சபா கமர் (நடிகை)

பாக்கித்தான் நடிகை

சபா கமர் அல்லது சபாஹத் கமர் சமான் (ஆங்கிலம்: Saba Qamar) என்றழைக்கப்படும் இவர் ஒரு பாக்கித்தான் நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவர் 1984 ஏப்ரல் 5 அன்று பிறந்தவர். பாக்கித்தானின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கமர், லக்ஸ் ஸ்டைல் விருது, ஹம் விருது மற்றும் பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரை உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்றவர். பாக்கித்தான் அரசாங்கத்தால் 2012 இல் தம்கா-இ-இம்தியாஸ் மற்றும் 2016 ஆம் ஆண்டில் செயல்திறன் பெருமை ஆகியவற்றால் கௌரவிக்கப்பட்டார் . மெய்ன் ஆரத் ஹூன் (2005) என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒரு பாத்திரத்துடன் தனது நடிப்பில் அறிமுகமானார். ஏஆர்.ஒய் டிஜிட்டலின் நீதிமன்ற அறை நாடகமான சீக் (2019) என்பதில் கமர் கடைசியாக மன்னாட் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் .

சபா கமர்
2017 விருது நிகழ்ச்சியில் சபா கமர்
பிறப்புSaba Qamar சமன்
5 ஏப்ரல் 1984 (1984-04-05) (அகவை 40)
ஐதராபாத் (பாகிஸ்தான்), பாக்கித்தான்
இருப்பிடம்லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
தேசியம்பாகிஸ்தானியர்
பணிநடிகர், வழங்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்பொழுது

இந்திய பாக்கித்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு 2010 இல் ஒளிபரப்பப்பட்ட தஸ்தான் என்ற தொலைக்காட்சித் நாடகமான கமரின் முதல் வெற்றியாக நிரூபிக்கப்பட்டது, அதில் அவர் நாயகிக்கு இணையான ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்மூலம்அவர் பாக்கித்தான் மீடியா விருதைப் பெற்றார், மேலும் பானி ஜெய்சா பியார் மற்றும் சமூக நாடகமான தாகன் ஆகிய நாடகங்களில் நடித்த்ததின் மூலம் உருது தொலைக்காட்சியில் முன்னணி நடிகையாக தன்னை நிறுவிக்கொண்டார்.

கமர் சர்மத் கூசத்தின் 2015 ஆம் ஆண்டு திரைப்படமான மாண்டோ என்றத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவரது மிகப்பெரிய வணிக வெற்றி 2016 இ8ல் வெளிவந்த ரோம்-காம் லாகூர் சே ஆகே என்பதாகும். சர்வதேச அளவில், 2017 ஆம் ஆண்டு இந்தி மீடியம் என்ற நகைச்சுவை-நாடகத்தில் அவர் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார், இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் இடம் பெற்றது மற்றும் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றது. அவர் 2018 இல் வெளியான குறும்படங்களான மூமல் ரானோ, தில் தியான் கல்லன் மற்றும் இஸ் தில் கி எஸி கி டெஸ்ஸி ஆகியவற்றில் நடித்தார். நடிப்பைத் தவிர, அரசியல் நையாண்டியான ஹம் சப் உமீத் சே ஹைன் என்ற நிகழ்ச்சியில்' தொகுப்பாளராகவும் நகைச்சுவை நடிகையாகவும் பணியாற்றுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கமர் 1984 ஏப்ரல் 5, அன்று சிந்து மாகாணத்தில் ஐதராபாத்தில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார்.[1][2] அவர் மிகச் சிறிய வயதிலேயே தந்தையை இழந்து, தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை குஜ்ரான்வாலாவில் தனது பாட்டியுடன் கழித்தார். குஜ்ரான்வாலாவில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார், பின்னர் மேலதிக படிப்பைத் தொடர லாகூர் சென்றார். அவரது குடும்பம் கராச்சியில் குடியேறியது.[3]

பிற பணிகள்

தொகு

2009 ஆம் ஆண்டில், கமர் ஒரு அரசியல் நையாண்டியான ஹம் சப் உமீத் சே ஹைன் என்ற ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சி வழங்குபவராகும் சேர்ந்தார், அங்கு அவர் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களைப்போல பகடிகளை செய்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது மற்றும் பாக்கித்தானில் மதிப்பீடுகளில் முதலிடத்தில் இருந்தது. 2013 இல் அவர் இந்நிகழ்ச்சியிலிருந்து விலக முடிவு செய்தார், இவருக்கு பதிலாக மீரா நியமிக்கப்பட்டார்.[4] ஜனவரி 2018 இல், மஹித் கவரின் படைப்பான "பத்மாவத்" படத்திற்கான புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் தோன்றினார், அங்கு அவர் ராணி பத்மாவதி போல் ஆடை அணிந்தார்.[5]

குறிப்புகள்

தொகு
  1. "Happy Birthday Saba Qamar!". The News International. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.
  2. "You should watch these five performances of Saba Qamar on her birthday!". https://en.dailypakistan.com.pk/lifestyle/you-should-watch-these-five-performances-of-saba-qamar-on-her-birthday/. பார்த்த நாள்: 2018-07-25. 
  3. "First person: Scent of a woman". April 21, 2013.
  4. "Saba Qamar's Bollywood Journey ~ Hum Sab Umeed Say Hain to Hindi Medium". DESIblitz (in ஆங்கிலம்). 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2018-12-19.
  5. "Is that Saba Qamar or Deepika Padukone?". Daily Pakistan Global (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_கமர்_(நடிகை)&oldid=3583852" இலிருந்து மீள்விக்கப்பட்டது