்கள் (206.7 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
தடங்கள் | தபோகி - கேவாடியா இருப்புப் பாதை | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Standard on ground | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்படுகிறது | ||||
நிலையக் குறியீடு | KDCY | ||||
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | Vadodara | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 17 சனவரி 2021 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
தொடருந்துகள்
தொகு- 12927/12928 கெவாடியா - மும்பை - தாதர் அதிவிரைவு வண்டி
- 20903/20904 கெவாடியா - வாரணாசி மகாமானா விரைவு வண்டி
- 20905/20906 கெவாடியா - ரேவா விரைவு வண்டி
- 20919/20920 கெவாடியா - சென்னை சென்டிரல் அதிவிரைவு வண்டி (வாரம் ஒரு முறை)
- 20945/20946 கெவாடியா - தில்லி ஹசரத் நிஜாமுதீன் விரைவு வண்டி
- 20947/20948 கெவாடியா - அகமதாபாத் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- 20949/20950 கெவாடியா - அகமதாபாத் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ்
- 69201/69202 கெவாடியா - வடோதரா (பிரதாப்நகர்)
- 69203/69204 கெவாடியா - வடோதரா (பிரதாப்நகர்)
- 69205/69206 கெவாடியா - வடோதரா (பிரதாப்நகர்)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kevadiya Railway Station Making 'Statue Of Unity' Easier To Reach By Rail
- ↑ Train to Statue of Unity: PM Modi to flag off Ahmedabad-Kevadiya Shatabdi among 8 trains connecting Statue of Unity
- ↑ சென்னை உட்பட 8 இடங்களில் இருந்து படேல் சிலை உள்ள கெவாடியாவுக்கு புதிய ரயில்கள்
- ↑ Prime Minister flags off 8 trains to boost connectivity to Statue of Unity