சரிபா ரோட்சியா பாரக்பா

துங்கு அப்துல் ரகுமான் அவர்களின் மனைவி

துன் சரிபா ரோட்சியா பாரக்பா (ஆங்கிலம்: Tun Sharifah Rodziah Barakbah; சாவி: شريفة راضية بنت سيد علوي برقبة;) பிறப்பு: 1920 – இறப்பு: 12 மார்ச் 2000) என்பவர் மலேசியாவின் 1-ஆவது பிரதமரும்; மலேசியத் தந்தையுமான துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman Putra Al-Haj) அவர்களின் மூன்றாவது மனைவி ஆவார்.

சரிபா ரோட்சியா பாரக்பா
Sharifah Rodziah Barakbah
1-ஆவது மலேசிய பிரதமரின் மனைவி
'
31 ஆகத்து 1957 – 22 செப்டம்பர் 1970
ஆட்சியாளர்கள் நெகிரி அப்துல் ரகுமான்
சிலாங்கூர் இசாமுதீன்
பெர்லிஸ் சையது அருண்
திராங்கானு நசிருதீன்
கெடா அப்துல் ஆலிம்
பிரதமர்துங்கு அப்துல் ரகுமான்
பின்னவர்ரகா நோவா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1920
இறப்பு12 மார்ச் 2000 (அகவை 79–80)
பினாங்கு, மலேசியா
இளைப்பாறுமிடம்கெடா அரச கல்லறை
துணைவர்(கள்)
பிள்ளைகள்3 (வளர்ப்பு பிள்ளைகள்)

இவர் 31 ஆகத்து 1957 தொடங்கி, 22 செப்டம்பர் 1970 வரையிலும்; ஏறக்குறைய 13 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்துள்ளார். இவர் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்தவர்களில் மிக மூத்தவராகவும் அறியப்படுகிறார்.

தொடக்க கால வாழ்க்கை

தொகு
 
1968-இல் இந்திரா காந்தி மலேசியாவிற்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

1920-இல் பிறந்த சரிபா ரோட்சியா பாரக்பா; யெமன் நாட்டின் அத்ராமி-மலாய் (Hadhrami-Malay) வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் அரேபிய மூதாதையர்கள் யெமன் இத்ரமாத் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பல தலைமுறைகளாக கெடாவில் வாழ்ந்தனர்[1]

பராக்பா குலத்தைச் சேர்ந்த இவர், பினாங்கின் முன்னாள் யாங் டி பெர்துவா நெகிரி (ஆளுநர்) சையது சா அசன் பராக்பாவுடன் (Syed Sheh Hassan Barakbah) வம்சாவளி தொடர்புடையவர்.

இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த துங்கு அப்துல் ரகுமான், இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் தொடங்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு இங்கிலாந்திலிருந்து கெடாவுக்குத் திரும்பினார்.

திருமணம்

தொகு

பின்னர் 1939-இல் துங்கு அப்துல் ரகுமான், சரிபா ரோட்சியாவைத் திருமணம் செய்து கொண்டார். துங்குவின் இரண்டாவது மனைவியான மரியம் சோங்கின் (Meriam Chong) மரணத்திற்குப் பிறகு சரிபா ரோட்சியா துங்குவின் மூன்றாவது மனைவியானார். அதற்கு முன்னர் துங்கு, தம்முடைய இரண்டாவது மனைவியான வயலட் கோல்சன் (Violet Coulson) என்பவரை விவாகரத்து செய்தார்.

வயலட் கோல்சன் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். துங்கு இங்கிலாந்தில் படிக்கும் போது இருவருக்கும் இடையே நட்பு உருவானது. பின்னர், மரியம் சோங் மரணம் அடைந்து செய்தியை அறிந்து, வயலட் கோல்சன் சிங்கப்பூருக்கு வந்தார். அதன் பின்னர் இருவரின் திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இருவருக்கும் பிள்ளைகள் எதுவும் இல்லை.

பொது

தொகு

துங்குவிற்கும் சரிபா ரோட்சியாவுக்கும் பிள்ளைகள் இல்லை. அதனால்மரியம் சோங்கின் பிள்ளைகளைத் தம் பிள்ளைகளாக வளர்த்தார். பின்னர் அவர்கள் சுலைமான், மரியம், பரிதா எனும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர்.

மலேசியாவின் கொந்தளிப்பான காலக் கட்டங்களில் தம் கணவருக்கு அரசியல் ஆதரவைத் திரட்டுவதில் சரிபா ரோட்சியா முக்கிய பங்கு வகித்தார்.

இறப்பு

தொகு

சரிபா ரோட்சியா, நிமோனியா காரணமாக பினாங்கில் 12 மார்ச் 2000 அன்று தம் 80 வயதில் காலமானார்; மற்றும் கெடா, லங்கார் நகரத்தில் உள்ள கெடா அரச கல்லறையில் அவருடைய கணவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Macam-macam Ada: Memo untuk Pak Lah (Bahagian Satu), by Hussien Alattas, published by JB News Media Network, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-40962-8-3, pg 254
  2. "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1970" (PDF).
  3. "Anugerah Sultan kepada Tengku". Berita Harian: pp. 9. 26 June 1964. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/beritaharian19640626-1.2.64. 

வெளி இணைப்புகள்

தொகு
  • Asiaweek.com, 24 March 2000.
  • Putera Negara; 1987, Firma Publishing, Aziz Zarina Ahmad.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிபா_ரோட்சியா_பாரக்பா&oldid=4172541" இலிருந்து மீள்விக்கப்பட்டது