கொளத்தூர் (சேலம்)

கொளத்தூர் (ஆங்கிலம்:Kolathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கொளத்தூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் மேட்டூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,748 (2011)

1,349/km2 (3,494/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.45 சதுர கிலோமீட்டர்கள் (3.65 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kolathur

அமைவிடம்

தொகு

கொளத்தூர் பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 65 கிமீ தொலைவிலும், கிழக்கில் மேட்டூர் 12 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

9.45 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 130 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,413 வீடுகளும், 12,748 மக்கள்தொகையும், கொண்டது.[5]

போக்குவரத்து

தொகு

கர்நாடகாவின் மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூர் மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் ஒரு முக்கிய தரைவழி மார்க்கமாக கொளத்தூர் விளங்குகிறது. மேட்டூர் அணையிலிருந்து, வடமேற்கு திசையில் 11கி.மீ தொலைவில் கொளத்தூர் அமைந்துள்ளது.

கிராமங்கள் மற்றும் ஊர்கள்

தொகு

இது சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் ஒரு மையமாக விளங்குகிறது. கொளத்தூர் ஒன்றியம் 164 ஊர்களை உள்ளடக்கிய 14 கிராமங்களைக் கொண்டது. அவை பின்வருமாறு,

1. ஆலமரத்துப் பட்டி: ஏழரைமத்திக் காடு, ஏழுபரணைக்காடு, காந்தி நகர், காமராஜ் நகர், கீரிக்காடு, கும்பாரப் பட்டி, கீரிக்காடு, குரும்பனூர், நிலுவைக்கல் புதூர்

2. சித்திரப்பட்டி புதூர்: பூமனூர்,சித்திரப்பட்டி புதூர், கருங்கரடு, கீழ் மோளப்பாறையூர், கொசக்கரட்டூர், குமரவேல் கோட்டை, மேட்டுதானம் பட்டி, மேல்மோளப்பாறையூர், போரைமேடு, ராமாயம்மாள் நகர், சலவைக்கல் புதூர், சவேரியார் பாளையம், செங்கல்மேடு, சிலுவைப் பாளையம்

3. கண்ணாமூச்சி: செட்டியூர், கந்துகாரன் கோட்டை, கண்ணாமூச்சி , கண்ணாமூச்சி புதூர், காவலாண்டியூர், கொசவன் கரடு, மிளகுப்பொதை, மூலக்கடை, நஞ்சுண்டாபுரம், நெடுஞ்செழியன் நகர், பிடங்கனேரி, பிடாரனூர், பொரசமரத்துக்காடு, SS காட்டுவளவு, உப்புக்கல்லூர்

4. கருங்கல்லூர்: எருதுக்காரனூர், எருதுக்காரனூர் சேரி, காந்தி நகர், கவுண்டனூர், காளையனூர், கருங்கல்லூர் ஆ.தி. தெரு, கருங்கல்லூர், கோமாளிக்காடு, மேட்டு காவேரிபுரம், மேட்டுப்பாளையூர், பாலவாடி, பெத்தஞ்சேரி, புதுவேலம்பாளையம், செம்பாரம்புதூர், தார்க்காடு, தார்க்காடு ஆ.தி. தெரு, தெலுங்கனூர், வீரனூர், வெடிக்காரனூர்

5. காவேரிபுரம்: அலையாபுரம், செட்டிப்பட்டி, கோவிந்தப்பாடி | கணவாய்க்காடு | காரைக்காடு, கத்திரிப்பட்டி, காவேரிபுரம், கோரப்பள்ளம், கோட்டையூர், கிழக்குக் கோட்டையூர், குள்ளவீரம்பட்டி, மலையாளத்தார் கொட்டாய், மாமரத்தூர், நீதங்காடு, பனைமரத்தூர் காலனி, புதுநகர், சத்யா நகர், ஊஞ்சக்கொரை, வெள்ளாளப்பட்டி, விநாயகபுரம்

6. கோல்நாயக்கன் பட்டி : காட்டூர் | கோல்நாயக்கன் பட்டி | மணக்காடு | ஒட்டங்காடு | போரையூர் | புல்லாவலியார்க்காடு | ரெட்டியூர் | சானாவூர் | தெற்கத்திக்காடு | வாச்சம்பள்ளி

7. லக்கம்பட்டி : அண்ணா நகர் | சின்ன தண்டா | CS புரம் | CS புரம் காலனி | குட்டியன் தண்டா | மேட்டுக்கொட்டாய் | நாயக்கன் தண்டா | நீதிபுரம் | ஊர்நத்தம் | பெரிய தண்டா | பெரிய தண்டா காலனி | பெருமாள்கோவில் நத்தம் | ரங்கபோயன் காடு

8. மூலக்காடு : அச்சங்காடு | ஜோகிமானூர் | மூலக்காடு | நாச்சிக்காடு | வீரம் விளைந்த மண் விராலிக்காடு | தாளவாடி | உக்கம்பருத்திக்காடு | உக்கம்பருத்திக்காடு ADSt | உப்புக்கோடு

9. நவப்பட்டி : JJ நகர் | கருங்கரடு | காவேரி கிராஸ் | கூராண்டிபுதூர் | மாதையன்குட்டை | நாட்டா மங்கலம் | நவப்பட்டி | ஒட்டபாலைக்காடு | பெரும்பள்ளம் | பொங்கியண்ண கவுண்டர் காலனி | செக்கானூர் | தொம்மங்கரடு

10. பாலமலை : ஈச்சங்காடு | இடைமலைக்காடு | கடுக்காமரத்துக்காடு | கெம்மம்பட்டி | நாகம்பொதை | நாமங்காடு | நாதக்காடு | பத்திரமடுவு | பெரியகுளம் | பெரியிலைக்காடு | புள்ளம்பட்டி | ராமம்பட்டி | சிங்காரத்தோப்பு | சோத்தாங்காடு | தலைக்காடு | திம்மம்பொதை | துவரங்காடு | உரல்மரத்தூர் 11.பண்ணவாடி : பூதப்பாடி | சந்திரிகா புரம் | பண்ணவாடி | பரிசல்துறை | வரப்பள்ளத்தூர்

12.சாம்பள்ளி : கோம்பைக்காடு | கோவில்பாளையம் | மாசிலாபாளையம்

13.சிங்கிரிப்பட்டி : அய்யம்புதூர் | சந்திரியூர் | ஏரிக்காடு | கோட்டுமடுவு | ஒட்டங்காடு | சுப்ரமணியபுரம் | வால்கிணத்தூர்

14. திண்ணப்பட்டி : அட்டூர் | இருட்டான்கரடு | இருசப்பன் காட்டு வலவு | குப்புகவுண்டர் வலவு | மயில்பட்டி காட்டு வலவு | மொரசப்பட்டியான் தெரு | புதுவேலமங்கலம் | சேத்துக்குளி | தானமூர்த்திக் காடு | வடக்கத்தி காடு | வெள்ளக்கரட்டூர்

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கொளத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Kolathur Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொளத்தூர்_(சேலம்)&oldid=3821194" இலிருந்து மீள்விக்கப்பட்டது