கோவிலம்பாக்கம்
கோவிலம்பாக்கம் (ஆங்கிலம்:Kovilambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். கீழ்க்கட்டளை, பல்லாவரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டப் பழமையான ஓர் ஊராகும். தொடர்வண்டி மூலமாகவும், மாநகரப் பேருந்து மூலமாகவும் எளிதில் அடையத்தக்க ஊராக பன்னாட்டு விமான நிலையத்திற்கு சற்று அருகில் உள்ளது.
கோவிலம்பாக்கம் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பெயர்க்காரணம்
தொகுகோவில்+அம்+பாக்கம் என்று பிரித்து அழகிய கோயிலையுடைய ஊர் அல்லது பாக்கம் எனப் பொருள் கொள்ளலாம். தமிழிலக்கணப்படி, பாக்கம் என்பது பொதுவாக கடற்கரை ஒட்டிய நிலப்பகுதியை குறிப்பதாகும். இன்றும் இவ்வூரில் அழகிய பழமையான திருநீலகண்டர் எனும் சிவன் கோயிலை தரிசிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.