கோ. பாலசுப்ரமணியன்

கோ. பாலசுப்ரமணியன் (G. Balasubramanian, பிறப்பு: 15 ஏப்ரல் 1959) தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 4 அக்டோபர் 2018 [1] [2] [3] முதல் 3 அக்டோபர் 2021 வரை பணியாற்றியுள்ளார்.

கோ.பாலசுப்ரமணியன்

பிறப்பு

தொகு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில் உள்ள காடுவாக்குடியில் பிறந்த இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும் (1983) தமிழ் இலக்கியத்திலும் (1989) முதுகலை பயின்று, முனைவர் பட்டம் (1989) பெற்றுள்ளார்.[3]

பணிகள்

தொகு

ஆய்வுப்பணிகள்

தொகு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் நில அறிவியல் துறையில் திட்ட ஆய்வு உதவியாளராகவும் (1987-89), கோழிக்கோடு பல்கலைக்கழக மலையாளத் துறையில் தமிழ் விரிவுரையாளராகவும், இணைப்பேராசிரியராகவும் (1989-2006), குப்பம் திராவிட பல்கலைக்கழக திராவிட மற்றும் கணினி மொழியியல் இணைப்பேராசிரியராகவும், பேராசிரியராகவும் (2006-2009, 2009-11), போலந்து நாட்டிலுள்ள வார்சா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராகவும் (2011-16) பணியாற்றியுள்ளார். [1] திராவிடப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராகப் (2016-18) பணியாற்றியுள்ளார். [4] மொழியியல், தமிழியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். [5] சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்துள்ளார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தேர்வாளராகவும் இருந்துள்ளார். [6] செக்கோஸ்லோவாகியா (2011), ஹாங்காங் (1997) ஆகிய நாடுகளுக்கு திட்டப்பணியாகவும், கருத்தரங்கில் கலந்துகொள்ளவும் சென்றுள்ளார். [3]

மொழிபெயர்ப்பு

தொகு

தமிழிலிருந்து மலையாளத்திலும் மலையாளத்திலிருந்து தமிழிலும் புதினங்களையும், சிறுகதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். [5] வாச்சக் அவர்களின் இலக்கியத் திறனாய்வு நூலை மொழிபெயர்த்துள்ளார். [6] தமிழ் (தாய்மொழி), ஆங்கிலம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளறிந்தவர். [3]

பிற ஆய்வுகள்

தொகு

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரப்பிரதேசத்தில் சித்தூர், கர்நாடகாவில் கோலார் போன்ற எல்லை மாவட்டங்களில் அழியும் நிலையிலிருக்கும் மொழிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். மொழி சந்தித்து வரும் ஆபத்துகளை மதிப்பீடு செய்கின்ற மொழியியல் ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.[1] தேசிய மற்றும் சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். [4]

வெளியிட்ட நூல்கள்

தொகு
  • சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி தமிழ்ப்புதினத்தின் மலையாள மொழிபெயர்ப்பு, Zero Degree, Tamil Novel by Charuniveditha, Translated by G.Balasubramanian and P.M.Girish, First Impression, September 2001 [7]
  • Studies in Linguistics, Prof.T.B.Venugopala Panicker Felicitation Volume, (Ed) University of Calicut, 2006 [8]
  • சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு, யரோஸ்லவ் வாச்சக், தமிழில் கோ.பாலசுப்ரமணியன், அடையாளம்,புத்தாநத்தம், முதற்பதிப்பு, 2015 [9]
  • மொழியியல் ஒப்பு நோக்கு, ஸ்ரீவெங்கடேஸ்வரா பப்ளிகேஷன்ஸ், குப்பம், முதற்பதிப்பு, 2018 [10]
  • Reflections in Applied Linguistics, Excel India Publishers, New Delhi, First Impression, August 2018 [11]

விருதுகள்

தொகு
  • பல்கலைக்கழக நல்லாசிரியர் விருது (ஆந்திர அரசு, 2013) [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜி.பாலசுப்பிரமணியன் நியமனம், தினத்தந்தி, 30 செப்டம்பர் 2018
  2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு, தினமணி, 5 அக்டோபர் 2018
  3. 3.0 3.1 3.2 3.3 G.Balasubramanian
  4. 4.0 4.1 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம், தினமணி, 30 செப்டம்பர் 2018
  5. 5.0 5.1 5.2 சங்க இலக்கியத்தில் இயற்கைக்குறியீடு, அடையாளம், புத்தாநத்தம், ப.i.
  6. 6.0 6.1 ஒப்பு நோக்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பப்ளிகேசன்ஸ், குப்பம், பின் அட்டை
  7. Zero Degree was translated into Malayalam in 1999 by Dr G.Balasubrahmanian and Dr P.M.Gireesh
  8. Studies in linguistics : Prof. T.B. Venugopala Panicker felicitation volume, University of Wisconsin-Madison Libraries
  9. நூல் அரங்கம், வரப்பெற்றோம், தினமணி, 1 சூலை 2019
  10. இந்த வாரம் கலா ரசிகன், தினமணி, 14 ஏப்ரல் 2019
  11. Reflections on Applied Linguistics[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._பாலசுப்ரமணியன்&oldid=3366566" இலிருந்து மீள்விக்கப்பட்டது