கொட்டதாரா

கேரளத்தின் வயநாடு மாவட்டத்திலுள்ள ஊராட்சி

கொட்டதாரா (Kottathara) அல்லது வென்னியோடு என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சி ஆகும். [1]

கொட்டதாரா
கிராமம்
வென்னியோடு, பரதேவதைக் காவு
வென்னியோடு, பரதேவதைக் காவு
ஆள்கூறுகள்: 11°39′23″N 76°01′30″E / 11.65636°N 76.02496°E / 11.65636; 76.02496
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்வயநாடு
அலுவல்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673122
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.என்-கேஎல்

இடம்

தொகு

கொட்டதாரா கல்பற்றா - மானந்தவாடி பாதையில் கம்பலக்காடு நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வென்னியோடு என்பது ஒரு சிறிய நகரியம் ஆகும். இது கம்பலக்காடு மற்றும் பதின்ஹரதாரா இடையேயான இணைப்பு சாலையில் அமைந்துள்ளது. வென்னியோடு சந்திப்பிலிருந்து அருகில் வலால் என்னும் கிராமம் உள்ளது.

நிர்வாகம்

தொகு

கொட்டதாரா ஒரு சிறிய நகரம் என்றாலும், அதன் சொந்த நிர்வாக அமைப்பு கிராம ஊராட்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கொட்டதாரா நகரம் கேரளாவின் உள்ளூர் சுய அரசாங்கத்தின் கீழ் உள்ளது. வென்னியோடு நகரில் பஞ்சாயத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இதன் கிராம அதிகாரி திரு ஜெமினி குமார் என்பவர் இருக்கிறார்.

வென்னியோட் சந்தி

தொகு

கொட்டதாரா கிராமத்தின் தலைமையகம் வென்னியோடு சந்திப்பு. [2] இந்த கிராம மையத்தில் ஒரு சில தேநீர் கடைகளும், பள்ளிகளும், கோயில்களும் உள்ளன. பரதேவதைக் காவு என்று அழைக்கப்படும் புனித தோப்பு நன்கு பராமரிக்கப்பட்டு பல பார்வையாளர்களை ஈர்க்கிறது. இது பல வெள்ளை வண்ணம் பூசப்பட்ட புனித கற்களால் ஆன இந்தத் தோப்பில் ஒரு சிறிய விஷ்ணு கோயில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஒரு சமணக் கோவிலும் உள்ளது.

போக்குவரத்து

தொகு

கொட்டதாராவை மானந்தவாடி அல்லது கல்பற்றாவிலிருந்து அணுகலாம். பெரிய காட் சாலை மானந்தவாடியை கண்ணூர் மற்றும் தலசேரியுடன் இணைக்கிறது. தமரசேரி மலைப்பாதை கோழிகோட்டை கல்பற்றாவுடன் இணைக்கிறது. குட்டியாடி மலைப்பாதை வட்டக்கரையை கல்பற்றா மற்றும் மானந்தவாடியுடன் இணைக்கிறது. பாலாச்சுரம் மலைப்பாதை கண்ணூர் மற்றும் இரிட்டியை மானந்தவாடியுடன் இணைக்கிறது. நீலம்பூரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையும் வயநாட்டுடன் மேப்பாடி கிராமம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள இரயில் நிலையம் மற்றும் அருகிலுள்ள மைசூர் விமான நிலையங்கள் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் -120 கி.மீ தொலைவிலும், பெங்களூர், கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் -290 கி.மீ தொலைவிலும், கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், 58 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

புகைப்படங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டதாரா&oldid=3137870" இலிருந்து மீள்விக்கப்பட்டது