கோயம்புத்தூர் மாநகர மேயர்கள் பட்டியல்

கோயம்புத்தூர் மேயர் (List of mayors of Coimbatore) என்பவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரத்தின் முதல் குடிமகன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியான இவர், கோயம்புத்தூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் 99 பேருடன் நகரின் தலைமை நிர்வாகியாக உள்ளார். [1]

கோயம்புத்தூர் மேயர்
தற்போது
ஏ. கல்பனா

4 மார்ச் 2022 முதல்
வாழுமிடம்வெங்கடசாமி சாலை கிழக்கு, ஆர். எஸ். புரம்
நியமிப்பவர்கோயமுத்தூரில் இருந்து தேர்ந்தெடுக்கபடுபவர்
பதவிக் காலம்5 ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்வி. கோபாலகிருஷ்ணன்
உருவாக்கம்1996
இணையதளம்Mayor of Coimbatore

கோயம்புத்தூரின் மேயராக தற்போது 4 மார்ச் 2022 முதல் ஏ. கல்பனா உள்ளார். [2] [3]

முன்பு மேயர் நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவந்தனர். மாமன்ற உறுப்பினர்களிடையே நடக்கும் மறைமுகத் தேர்தலில் மேயர் தேர்ந்தெடுக்க ஏதுவாக அந்தமுறை 2006ல் இது தற்காலிகமாக நீக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2011 இல் நேரடித் தேர்தல் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டது. [4] ஆனால் தற்போது மீண்டும் மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் வழியாக மேயர் தேர்ந்தெடுக்கப்படும் முறை 2022 ஆம் ஆண்டு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேயரின் உத்தியோகபூர்வ அலுவலகம் ஆர். எஸ். புரத்தில் உள்ள வெங்கடசாமி சாலையில் கிழக்கு பகுதியில் உள்ளது.

மேயர்களின் பட்டியல் தொகு

முதல் மேயர் 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 நிலவரப்படி, ஆறு மேயர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். அவர்களில் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து ஒருவர், அ.தி.மு.க.விலிருந்து மூவர், இ.தே.கா.விலிருந்து ஒருவர், தி.மு.க.விலிருந்து ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டுளனர்.

ஆண்டுகள் மேயர் அரசியல் கட்சி குறிப்புகள்
1996–2001 வி. கோபாலகிருஷ்ணன் தமிழ் மாநில காங்கிரசு கோவையின் முதல் மேயர்
2001–2006 தா. மலரவன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2006-2011 ஆர். வெங்கடாசலம் இந்திய தேசிய காங்கிரசு மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்
2011-2014 செ. மா. வேலுச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2014-2016 கணபதி பி. ராஜ் குமார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2022-தற்போது ஏ. கல்பனா திராவிட முன்னேற்றக் கழகம்

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "S.M. Velusamy is Coimbatore Mayor". 21 October 2011. http://www.thehindu.com/news/cities/Coimbatore/sm-velusamy-is-coimbatore-mayor/article2561985.ece. பார்த்த நாள்: 2014-01-23. 
  2. "A. Kalpana set to be Coimbatore's first woman Mayor". The Hindu. 3 March 2022.
  3. "A.Kalpana is Kovai Mayor". The Times of India. 4 March 2022.
  4. "In next local poll, mayors will be elected directly by people". 21 July 2011 இம் மூலத்தில் இருந்து 2014-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202164702/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-21/chennai/29799406_1_mayor-election-local-body-direct-elections. பார்த்த நாள்: 2014-01-24.