சல்ஹூதுவோனுவோ குரூசு
சல்ஹூதுவோனுவோ குரூசு (Salhoutuonuo Kruse) (பிறப்பு 1967) என்பவர் நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2023-ல், இவர் கேகானி ஜாகலுவுடன் இணைந்து நாகாலாந்திலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார்.[2][3]
சல்ஹூதுவோனுவோ குரூசு Salhoutuonuo Kruse | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் நாகலாந்து | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 2023 | |
முன்னையவர் | கெனிஜாகோ நக்ரோ |
தொகுதி | மேற்கு அன்கமி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1967 |
அரசியல் கட்சி | தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி |
துணைவர்(கள்) | கெவிசேகோ குரூசை (தி. 1986; இற. 2021) |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | கோகிமா |
கல்வி | மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி |
முன்னாள் கல்லூரி | கோகிமா கல்லூரி (இளங்கலை) |
குரூசு மேற்கு அங்கமி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்பு அங்கமி பெண்கள் அமைப்பின் தலைவராக பணியாற்றினார்.[4]
இளமை
தொகுகுரூசு கிருபேமாவைச் சேர்ந்த அங்கமி நாகா குடும்பத்தில் 1967-ல் பிறந்தார். இவர் கோகிமாவில் உள்ள மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் கோகிமா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
தொழில்
தொகு2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் மேற்கு அங்கமி சட்டமன்றத் தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளராக குரூசு போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான கெனிசாகோ நக்ரோவை தோற்கடித்தார். இதன் மூலம் குருசு கேகானி ஜாகலுவுடன் இணைந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையினைப் பெறுகின்றார்.[5]
இவரது மறைந்த கணவர் கெவிசெகோ குரூசு முன்பு 2018 நாகாலாந்து சட்டப் பேரவைத் தேர்தலில் இதே தொகுதி மற்றும் கட்சியில் போட்டியிட்டார். ஆனால் நாகா மக்கள் முன்னணி வேட்பாளரான கெனிஜாகோ நக்ரோவிடம் தோல்வியடைந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசல்ஹூதுவோனுவோ குரூசு, கெவிசேகோ குரூசை மணந்தார். இவர்கள் 2 அக்டோபர் 1986-ல் திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றனர். பின்னர் கெவிசேகோ குருசு கோவிட்-19 பெருந்தொற்றால் 4 சூன் 2021 அன்று 60 வயதில் இறந்தார்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Salhoutuonuo Kruse (NDPP) : Constituency- WESTERN ANGAMI
- ↑ Dhar, Aniruddha (2 March 2023). "Nagaland scripts history in assembly election, elects 2 women candidates for first time". https://www.hindustantimes.com/india-news/nagaland-scripts-history-in-assembly-poll-elects-2-women-mlas-salhoutuonuo-kruse-hekani-jakhalu-for-first-time-101677742088284.html.
- ↑ "Nagaland Creates History By Electing Two Women Candidates In Assembly Elections". 2 March 2023. https://www.guwahatiplus.com/northeast/nagaland-creates-history-by-electing-two-women-candidates-in-assembly-elections.
- ↑ Kalita, Kangkan (3 March 2023). "Nagaland gets its 1st women MLAs". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
- ↑ "Hekhani Jakhalu, Salhoutuonuo Kruse become first women MLAs in Nagaland assembly". Deccan Herald. 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
- ↑ "NDPP holds memorial service in memory of K Kruse". Eastern Mirror. 5 June 2022. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
- ↑ "Various Organisations Mourn Death Of Kruse". Nagaland Page. 4 June 2021. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.