கோ. பாலசுப்பிரமணியன்

கோ. பாலசுப்பிரமணியன் முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர் என்ற நிலைகளில் முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.[1] தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 4 அக்டோபர் 2018 அன்று பொறுப்பேற்றுள்ளார்.[2]

பணிதொகு

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் அயலக ஆய்வாளராகவும், போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[1] திராவிட பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.[3]

ஆய்வுகள்தொகு

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூர், கர்நாடகாவில் கோலார் போன்ற எல்லை மாவட்டங்களில் அழியும் நிலையிலிருக்கும் மொழிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். மொழி சந்தித்து வரும் ஆபத்துகளை மதிப்பீடு செய்கின்ற மொழியியல் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.[1]

கட்டுரைகள், நூல்கள்தொகு

தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நான்கு நூல்களை எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._பாலசுப்பிரமணியன்&oldid=2717530" இருந்து மீள்விக்கப்பட்டது