கோபால்ட்(II) கார்பனேட்டு
கோபால்ட்(II) கார்பனேட்டு (Cobalt(II) carbonate) என்பது CoCO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டை அதன் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுத்த பின்னர் நீர்ப்பகுப்பு உலோகவியல் தூய்மையாக்கலின்போது சிவந்த காந்தயீர்ப்பு திண்மமாக ஓர் இடைநிலையாக உருவாகிறது. இது ஒரு கனிம வேதியியல் நிறமி மற்றும் வினையூக்கிகளுக்கான முன்னோடியாக விளங்குகிறது. வர்த்தக நோக்கில் வெளிறிய ஊதா நிறத்தில் அடிப்படைகோபால்ட் கார்பனேட்டாக விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு CoCO3(Co(OH)x(H2O)y மற்றும் இதன் (சிஏஎசு எண்)12069-68-0) ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II)கார்பனேட்டு
| |||
வேறு பெயர்கள்
கோபால்ட்டசு கார்பனேட்டு; கோபால்ட்(II)உப்பு
| |||
இனங்காட்டிகள் | |||
513-79-1 ![]() 12602-23-2 (cobalt carbonate hydroxide) ![]() | |||
பப்கெம் | 10565 | ||
பண்புகள் | |||
CCoO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 118.94 g·mol−1 | ||
தோற்றம் | சிவப்பு/இளஞ்சிவப்பு படிகங்கள் (நீருறிஞ்சும்) இளஞ்சிவப்பு,ஊதா,சிவப்பு படிகதுகள் (அறுஐதரேட்டு) | ||
அடர்த்தி | 4.13 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 427 °C (801 °F; 700 K) [2] decomposes before melting to cobalt(II) oxide (anhydrous) 140 °C (284 °F; 413 K) decomposes (hexahydrate) | ||
குறைவு | |||
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
1.0·10−10[1] | ||
கரைதிறன் | அமிலத்தில் கரையும் மிகக்குறைவாக ஆல்ககால், மெத்தில் அசிட்டேட்டு எத்தனாலில் கரையாது | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.855 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | Rhombohedral (anhydrous) Trigonal (hexahydrate) | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−722.6 kJ/mol[2] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
79.9 J/mol·K[2] | ||
தீங்குகள் | |||
GHS pictograms | ![]() ![]() | ||
GHS signal word | Warning | ||
H302, H315, H317, H319, H335, H351[3] | |||
P261, P280, P305+351+338[3] | |||
ஈயூ வகைப்பாடு | ![]() | ||
R-சொற்றொடர்கள் | R22, R36/37/38, R40, R43 | ||
S-சொற்றொடர்கள் | S26, S36/37 | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
640 mg/kg (oral, rats) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
தயாரிப்பு மற்றும் பண்புகள்தொகு
கோபால்டசசல்பேட்டுடன் சோடியம் பைகார்பனேட்டு கரைசலைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் கோபால்ட்(II) கார்பனேட்டைத் தயாரிக்க முடியும்.
- 3 CoCO3 + 1/2 O2 → Co3O4 + 3 CO2
இக்கார்பனேட்டை சுண்ணாம்புக் காளவாயில் இட்டு மிகவுயர்ந்த வெப்பநிலைக்கு சூடாக்குவதால் Co3O4 உருவாகிறது.
இச்சேர்மத்தை மேலும் உயர் வெப்பநிலை அளவுக்கு சூடாக்குவதன் மூலம் CoO ஆக மாறுகிறது. இடைநிலை உலோக கார்பனேட்டுகளைப் போல கோபால்ட்(II) கார்பனேட்டும் நீரில் கரைவதில்லை. ஆனால் கனிம அமிலங்களால் உடனடியாகத் தாக்கப்படுகிறது.
- CoCO3 + 2 HCl + 5 H2O → [Co(H2O)6]Cl2 + CO2
பயன்கள்தொகு
கோபால்ட் கார்பனைல் மற்றும் பலவேறு கோபால்ட் உப்புகள் தயாரிப்புக்கு கோபால்ட்(II) கார்பனேட்டு ஒரு முன்னோடி சேர்மமாக விளங்குகிறது. கோபால்ட் ஒர் இன்றியமையாத உலோகம் என்பதால் இணைப்பு உணவின் பகுதிப்பொருளாக சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மட்பாண்டத் தொழிலில் நீலநிற மெருகிடலுக்கு இச்சேர்மம் ஒரு முன்னோடியாக இருந்தது. குறிப்பாக நெதர்லாந்திலுள்ள டெல்பு நகர மண்பாண்டங்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
முன்பாதுகாப்புதொகு
இச்சேர்மத்தை உட்கொள்ள நேர்ந்தால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். கண்கள் மற்றும் தோலின் மீது பட்டால் எரிச்சலை உண்டாக்கும்.
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.ktf-split.hr/periodni/en/abc/kpt.html
- ↑ 2.0 2.1 2.2 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=573
- ↑ 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Cobalt(II) carbonate. Retrieved on 2014-05-06.