கெமர் அந்திரே ஜமால் ரோச் (Kemar Andre Jamal Roach, பிறப்பு: 30 சூன் 1988) பார்படோசு நாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர். இவர் 2006 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மற்றும் 2011 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக பங்குபற்றியவர். தேர்வு, மற்றும் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி வருகிறார். விரைவுப் பந்துவீச்சாளரான இவர் 150 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசக்கூடியவர்.

கேமர் ரோச்
Kemar Roach
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கேமர் அந்திரே ஜமால் ரோச்
உயரம்1.72 m (5 அடி 8 அங்)
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை துரித பந்துவீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 279)சூலை 9 2009 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுடிசம்பர் 5 2010 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 144)ஆகத்து 20 2008 எ. பெர்மியுடா
கடைசி ஒநாபமார்ச் 12 2010 எ. சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008/09–இன்றுபார்படோசு
2009/10–இன்றுடெக்கான் சார்ஜர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 10 13 29 22
ஓட்டங்கள் 72 20 281 63
மட்டையாட்ட சராசரி 7.20 5.00 10.03 12.60
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 17 10 52* 13*
வீசிய பந்துகள் 1,888 677 4,423 993
வீழ்த்தல்கள் 36 26 83 31
பந்துவீச்சு சராசரி 28.25 21.30 31.44 26.32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 1 4 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 6/48 5/44 7/23 5/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 1/– 15/– 2/–

2011 உலகக்கிண்ணத்துக்கான ஆரம்பநிலைப் போட்டி ஒன்றில் நெத்ர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி ஒரு பந்துப்பரிமாற்றத்தில் மூன்று இலக்குகளை வீழ்த்தினார். இதே போட்டியில் 27 பந்துகளுக்கு ஆறு இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமர்_ரோச்&oldid=3990801" இலிருந்து மீள்விக்கப்பட்டது