கைலாஷ் கலோட்

கைலாஷ் கலோட் (Kailash Gahlot) ஒரு இந்திய அரசியல்வாதியும், புது தில்லியின் ஆறாவது சட்டப்பேரவை உறுப்பினரும் ஆவார். ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான இவர் நசஃப்கட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2] மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புது தில்லி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார்.[3][4]

கைலாஷ் கலோட்
தில்லி அரசாங்கத்தின் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 பிப்ரவரி 2015
துணைநிலை ஆளுநர்நசீப் சங்
அனில் பைஜால்
வினை குமார் சக்சேனா
அரவிந்த் கெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை
முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால்
அமைச்சகம் மற்றும் துறைகள்
  • நிதி
  • போக்குவரத்து
  • வருவாய்
  • சட்டம் & நீதித்துறை
  • ட்டப்பேரவை விவகாரங்கள்
  • தகவல் & தொழில்நுட்பம்
  • நிர்வாக சீர்திருத்தங்கள்
  • திட்ட அமலாக்கத்துறை
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தில்லி சட்டப்பேரவையின் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2015
முன்னையவர்அஜீத் சிங் கார்காரி
தொகுதிநசப்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூலை 1974 (1974-07-22) (அகவை 49)
தில்லி, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்மௌசுமி மிசுரா கலோட்
பிள்ளைகள்2 மகள்கள்
முன்னாள் கல்லூரிசிறீ வெங்கடேசுவரா கல்லூரி வளாக சட்ட மையம், தில்லி பல்கலைக்கழகம்
வேலைதில்லி அரசாங்கத்தில் அமைச்சர்
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி
மந்திரி சபைஅமைச்சர்
உடைமைத்திரட்டுபோக்குவரத்து, வருவாய், சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

கலோட், தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், இளங்கலைச் சட்டம் மற்றும்  முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1][2]

அரசியல் வாழ்க்கை தொகு

கைலாஷ் கலோட், அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். வருவாய், நிர்வாக சீர்திருத்தங்கள், தகவல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம், நீதி மற்றும் சட்டமன்ற விவகாரங்கள், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருக்கிறார்.[2][1]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாஷ்_கலோட்&oldid=3740047" இலிருந்து மீள்விக்கப்பட்டது