கொச்சி கப்பல் கட்டும் தளம்

இந்தியாவில் கப்பல் கட்டுதல் மற்றும் பராமரிப்பு நிறுவனம்

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd) என்பது இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும்தளம் மற்றும் பராமரிப்பு வசதி கொண்ட நிறுவனமாகும். [2] இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான கொச்சி நகரின் கடற்கரையில் அமைந்துள்ளது. [3]

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1972
தலைமையகம்கொச்சி, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முக்கிய நபர்கள்மது எஸ் நாயர் (CMD)
தொழில்துறைகப்பல்கட்டுதல்
உற்பத்திகள்எண்ணெய்க் கப்பல்; பெருஞ்சரக்குக் கப்பல்கள்; இயங்குதள விநியோக கப்பல்கள்; ரோந்து படகுகள்; செலுத்து உதவி கப்பல்கள்
சேவைகள்நாவாய்ப் பொறியியல்
கப்பல்கட்டுதல்
கப்பல் பழுதுபார்த்தல்
வருமானம்Green Arrow Up Darker.svg 25.44 பில்லியன்
(US$333.52 மில்லியன்)
(2017-18)[1]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg 6.05 பில்லியன்
(US$79.32 மில்லியன்)
(2017-18)[1]
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg 3.97 பில்லியன்
(US$52.05 மில்லியன்)
(2017-18)[1]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg 36.98 பில்லியன்
(US$484.81 மில்லியன்)
(2017-18)[1]
மொத்த பங்குத்தொகைGreen Arrow Up Darker.svg 32.56 பில்லியன்
(US$426.86 மில்லியன்)
(2017-18)[1]
உரிமையாளர்கள்இந்திய அரசு
பணியாளர்1,781 (2017-18)
இணையத்தளம்cochinshipyard.com
கொச்சின் கப்பல் கட்டடும்தளத்தில் உள்ள ஒரு கப்பல்துறை ஒன்றின் காட்சி

கப்பல் தளத்தில் சரக்கு கப்பல்கள் மற்றும் இரட்டை வெளிச்சுவர் எண்ணெய் கப்பல்கள் கட்டப்படுகின்றன. தற்போது இது இந்தியக் கடற்படைக்கான முதல் உள்நாட்டு வானூர்தி தாங்கி கப்பலான INS  விக்ராந்த்தைக் கட்டிவருகிறது .

கொச்சின் கப்பல்கட்டும் தளமானது 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு நிறுவனமாக இணைக்கப்பட்டது, இதன் முதல் பிரிவு 1982 இல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிறுவனத்திற்கு மினிரத்னா அந்தஸ்து உள்ளது. [4] இதன் முற்றத்தில் 1.1 லட்சம் டன் வரை கப்பல்களைக் கட்டுவதற்கும், 1.25   லட்சம் டன்வரை, கப்பல்களைப் பழுதுபார்ப்பதற்கும் வசதிகள் என இந்தியாவில் மிகப்பெரிய வசதிகள் கொண்ட கப்பல் கட்டும் தளமாக இது உள்ளது. 2012 ஆகத்தில், நிதியாண்டின் இறுதியில் ஆரம்ப பொது சலுகை (ஐபிஓ) மூலம் மேலும் விரிவாக்கம் செய்ய ரூ . 15 பில்லியன் (15,000 மில்லியன் ரூபாய்) மூலதனத்தை திரட்டுவதற்கான திட்டங்களை இந்திய அரசு அறிவித்தது. [5] இருப்பினும், நிறுவனம் தனது ஐபிஓவை நடத்தி மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்திய தேசிய பங்கு சந்தை ஆகியவற்றில் அதன் பங்குகளை பட்டியலிடும் 2017 ஆகத்துவரை இது செயல்பாட்டுக்குவரவில்லை.

பங்கு விற்பனையின் முடிவை 2015 நவம்பர் 18 அன்று அரசாங்கம் இறுதி செய்தது. 33.9 மில்லியன் (33.9 மில்லியன்) முக மதிப்பு பங்குகள் ஒவ்வொன்றும் ரூ. 10 விற்கப்படும் என்றும், இவற்றில் 113,000 பங்குகளை அரசாங்கம் வைத்திருக்கும், மற்றவை புதிய பங்குகள்.

இந்த கப்பல் தளத்தில் கடற் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிது.[6] இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் சுமார் நூறு மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.

கப்பல்கட்டுமானங்கள்தொகு

 
ஐஎன்எஸ் விக்ராந்த் 2017 இல் கொச்சி கப்பல் கட்டும்தளத்தில் கட்டப்பட்டு வரும்போது

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு 1981 இல் வெளியேறிய முதல் கப்பல் எம். வி. ராணி பத்மினி ஆகும்.[7]

இதில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய இரட்டை வெளிச்சுவர் ஆஃப்ராப்பெருமம் எண்ணெய்க் கப்பல்கள் இரண்டை கட்டியுள்ளது. இவை ஒவ்வோன்றும் 95,000 ஏந்து பளு டன் அளவை கொண்டவை.

இந்நிறுவனம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து கப்பல் கட்டும் பணியைப் பெற்றுள்ளது. கப்பல் தளமானது பகாமாசுவின் கிளிப்பர் குழுமத்திற்காக ஆறு 30,000 ஏந்து பளு டன் கொள்ளளவு கொண்ட கப்பல்களை உருவாக்கி வருகிறது, முதல் மூன்று கப்பல்கள் பணி தொடங்கப்பட்டுள்ளன.[8]

நோர்வே சீட்டாங்கர்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கான எட்டு இயங்குதள விநியோகக் கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன.

கொச்சி கப்பல் கட்டும் தளம் தற்போது இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை உருவாக்கி வருகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த், (முன்னர், திட்டம் 71 "வான் பாதுகாப்பு கப்பல்") இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி ஆகும். இங்கு கட்டப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாக இந்த கப்பல் இருக்கும். இந்த கட்டுமானம் 2020 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[9][10]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "46th Annual Report" (PDF). 2018-08-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-08-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Welcome to Cochin Shipyard : ISO 9001 Certified Shipyard of the Millenium". Cochinshipyard.com. 14 September 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "List of ship building centres in India". Shipping Ministry of India. 15 September 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 July 2008 அன்று பார்க்கப்பட்டது.
  4. Mudgill, Amit (12 August 2017). "Cochin Shipyard rallies over 20% on D-Street debut". The Economic Times. https://economictimes.indiatimes.com/markets/stocks/news/cochin-shipyard-makes-quite-debut-lists-at-0-7-premium-over-issue-price/articleshow/60014904.cms. பார்த்த நாள்: 13 June 2018. 
  5. "Cochin Shipyard Limited firms up plans to go for IPO by year-end". The Times of India. Archived from the original on 2012-10-23. https://web.archive.org/web/20121023222443/http://www.hindu.com/2006/03/01/stories/2006030104122100.htm. பார்த்த நாள்: 23 August 2012. 
  6. "Cochin Shipyard – Marine Engineering Training Website". 17 ஜனவரி 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 ஜனவரி 2008 அன்று பார்க்கப்பட்டது.
  7. Priyadershini S. (7 March 2012). "Soft hands handling hard steel". The Hindu (Chennai, India). Archived from the original on 10 March 2012. https://web.archive.org/web/20120310161414/http://www.thehindu.com/life-and-style/society/article2970951.ece. பார்த்த நாள்: 15 August 2013. 
  8. "Business : CSL launches three new vessels". The Hindu (Chennai, India). 1 March 2006. Archived from the original on 23 October 2012. https://web.archive.org/web/20121023222443/http://www.hindu.com/2006/03/01/stories/2006030104122100.htm. பார்த்த நாள்: 15 August 2013. 
  9. Pandit, Rajat (27 July 2016). "India without aircraft carrier for 8 months - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/India-without-aircraft-carrier-for-8-months/articleshow/53407213.cms. 
  10. Diplomat, Franz-Stefan Gady, The. "India's First Homegrown Aircraft Carrier to Begin Sea Trials in 2020". The Diplomat (in ஆங்கிலம்). 2019-03-31 அன்று பார்க்கப்பட்டது.