கேத்திரி
கேத்திரி (Khetri), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் வடகிழக்கில் உள்ள செகாவதி பிரதேசத்தில் உள்ள சுன்சுனூ மாவட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். கேத்திரி நகரத்தை இராஜா கேத் சிங் நிறுவினார். கேத்திரி செப்பு கனிமத்திற்கு பெயர் பெற்றது. கேத்திரி நகரம் ஜெய்ப்பூருக்கு வடக்கே 164.1 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லிக்கு தென்மேற்கே 216.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கேத்திரி
mihot | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27°59′N 75°48′E / 27.98°N 75.8°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | சுன்சுனூ |
அரசு | |
• நிர்வாகம் | கேத்திரி நகராட்சி |
ஏற்றம் | 484 m (1,588 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,209 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி, மார்வாரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 333504/333503 |
தொலைபேசி குறியீடு | 01593 |
வாகனப் பதிவு | RJ53 |
வரலாறு
தொகுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது கேத்திரி சமஸ்தானத்தின் மன்னராக இருந்த கேத்திரி மன்னர் அஜித் சிங், விவேகானந்தரின் நண்பராகவும், சீடராகவும் இருந்தார்.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 20 வார்டுகளும், 3,149 வீடுகளும் கொண்ட கேத்திரி நகரத்தின் மக்கள் தொகை 18,209 ஆகும். அதில் 9,451 ஆண்கள் மற்றும் பெண்கள் 8,758 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2347 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,765 மற்றும் 128 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.68%, இசுலாமியர் 10.09% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர். [1]
கேத்திரி கோட்டை
தொகுகேத்திரி கோட்டை 1754ல் மன்னர் போபால் சிங் செகாவத் என்பவரால் கட்டப்பட்டது.[2]
இதனனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Khetri Population, Religion, Caste, Working Data Jhunjhunun, Rajasthan - Census 2011
- ↑ Dundlod, Harnath Singh (1970). The Sheikhawats and Their Lands. Jaipur: Raj Educational Printers. p. 122. இணையக் கணினி நூலக மைய எண் 309570.