கே. வி. விஸ்வநாதன்
கல்பாத்தி வெங்கட்ராமன் விஸ்வநாதன் (K. V. Viswanathan), (பிறப்பு:26 மே 1966) கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனும் ஊரில் அரசு வழக்கறிஞர் கே. வெங்கட்ராமனுக்குப் பிறந்தவர். இவர் புது தில்லியில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணி செய்து வந்தார். 18 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்றாவது தமிழர் கே. வி. விஸ்வநாதன் ஆவார். நீதியரசர் கே. வி. விஸ்வநாதன் 19 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.[1][2]
மாண்புமிகு நீதிபதி கல்பாத்தி. வெ. விஸ்வநாதன் | |
---|---|
உச்ச நீதிமன்ற நீதியரசர், புது தில்லி, இந்தியா | |
பதவியில் 19 மே 2023 – பதவியில் | |
பரிந்துரைப்பு | நீதிபதிகள் தேர்வுக் குழு |
நியமிப்பு | இந்தியக் குடியரசுத் தலைவர் |
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 மே 1966 கல்பாத்தி, பாலக்காடு, கேரளா |
முன்னாள் கல்லூரி | அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் |
25 மே 2031 வரை பதவியில் இருக்கும் இவர் 2030ஆம் ஆண்டில், 58வது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 9 மாதங்களுக்கு பதவியில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.[3][4]
வரலாறு
தொகுபொள்ளாச்சி அரசு வழக்கறிஞர் கே. வெங்கட்ராமனுக்கு 26 மே 1966 அன்று கே. வி. விஸ்வநாதன் பிறந்தவர். கே. வி. விஸ்வநாதன் பொள்ளாச்சியில் பள்ளிக் கல்வியும், கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியும் பயின்றவர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சி. எஸ். வைத்தியநாதனிடம் இளையவராக வழக்கிறிஞர் பணி செய்தவர். இவர் தில்லியில் உள்ள இந்திய உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1991-96இல் இவர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞராக குற்ற வழக்குகளை கையாண்டவர். 20 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றவர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Supreme Court to get two new judges, swearing-in ceremony on May 19
- ↑ உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு - தமிழரான கே.வி.விஸ்வநாதனுக்கு தலைமை நீதிபதி வாய்ப்பு?
- ↑ பொள்ளாச்சி முதல் புதுடில்லி வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.வி. விஸ்வநாதன் உயர்ந்த கதை
- ↑ Advocate K V Viswanathan's name recommended by Collegium to become 58th CJI