சபாஷ் ராமு
சபாஷ் ராமு 1959 ஆம் ஆண்டு வெளியான இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். இது தெலுங்கு மொழியில் வெளியான சபாஷ் ராமுடு என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் ஆகும். சி. எஸ். ராவ் இயக்கத்தில் உருவான இத் திரைப்படத்தில் என். டி. ராமராவ், தேவிகா, ரேலங்கி, எம். என். ராஜம், கிரிஜா, டி. எல். காந்தாராவ், ஆர். நாகேஸ்வரராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். கண்டசாலா இசையமைத்திருந்தார்.[1]
சபாஷ் ராமு | |
---|---|
இயக்கம் | சி. எஸ். ராவ் |
தயாரிப்பு | சுந்தர்லால் நஹதா டி. அஸ்வத்நாராயணா |
திரைக்கதை | சதாசிவப்பிரம்மம் |
இசை | கண்டசாலா |
நடிப்பு | என். டி. ராமராவ் தேவிகா ரேலங்கி எம். என். ராஜம் |
கலையகம் | ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 5 ஆகத்து 1959(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இடம்பெற்ற சில பாடல்கள்
தொகுபாடல்களை இயற்றியவர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி
- கலை எழில் வீசியே - ஏ. எம். ராஜா, பி. சுசீலா
- ஹலோ டார்லிங் பறந்தோடி வா - எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி
- ஓ சந்திர பிம்பம் தனைப் பாரடா - கே. ராணி
- ஜெயம் நிச்சயமடா - சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், பி. கே. சரஸ்வதி
- எழில் மேவும் முகுந்தனை - ஜிக்கி
- ஆரமுதே துரை ராஜா, ஆனந்த நித்ரை செய்வாய் - பி. சுசீலா
- தேவா உனைப் பணிவேன் -- பி. லீலா