சமணச் சமூகம்

சமணச் சமூகம் என்பது சமணச் சமயத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும். இவர்களை ஜெயினர்கள் என்றும் அழைப்பர். இவர்கள் பண்டைய சமணச் சிரமண மரபைப் பின்பற்றுபவர்கள். இச்சமூகத்தவர்களின் வழிகாட்டிகள் தீர்த்தங்கரர்கள் ஆவார். இவர்களின் இரண்டு பிரிவிரினர்களில் ஒருவர் சுவேதாம்பரர், மற்றொரு பிரிவினர் திகம்பரர் ஆவார். தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் சமணச் சமூத்தவர்களை தமிழ்ச் சமணர்கள் என்று அழைப்பர். சமணச் சமூகம் இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் வாழ்கிறார்கள். சமணச் சமூகத்தினர், சமணச் சமயக் கொள்கைக்கு இணங்க சமண சமூகத்தவர்கள் வேளாண்மைத் தொழிலில் மட்டும் ஈடுபடுவதில்லை. மேலும் இச்சமூகத்தினர் மாமிச உணவு உண்பதில்லை. பலர் சூரியன் மறைந்து, இருள் நேரத்தில் உணவு உண்பதில்லை.

சங்கம்

தொகு

ஜெயின் சமூகத்தில் நால்வகைப் பிரிவினர் உள்ளனர். அவர்களை முனி (ஆண் துறவிகள்), அர்க்கியா அல்லது சாத்வி எனும் பெண் துறவிகள், சிரமணர்கள் (சமணத்தைப் பின்பற்றும் ஆண்கள்) மற்றும் சிராவிகா(சமணத்தைப் பின்பற்றும் பெண்கள்) ஆவார்.இந்த வகையினரைச் சங்கம் என்று அழைப்பர்.

மக்கள் தொகை & செல்வ நிலை

தொகு

இந்தியாவில் உள்ள சமயங்களில் அதிகம் எழுத்தறிவு கொண்டவர்களில் சமணர்களே ஆவார். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சமண சமூகத்தவர்களின் எழுத்தறிவு 94.1% ஆகும். அதே நேரத்தில் இந்திய சராசரி எழுத்தறிவு 65.38% ஆகும். சமணச் சமூகப் பெண்களின் எழுத்தறிவு 90.6.%: அதே நேரத்தில் தேசிய அளவில் பெண்களின் சராசரி எழுத்தறிவு 54.16%. ஆகும்.[1][2]

2018ஆம் ஆணடின் தேசியக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மற்ற சமய சமூகத்திரை விட, ஜெயின் சமூகத்தவர்களில் 70% செல்வத்தின் உச்சத்தில் வாழ்கின்றனர்.[3]

சமணச் சமூக பிரிவுகள்

தொகு

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சமணர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சமணர்களில் 100 வகையான சமூகப் பெயர்களில் வாழ்கின்றனர். எடுத்துக்காட்டு: தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் தமிழ்ச் சமணர்கள் வாழ்கிறார்கள். சமணச் சமூகத்தவர்களை வரலாற்று மற்றும் தற்கால வாழ்விடங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து பிரிவாக பிரிக்கப்படுகின்றனர்.

  • இராஜஸ்தான் ஜெயின் (மார்வாடி ஜெயின்)
  • குஜராத்தி ஜெயின்
  • மராத்தி ஜெயின்
    • மும்பை ஜெயின்
  • தில்லி ஜெயின்
  • உத்தரப் பிரதேச ஜெயின்
  • வங்காள ஜெயின்
  • நாகாலாந்து ஜெயின்

புலம் பெயர்ந்த ஜெயின்கள்

தொகு
  • ஐரோப்பாவில் புலர்பெயர்ந்த ஜெயின்கள்
  • கனடாவில் புலம்பெயர்ந்த ஜெயின்கள்
  • அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்த ஜெயின்கள்
  • கிழக்கு ஆப்பிரிக்காவில் புலம்பெயர்ந்த ஜெயின்கள். (1960களின் துவக்கத்தில் ஜெயின் மக்கள் தொகை 45,000 ஆகும்.[4] இவர்களில் பெரும்பாலோர் ஜாம்நகரைச் சேர்ந்த குஜராத்தி மொழி பேசும் ஹலாரி விசா ஓஸ்வால் ஜெயின் சமூகத்தினர் ஆவார்.[4][5]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் ஜெயின் சமூகத்தவர்களின் மக்கள் தொகை 0.54%. (4,451,75) ஆகும். அதில் ஆண்கள் 2,278,097 மற்றும் பெண்கள் 2,173,656)[6]

வரிசை எண் மாநிலம் மக்கள் தொகை ஊரகம் நகர்புறம் ஆண்கள்
மொத்தம்
நகர்புற
ஆண்கள்
ஊரக
ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
ஊரகப்
பெண்கள்
நகர்புற
பெண்கள்
1 இந்தியா 4,451,753 904,809 3,546,944 2,278,097 467,577 1,810,520 2,173,656 437,232 1,736,424
2 மகாராட்டிரா 1,400,349 269,959 1,130,390 713,157 140,476 572,681 687,192 129,483 557,709
3 இராஜஸ்தான் 622,023 166,322 455,701 317,614 84,649 232,965 304,409 81,673 222,736
4 குஜராத் 579,654 44,118 535,536 294,911 22,357 272,554 284,743 21,761 262,982
5 மத்தியப் பிரதேசம் 567,028 109,699 457,329 291,937 57,431 234,506 275,091 52,268 222,823
6 கர்நாடகா 440,280 220,362 219,918 225,544 113,598 111,946 214,736 106,764 107,972
7 உத்தரப் பிரதேசம் 213,267 30,144 183,123 110,994 15,852 95,142 102,273 14,292 87,981
8 தில்லி 166,231 192 166,039 85,605 94 85,511 80,626 98 80,528
9 தமிழ்நாடு 89,265 10,084 79,181 45,605 5,044 40,561 43,660 5,040 38,620

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஜெயின் மக்கள் தொகை 150,000 முதல் 200,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[7][8] ஜப்பான் நாட்டில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமண சமயத்திற்கு மாறியுள்ளதால், அங்கு ஜெயின் சமூகம் வளர்கிறது.[9]

புகழ்பெற்ற ஜெயின் சமூகத்தவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Jains steal the show with 7 Padmas", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 9 April 2015
  2. "Literacy race: Jains take the honours", The Times of India, 7 September 2004
  3. "Delhi and Punjab richest states, Jain wealthiest community: National survey". 13 January 2018.
  4. 4.0 4.1 Gregory, Robert G. (1993), Quest for equality: Asian politics in East Africa, 1900-1967 (in ஆங்கிலம்), New Delhi: Orient Longman Limited, p. 26, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-863-11-208-0
  5. Mehta, Makrand (2001). "Gujarati Business Communities in East African Diaspora: Major Historical Trends". Economic and Political Weekly 36 (20): 1738–1747. 
  6. Office of registrar general and census commissioner (2011), C-1 Population By Religious Community, Ministry of Home Affairs, Government of India
  7. Lee, Jonathan H. X. (21 December 2010), Encyclopedia of Asian American Folklore and Folklife (in ஆங்கிலம்), ABC-CLIO, pp. 487–488, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-35066-5
  8. Wiley, Kristi L. (2004), Historical dictionary of Jainism (in ஆங்கிலம்), Scarecrow Press, p. 19, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-5051-4
  9. "Thousands of Japanese making a smooth transition from Zen to Jain". Hindustan Times. 23 February 2020.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணச்_சமூகம்&oldid=4154636" இலிருந்து மீள்விக்கப்பட்டது