சன்ஸ்கார் மலைத்தொடர்

சன்ஸ்கார் மலைத்தொடர் அல்லது சஸ்கர் மலைத்தொடர் (Zaskar Range or Zanskar Range) இந்தியாவின் இமயமலையில் லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் ஊடாகச் செல்லும் மலைத்தொடர் ஆகும். சன்ஸ்கார் மலைத்தொடர் ஜம்மு காஷ்மீரையும், லடாக் பிரதேசத்தையும் பிரிக்கிறது.[1]

சன்ஸ்கார் மலைத்தொடர்
உயர்ந்த புள்ளி
உச்சிகாமேத், சமோலி மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
உயரம்7,756 m (25,446 அடி)
புடைப்பு2,825 m (9,268 அடி)
பரிமாணங்கள்
பரப்பளவு7,000 km2 (2,700 sq mi)
புவியியல்
அமைவிடம்இந்தியாவின் லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள்
சன்ஸ்கார் மலைத்தொடரின் அமைவிடம்

புவியியல் படி, சன்ஸ்கார் மலைத்தொடர், இமயமலையின் 100 கிமீ கொண்ட ஒரு நீட்சியாகும். சன்ஸ்கார் மலைத்தொடரின் அதிகபட்ச உயரம் 6,000 மீ (19,700 அடி) ஆகும். இதன் கிழக்குப் பகுதியை ருப்சு என்பர். இது டிரான்ஸ்-இமயமலையின் ஒரு பகுதியாகும்.[2] இம்மலைத்தொடர் 7,000 சதுர கிலோமீட்டர்கள் (2,700 sq mi) பரப்பளவும், 3,000 முதல் 7,000 மீட்டர் வரை உயரம் கொண்டது. இம்மலைத்தொடரின் லடாக் பகுதியில் சன்ஸ்கார் ஆறு மற்றும் சன்ஸ்கார் பள்ளத்தாக்கும் கொண்டது.

இம்மலைத்தொடர் லடாக்கின் சுரு ஆற்றுக்கு தென்கிழக்காக 640 கிமீ (400 மைல்) நீண்டு, உத்தராகண்ட் மாநிலத்தின் மேல் சாரதா ஆறு வரை நீன்டு செல்கிறது. இம்மலைத்தொடரின் அதிகபட்ச உயரமான இடம் சமோலி மாவட்டத்தில் உள்ள காமெத் கொடுமுடி ஆகும். இது 7,756 மீ உய்ரம் கொண்டது. இம்மலைத்தொடரில் சிப்கி லா லிபுலெக் கணவாய்கள் உள்ள்து.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்ஸ்கார்_மலைத்தொடர்&oldid=3869239" இலிருந்து மீள்விக்கப்பட்டது