சப்தசஜ்யா என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தேங்கானாள் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு முக்கியமான நிறுவனங்களாகஇந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் சப்தசஜ்யா மாம்பழ மரபணு வங்கி,[2] உயர்நிலைப்பள்ளி,[3] தேக்கு மர தோட்டம்[4] மற்றும் தேனீ பண்ணை ஆகியவை அடங்கும்.[5]

சப்தசஜ்யா
Sapta Sajya
கிராமம்
சப்தசஜ்யா கிராமம் (வடக்கிலிருந்து பார்வை)
சப்தசஜ்யா கிராமம் (வடக்கிலிருந்து பார்வை)
சப்தசஜ்யா is located in ஒடிசா
சப்தசஜ்யா
சப்தசஜ்யா
சப்தசஜ்யா is located in இந்தியா
சப்தசஜ்யா
சப்தசஜ்யா
ஆள்கூறுகள்: 20°34′29″N 85°32′52″E / 20.5746131°N 85.5478763°E / 20.5746131; 85.5478763
நாடுஇந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்டேங்கானாள்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
ஏற்றம்
77.2 m (253.3 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • கிராமம்1,091
 • நாட்டுப்புறம்
1,091
Postal code
759013
இணையதளம்Official Website

நிலவியல்

தொகு

இந்த சிறிய கிராமம் தேங்கானாளிலிருந்து 11 கிலோமீட்டர்கள் (6.8 mi) ) தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதி சாலை போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. 1982ல் அரசு சாலை அமைத்தது. இதன் அருகிலுள்ள கிராமங்களாகப் படகிலா, சதேபிரேனி, பத்ரபள்ளி, கம்னிங், பத்மநாவ்பூர் மற்றும் பத்ரபாக் ஆகியவை அடங்கும்.

மக்கள்தொகையியல்

தொகு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1091 நபர்களைக் கொண்ட சப்தசஜ்யாவில் மொத்தம் 268 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 548 பேர் ஆண்கள் மற்றும் 543 பேர் பெண்கள் என சப்தசஜ்யாவின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 991 பெண்கள் ஆகும். இது ஒடிசா மாநில சராசரியான 979 ஐ விட அதிகமாக உள்ளது. இருப்பினும், குழந்தைகளில் சப்தசஜ்யா 1000 ஆண்களுக்கு 809 பெண்களைக் கொண்டுள்ளது. இது ஒடிசாவின் சராசரியான 941 ஐ விட மிகக் குறைவு.

ஒடிசாவுடன் ஒப்பிடும்போது சப்தசஜ்யா கிராமம் அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. 2011ஆம் ஆண்டில், ஒடிசாவின் 72.87% ஆக இருந்த சப்தசஜ்யா கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 85.81% ஆக உயர்ந்தது. ஆண்களின் கல்வியறிவு 88.02% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 83.65% ஆகவும் உள்ளது.

புராணம்

தொகு

புராண ரீதியாக இந்த இடம் பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த கிராமத்தின் பெயர் சுற்றியுள்ள ஏழு மலைகளிலிருந்து வந்தது.[6] இந்த இடத்தில் சப்த ரிஷிகள் தங்கள் ஆசிரமங்களைக் கொண்டிருந்தனர்; அதனால் இந்த இடத்திற்கு ஏழு படுக்கைகள் அல்லது ஏழு வீடுகள் என்று பெயர் வந்தது என ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. வனவாசத்தின் போது இராமர் ஏழு நாட்கள் இத்தலத்திலிருந்ததாக ஒரு புராணக் கதையும் உள்ளது. மற்றொரு நாட்டுப்புறக் கதையின்படி, பாண்டவர்கள் 12 ஆண்டுக்கால வனவாசம் மற்றும் ஒரு வருட விராட பருவத்தின் (மறைநிலை நாடுகடத்தல்) போது இந்த மலைகளைத் தங்குமிடமாகத் தேர்ந்தெடுத்தனர்.[7]

சுற்றுலா

தொகு

சப்தசஜ்யா ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகும்.[8][9] இதன் அருகிலுள்ள சுற்றுலா மையமான தேன்கனல் கிராமத்திற்குத் தினசரி சுற்றுலா செல்வது சிறந்த வழி என்று பெரும்பாலான சுற்றுலா தளங்களில் அறிவுறுத்தப்படுகிறது. இக்கிராமத்தில் உணவகங்கள் அல்லது பொருத்தமான நகர்ப்புற தங்குமிட வசதிகள் எதுவும் இல்லை.

வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட இந்த காப்புக்காடு, பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து ஒரு நல்ல மனமகிழ் பகுதியாக உள்ளது.[10] இதன் அருகிலுள்ள விமான நிலையம் புவனேசுவரில் உள்ள பிஜு பட்நாயக் வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பேருந்து மற்றும் தொடருந்து நிலையம் தேனங்கானாள் ஆகும்.

கோவில்கள்

தொகு

இந்த இடத்தின் இயற்கைச் சூழலைத் தவிர, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பல பழமையான கோயில்களும் உள்ளன. சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் ஈர்க்கும் ஒரு குறிப்பிட்ட ரகுநாத் கோயில் வளாகத்தில் முக்கியத் தெய்வம் இராமர். கோயில் வளாகத்தின் உள்ளே அன்னபூரணி கோயில் 1982-ல் கட்டப்பட்டது. இதன் முதல் மாடியில் காளி கோயில் 1985லும் சூரிய நாராயண் கோவில் 1990லும் கட்டப்பட்டது. இராமேசுவரத்தில் உள்ள சிவன், விநாயகர், மகாவீரர் கோயில்கள், நவகிரகங்கள் என ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு மாடம் உள்ளது. மகாகாளி, மாதா சரசுவதி, ஸ்ரீ ந்ருஷிங்கா கோயில் ஆகியவையும் இந்தப் புனித வளாகத்தில் கட்டப்பட உள்ளன.[11]

சப்தசஜ்யா வனவிலங்கு சரணாலயம்

தொகு

சோட்டா நாக்பூர் மேட்டுநிலப்[12] பகுதியில் சப்தசஜ்யா வனவிலங்கு சரணாலயம் (மாற்றாக, சப்தசஜ்யா காப்புக் காடு) ஒப்பீட்டளவில் 20 km2 (8 sq mi)[13] பாதுகாக்கப்பட்ட சிறிய வனப்பகுதியாகும்.[12] இதுகுங்கிலியம் மரத்தின் ஆதிக்கம் கொண்ட கலப்பு இலையுதிர் காடு ஆகும்.[14] இது 1970-ல் அதிகாரப்பூர்வமாக ஒரு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்குக் காணப்படும் முக்கிய விலங்கினங்கள் காட்டு ஆடுகள், எருமைகள், மாடுகள், சிறுத்தை மற்றும் பல்வேறு பறவைகள்.[12][15]

படங்கள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Saptasajya Population - Dhenkanal, Orissa". பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  2. "Mango genes find a storage". ABP News. 23 June 2014. http://www.abplive.in/india/2014/06/23/article348626.ece/Mango-genes-find-a-storage. 
  3. "Saptasajya H S School". பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  4. "Teak Garden in Saptasajya going to be a Tourism Destination". Archived from the original on 2 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "ESTABLISHMENT OF BEE NURESERIES AND TRAINING CENTRE" (PDF). Directorate of Horticulture, ஒடிசா அரசு. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
  6. "Dhenkanal: Odisha's very own hill station". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 Dec 2013. http://timesofindia.indiatimes.com/life-style/Dhenkanal-Odishas-very-own-hill-station/articleshow/9579724.cms. 
  7. "Orissa Tourism - Dhenkanal". Archived from the original on 2014-11-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
  8. "A PLACE OF SCENIC BEAUTY SAPTASAJYA ସପ୍ତଶଯ୍ୟା ;A Picnic Spot in Dhenkanal, #Odisha". eOdisha. 10 Dec 2013. http://eodisha.org/place-scenic-beauty-saptasajya-%E0%AC%B8%E0%AC%AA%E0%AD%8D%E0%AC%A4%E0%AC%B6%E0%AC%AF%E0%AD%8D%E0%AD%9F%E0%AC%BE-picnic-spot-dhenkanal-odisha/. 
  9. "Saptasajya to become eco-tourism hotspot". The Telegraph (Calcutta). 28 Nov 2014. http://www.telegraphindia.com/1141128/jsp/odisha/story_19094473.jsp#.VZNlDRuqqko. 
  10. "Odisha govt okays acquisition of 558 acres of private land for NTPC Gajamara project". 6 Jul 2014. http://odishasuntimes.com/69269/odisha-govt-okays-acquisition-558-acres-private-land-ntpc-gajamara-project/. 
  11. "Destinations :: Dhenkanal". Orissa Tourism. Archived from the original on 11 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  12. 12.0 12.1 12.2 Negi, S.S. (1991). Handbook of national parks, sanctuaries and biosphere reserves in India (1. publ. ed.). New Delhi: Indus Publ. Co. p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185182590.
  13. Negi, S.S. (1993). Biodiversity and its conservation in India. New Delhi: Indus. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185182884.
  14. Mohapatra, P. M.; Mohapatro, Prafulla Ch. Forest Management in Tribal Areas. New Delhi: Concept Publishing Company. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170226716.
  15. Nair, Anirudh (June 2014). "The Bhubaneswar Bird Walks". Sanctuary Asia XXXV (3). http://www.sanctuaryasia.com/resources/ngo-profiles/9751-the-bhubaneswar-bird-walks.html. பார்த்த நாள்: 2022-09-19. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தசஜ்யா&oldid=3747546" இலிருந்து மீள்விக்கப்பட்டது