சண்முகசுந்தரம் மோகன்

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி

சண்முகசுந்தரம் மோகன் (Shanmughasundaram Mohan) என்பவர் முன்னாள் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கருநாடக மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் 11 நூல்களும், தமிழில் ஏழு நூல்களும் எழுதியுள்ளார்.

மாண்புமிகு நீதியரசர்
சண்முகசுந்தரம் மோகன்
Shanmughasundaram Mohan
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
1991 அக்டோபர் 07 – 1995 பிப்ரவரி 11
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
1989 அக்டோபர் 19 – 1989 அக்டோபர் 26
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
1988 டிசம்பர் 13 – 1989 அக்டோபர் 18
கருநாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
1989 அக்டோபர் 26 – 1991 அக்டோபர் 06
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
1975 ஆகத்து 01 – 1988 டிசம்பர் 12
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி
பதவியில்
1974 பிப்ரவரி – 1975 சூலை 31
கருநாடக ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
1990 பிப்ரவரி 5 – 1990 மே 8
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-02-11)11 பெப்ரவரி 1930
உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு27 திசம்பர் 2019(2019-12-27) (அகவை 89)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சண்முகசுந்தரம் மோகன் 1930ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளநிலைப் பட்டமும், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.[1] 1954 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்த இவர், 1969ஆம் ஆண்டு ஓர் அரசாங்க வழக்கறிஞரானார் [1] 1956ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை, சென்னை சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக மோகன் பணியாற்றினார்.[2]

சண்முகசுந்தரம் 1971ஆம் ஆண்டு சென்னையின் தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.[1] பிப்ரவரி 1974ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 1975ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியில் நிரந்தர நீதிபதியாக நியமனமானார்.[1] 1989ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதியில் கருநாடக மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இவர் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றாநர். 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[1]

1990ஆம் ஆண்டு பெந்தேகண்டி வெங்கடசுப்பையா பதவி நீக்கப்பட்டதை அடுத்து, இவர் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 1990ஆம் ஆண்டு மே 8 வரை கருநாடக மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்தார்.[1]

ஓய்வுக்குப் பிறகு நீதிபதி மோகன் தேசிய இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளின் தலைவராகவும், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊதியத் திருத்தக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.[3][4] 2004ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக பார்வையாளராக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[3]

2019 திசம்பர் 27 அன்று சண்முகசுந்தரம் மோகன் தமிழ்நாட்டில் சென்னையில் இறந்தார்.[5]

இலக்கியப் பங்களிப்புகள்

தொகு

மோகன் பல்வேறு பாடப்பொருள்களில் ஆங்கிலத்தில் 11 புத்தகங்களையும், கவிதைத் தொகுப்புகள் உட்பட தமிழில் ஏழு புத்தகங்களையும் எழுதியுள்ளார். [3] உலக கலை மற்றும் கலாச்சார அகாடமியின் தலைவராக பணியாற்றினார். 2004-2010 காலகட்டத்தில் ஆறு ஆண்டுகள் உலகக் கவிஞர்கள் மாநாட்டின் தலைவராக இருந்தார்.[4]

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • சிறீ முத்துசுவாமி ஐயர் உதவித்தொகை.[1]
  • லட்சுமிநரசா ரெட்டி தங்கப் பதக்கம் [2]
  • டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் விருது
  • 1952 ஆம் ஆண்டில் சட்டப் படிப்பில் முதல் வகுப்பைப் பெற்றதற்காக சென்னை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் [4]
  • மூன்று வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் உட்பட நான்கு பல்கலைக் கழகங்கள் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "S. MOHAN". karnatakajudiciary.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  2. 2.0 2.1 Saxena, Akshita (2019-12-27). "Former Supreme Court Judge, Justice S. Mohan Passes Away". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  3. 3.0 3.1 3.2 "Former Karnataka Chief Justice S Mohan dies at 90". டெக்கன் ஹெரால்டு (in ஆங்கிலம்). 2019-12-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  4. 4.0 4.1 4.2 4.3 "Late Hon'ble Mr. Justice S. Mohan" (PDF). Supreme Court of India.
  5. "Former top court judge S Mohan dead | Chennai News". The Times of India. 2019-12-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முகசுந்தரம்_மோகன்&oldid=3743907" இலிருந்து மீள்விக்கப்பட்டது