சயனோடெர்மா
சயனோடெர்மா | |
---|---|
செந்தலை சிலம்பன் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | திம்மாலிடே
|
பேரினம்: | சயனோடெர்மா
|
மாதிரி இனம் | |
சயனோடெர்மா எரித்ரோப்டெரம் பிளைத், 1842 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
சயனோடெர்மா (Cyanoderma) என்பது பழைய உலக சிலம்பன் குடும்பமான திமாலிடேயில் உள்ள குருவி பேரினமாகும். இந்த பேரினத்தின் பல சிற்றினங்கள் முன்பு இசுடாச்சிரிசு பேரினத்தில் வைக்கப்பட்டன
வகைப்பாட்டியல்
தொகு2012-இல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு இனவரலாற்று ஆய்வில், இசுடாச்சிரிசு பேரினமானது பலதொகுதி மரபு உயிரினத் தோற்றத்தினைக் கொண்டது என்று கண்டறியப்பட்டது. ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத் தோற்ற வகைகளை உருவாக்குவதற்கான அடுத்தடுத்த மறுசீரமைப்பில், இசுடாச்சிரிசுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட சிற்றினங்களின் குழுவிற்கு இடமளிக்க சயனோடெர்மா பேரினமானது தோற்றுவிக்கப்பட்டது.[1][2] சயனோடெர்மா பேரினமானது 1874ஆம் ஆண்டில் இத்தாலிய விலங்கியல் நிபுணரான டோமாசோ சால்வதோரி என்பவரால் கசுகொட்டை-சிறகு சிலம்பனை மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இந்த பெயர் பண்டைய கிரேக்க குவானோசு அதாவது "அடர்-நீலம்" மற்றும் "தோல்" என்று பொருள்படும் டெர்மாவை இணைக்கிறது.
சிற்றினங்கள்
தொகுஇந்தப் பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:[2]
படம் | பொது பெயர் | அறிவியல் பெயர் | விநியோகம் |
---|---|---|---|
கசுகொட்டை-சிறகு சிலம்பன் | சயனோடெர்மா எரித்ரோப்டெரம் | மலாய் தீபகற்பம், சுமத்ரா | |
சாம்பல்-தலை சிலம்பன்[4] | சயனோடெர்மா பைகலர் | போர்னியோ | |
பிறை-மார்பு சிலம்பன் | சயனோடெர்மா மெலனோதோராக்ஸ் | ஜாவா மற்றும் பாலி | |
செம்பழுப்பு மார்பு சிலம்பன் | சயனோடெர்மா ரூபிப்ரான்சு | சிக்கிம், பூடான் கதவுகள் மற்றும் வடகிழக்கு இந்தியா | |
செந்தலை சிலம்பன் | சயனோடெர்மா ரூபிசெப்சு | கிழக்கு இமயமலை முதல் வடக்கு தாய்லாந்து, லாவோஸ், கிழக்கு சீனா முதல் வியட்நாம் மற்றும் தைவான் வரை | |
கருங்கன்ன சிலம்பன் | சயனோடெர்மா பைரோப்சு | பாகிஸ்தானின் முர்ரி மலையிலிருந்து கிழக்கு நேபாளம் வரையிலான இமயமலை | |
தங்கச் சிலம்பன் | சயனோடெர்மா கிரிசேயம் | கிழக்கு இமயமலை முதல் தென்கிழக்கு ஆசியா வரை | |
பப்-மார்பு சிலம்பன் | சயனோடெர்மா ஆம்பிகம் | கிழக்கு இமயமலை முதல் தெற்கு லாவோஸ் வரை |
தாய்லாந்தில் உள்ள தோய் சியாங் தாவோவில் 1939-இல் சேகரிக்கப்பட்ட தீக்னனின் சிலம்பன் சயனோடெர்மா ரோடோல்பி, செம்முக சிலம்பனை ஒத்ததாகக் கருதப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Moyle, R.G.; Andersen, M.J.; Oliveros, C.H.; Steinheimer, F.D.; Reddy, S. (2012). "Phylogeny and biogeography of the core babblers (Aves: Timaliidae)". Systematic Biology 61 (4): 631–651. doi:10.1093/sysbio/sys027. பப்மெட்:22328569.
- ↑ 2.0 2.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (August 2022). "Babblers & fulvettas". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022.
- ↑ Tommaso Salvadori (1874). "Catalogo sistematico degli uccelli de Borneo" (in Italian, Latin). Annali del Museo Civico di Storia Naturale di Genova 5: 1–380 [213]. https://www.biodiversitylibrary.org/page/29877039.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
- ↑ Collar, N. J. (2006). "A partial revision of the Asian babblers (Timaliidae)". Forktail (22): 85–112. https://orientalbirdclub.org/wp-content/uploads/2012/09/Collar-Babbler.pdf.