கொடிகுத்தி மலை
கொடிகுத்திமலை (Kodikuthimala) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மலை வாழிடம் ஆகும். இது மலப்புறத்தின் உதகமண்டலம் என்றும் அழைக்கபடுகிறது. [1] இது வெட்டத்தூர் மற்றும் தாஷ்கோடு கிராமங்களில், கடல் மட்டத்திலிருந்து 522 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உயர்ந்த பகுதியானது அம்மினிக்கடன் மலை ஆகும்.
கொடிகுத்தி மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 522 m (1,713 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா, கேரளம், மலப்புறம் மாவட்டம், பெரிந்தல்மண்ணை வட்டம் |
மூலத் தொடர் | அம்மினிக்கடன் மலைகள் |
ஏறுதல் | |
எளிய வழி | பெரிந்தல்மண்ணையிலிருந்து, அம்மினிக்காட் வழியாக |
மேற்குத் தொடர்ச்சி மலையைத் தவிர கேரளத்தில் 5 மிகப்பெரிய மலைகள் உள்ளன.
அவைகளில் மூன்று மலப்புரம் மாவட்டத்திலும், ஒன்று பாலக்காடு மாவட்டதிலும், ஒன்று கண்ணூர் மாவட்டதிலும் உள்ளனது. உயரத்தைப் பொறுத்தவரை இது மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது மிக உயர்ந்த மலை ஆகும்.
ஆங்கிலேயர்கள் தங்கள் நில அளவையின் போது இந்த மலை உச்சியில் தங்கள் கொடியை ஏற்றிவைத்தனர். இதனால் இது கொடிகுத்திமலை என்ற பெயரைப் பெற்றது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்புதான் இந்த மலை கேரள சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறத் தொடங்கியது. [சான்று தேவை] இந்த பகுதியில் சுமார் 70 ஏக்கர் நிலத்தை சுற்றுலாத் துறை பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளது. கொடிகுத்திமலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடல் மட்டத்திலிருந்து 1,713 அடி உயரத்தில், ஒரு காட்சி கோபுரம் அமைக்கபட்டுள்ளது.
மலையின் மாறுபட்ட நிலப்பரப்பு காரணமாக கொடிகுத்திமலையின் உச்சியில் மலையேறுவது ஒரு சவாலான பணியாகும். [சான்று தேவை]
பொதுவாக கொடிகுத்திமலைக்கு பயணம் மேற்கொள்ள சரியான காலம் செப்டம்பர் முதல் மே வரை. [சான்று தேவை] இது பாலக்காட்டில் இருந்து 66 கி.மீ. தொலைவிலும், மலப்புரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், பெரிந்தல்மண்ணையிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், கோழிக்கோட்டில் இருந்து 82 கி.மீ. தொலைவிலும் உள்ளது [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "The Ooty Of Malappuram-Kodikuthimala". Deccan Chronicle. 18 April 2014. https://www.deccanchronicle.com/140417/lifestyle-travel/article/ooty-malappuram-kodikuthimala. பார்த்த நாள்: 8 August 2018.