கேகானி ஜாகலு

கேகானி ஜாகலு கென்சு (Hekani Jakhalu) என்பவர்[1] நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சமூக தொழில்முனைவோரும் ஆவார். ஜாகலு நாகாலாந்தின் இளைஞர்கள் வணிக வாய்ப்புகளைத் தொடர உதவுவதற்காக யூத்நெட் நாகாலாந்து என்ற அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு இந்திய அரசு 2018-ல் நாரி சக்தி விருது வழங்கியது. 2023ஆம் ஆண்டில், ஜாகலு சல்ஹவுடுவோனுவோ குரூசுடன் இணைந்து நாகாலாந்திலிருந்து நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையினைப் சல்ஹௌதுயோனுவோ குரூசுடன் பகிர்ந்துகொள்கிறார்.[2]

கேகானி ஜாகலு
நாரி சக்தி விருது பெரும் கேகானி ஜாகலு (2018)
பிறப்புகேகானி ஜாகலு
1976
தொல்லுவி, திமாப்பூர், நாகலாந்து
கல்விபிசப் காட்டன் பெண்கள் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிஅரசியல்வாதி • சமூக தொழில்முனைவோர்
வாழ்க்கைத்
துணை
கெவிலிசியோ கென்சி
பிள்ளைகள்2
விருதுகள்நாரி சக்தி விருது

இளமை

தொகு

கேகானி ஜகாலு நாகாலாந்தின் திமாப்பூரில் பிறந்தார். இவர் பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார். தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3] பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பைப் தொடர்ந்தார். சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]

அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு, தில்லி திரும்பிய ஜாகலு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். ஜாகலு நிறுவனம் ஒன்றில் பங்குதாரராகச் சேர்ந்தார். ஆனால் நாகாலாந்திலிருந்து தில்லிக்குக் குடிபெயர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை நேரடியாகப் பார்த்த ஜாகலு, அரசு சாரா நிறுவனத்தை அமைப்பதற்காக கோகிமாவுக்கு (நாகாலாந்தின் தலைநகர்) செல்ல 2006-ல் முடிவு செய்தார். நாகாலாந்து இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட யூத்நெட் எனப்படும் அரசு சார்பற்ற அமைப்பினை நிறுவினார்.[1] 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, யூத்நெட்டில் 30 பணியாளர்கள் இருந்தனர். இந்த அமைப்பு 23,500 பேருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.[1] இது தொழில்முனைவோர் தங்கள் யோசனைகளைத் தொடர உதவுவதையும், அவர்களின் கைவினைப் பொருட்களை விற்கும் "நாகாலாந்தில் உற்பத்தி செய்யப்பட்டது" எனும் மையத்தை கோகிமாவில் அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.[4][5] இரண்டு வருடங்கள் இயங்கிய பிறகு, இம்மையம்[5] 2020-ல் இணைய வணிகத் தளத்தைத் திறந்தது.

ஜாகலுவின் சமூகப் பணிக்கான அங்கீகாரமாக, 2018ஆம் ஆண்டில் இவருக்குப் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து கௌரவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்தான்.[6]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு

2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் திம்மாபூர் 3 சட்டமன்றத் தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் நாகலாந்து சட்டமன்றத்திற்கு செல்லும் முதல் பெண்மணி இவர் என்ற பெருமையினை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையினைப் பெறுகின்றார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேகானி_ஜாகலு&oldid=3742851" இலிருந்து மீள்விக்கப்பட்டது