சராய்தியோ மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம்

சராய்தியோ மாவட்டம் (Charaideo district) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் மேல் அசாம் கோட்டத்தில் உள்ள சிவசாகர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக்க் கொண்டு சராய்தியோ மாவட்டம் நிறுவப்படும் என அசாம் மாநில முதல்வர் தருண் குமார் கோகய் 15 ஆகஸ்டு 2015 அன்று அறிவித்தார்.[1] சிவசாகர் மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த சராய்தியோ மாவட்டம் 27 சனவரி 2016 முதல் செயல்படத் துவங்கியது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சோனாரி நகரம் ஆகும்.

சராய்தியோ மாவட்டம்
சராய்தியோ
Location of சராய்தியோ மாவட்டம்
Map
Charaideo district
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்மேல் அசாம் கோட்டம்
தலைமையிடம்சோனாரி
பரப்பளவு
 • மொத்தம்1,069.15 km2 (412.80 sq mi)
ஏற்றம்
89.6 m (294.0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,71,418
 • அடர்த்தி440/km2 (1,100/sq mi)
மொழிகள்
 • அலுவலம்அசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுAS 33
இணையதளம்www.charaideo.gov.in

சராய்தியோ மாவட்டத்தின் வடகிழக்கில் திப்ருகார் மாவட்டம், தெற்கில் நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம், மேற்கில் சிவசாகர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. நாகாலாந்து மாநிலத்துடன் 35 கிமீ மற்றும் அருணாச்சலப் பிரதேசத்துடன் 27 கிமீ எல்லையை இம்மாவட்டம் கொண்டுள்ள்து. இம்மாவட்டத்தில் பாயும் முதன்மை ஆறுகள் தேசாங், தவ்கக், சுப்பிரி, திமோன் மற்றும் தியோக் ஆறுகள் ஆகும்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

இம்மாவட்டம் சோனாரி, சபேகட்டி, மக்மோரா மற்றும் மசிரா (பகுதி) என நான்கு வருவாய் வட்டங்களையும், அப்ஹோய்பூர் (சோனாரி), மக்மோரா, சபேகட்டி மற்றும் லக்வா எனும் 4 ஊராட்சி ஒன்றியங்களும், 327 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2]

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1069.15 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 4,71,418 ஆகும். இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 89.6 மீட்டர் உயரத்தில் உள்ளது. இம்மாவட்டம் 14,863.64 ஹெக்டேர் பரப்புள்ள காடுகளையும், 17,083 பிகா (14,400 சதுர அடி அல்லது 1,340 சதுர மீட்டர் கொண்டது ஒரு பிகா) மேய்ச்சல் நிலங்களையும் கொண்டது. மேலும் இம்மாவட்டத்தில் 54 தேயிலைத் தோட்டகளும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் சோனாரி

கல்வி நிலையங்கள்

தொகு
  1. சோனாரி வணிகக் கல்லூரி
  2. போர்ஹத் பி பி பி எம் கல்லூரி
  3. மொரான் கல்லுரி
  4. மொரான் மகளிர் கல்லூரி
  5. சபேக்கட்டி கல்லூரி
  6. சோனாரி கல்லூரி

அரசியல்

தொகு

இம்மாவட்டம் மக்மோரா மற்றும் சோனாரி என 2 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது. ஜோர்கத் மக்களவைத் தொகுதியில் இம்மாவட்டம் உள்ளது.

போக்குவரத்து

தொகு

மாநிலச் சாலைகள் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Assam gets five more districts
  2. "CHARAIDEO DISTRICT". Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்தியோ_மாவட்டம்&oldid=4060424" இலிருந்து மீள்விக்கப்பட்டது