வேட்டுவக் கவுண்டர்

(கொங்கு வேட்டுவ கவுண்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேட்டுவக் கவுண்டர் (Vettuva Gounder)[1] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்.

கொங்கு வேட்டுவ கவுண்டர்[2]

கொங்கு வேட்டுவ கவுண்டர்கள்[3] என்போர் ஆரம்ப காலத்தில் வேட்டை தொழிலையும், வேளாண்மையையும் செய்து வந்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பர் உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இச்சமூகத்தினர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் குடியேறி வசித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் குறிப்பிடப்படும் அளவில் வசித்து வருகிறார்கள். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் சேலம்,நாமக்கல், ஈரோடு, மதுரை,கரூர், திருச்சி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருட்டிணகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருமளவில் வசித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.[1] இவ்வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் ஒரு பிரிவினரான பூலுவ கவுண்டர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.[2]இவர்கள் பூலுவக் கவுண்டர்கள்(பூலுவ வேட்டுவக் கவுண்டர்கள்) என்னும் பெயரில் கோவை, பொள்ளாச்சி , திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கே இவர்கள் தமிழக அரசின் சாதிப் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வரிசையில் குறிப்பிடப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டுவக்_கவுண்டர்&oldid=3830117" இருந்து மீள்விக்கப்பட்டது