சாகாபாத்து மக்களவைத் தொகுதி

சாகாபாத்து மக்களவைத் தொகுதி (Shahabad, Bihar Lok Sabha constituency-முன்பு பட்னா--சாகாபத்) என்பது இந்தியாவில் பீகாரில் செயல்பாட்டில் இல்லாத ஒரு மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இது சாகாபாத்து மாவட்டத்தின் (போஜ்பூர்) மற்றும் பட்னா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இரண்டாவது மக்களவை முதல் ஐந்தாவது மக்களவை வரை செயல்பட்ட இத்தொகுதி 1977இல் அர்ரா மக்களவைத் தொகுதியாக மறுபெயரிடப்பட்டது.

சாகாபாத்து மக்களவைத் தொகுதி
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பிகார்
சட்டமன்றத் தொகுதிகள்
நிறுவப்பட்டது1952 (பட்னா மக்களவைத் தொகுதி)
1957 (சாகாபாத்து மக்களவைத் தொகுதி)
நீக்கப்பட்டது1977
ஒதுக்கீடுபொது

சட்டப்பேரவை பிரிவுகள்

தொகு

1951 முதல் 1961 வரை, பட்னா-சாகாபாத் மக்களவைத் தொகுதி (1957-இல் சாகாபாத்தாக மறுபெயரிடப்பட்டது) பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது. பட்னா மாவட்டத்தில் உள்ள தானாப்பூர் துணைப்பிரிவில் உள்ள பிக்ரம், பிக்தா மற்றும் பாலிகஞ்ச் காவல் நிலையங்கள்-பர்காரா, ஆரா முபாசில், சகார், சந்தேசு, ஆரா நகரம் மற்றும் சாகாபாத்தின் சதார் (சாகாபாத்தின் அர்ராக் துணைப்பிரிவு) அரா நவாடா காவல் நிலையப் பகுதி.[1]

1961 முதல் 1976 வரை, சாகாபாத்து மக்களவைத் தொகுதியில் (1976இல் ஆரா என்று மறுபெயரிடப்பட்டது) 6 பீகார் சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. பட்னா மாவட்டத்திலிருந்து பிக்ரம் மற்றும் பாலிகஞ்சு மற்றும் போஜ்பூர் மாவட்டத்திலிருந்து சந்தேசு, ஆரா, ஆரா முபாசில் மற்றும் சகார் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.[2]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு

பட்னா-சாகாபாத்து மக்களவைத் தொகுதியாக 1952 முதல் 1957 வரை முதல் மக்களவையில் செயல்பட்டது.

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 பாலி ராம் பகத் இந்திய தேசிய காங்கிரசு

1957-1961 வரை

தொகு

2 முதல் 5 வது மக்களவை

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1957 பாலி ராம் பகத் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967
1971

1977-தற்போது

தொகு

6வது மக்களவை முதல் உறுப்பினர்களுக்கான ஆரா மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "DPACO (1951) - Archive Delimitation Orders - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 12 October 2022.
  2. "DPACO (1961) - Archive Delimitation Orders - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 12 October 2022.

வெளி இணைப்புகள்

தொகு